1915 சனாக்கலே பாலம்
1915 சனாக்கலே பாலம் (1915 Çanakkale Bridge, துருக்கியம்: 1915 Çanakkale Köprüsü), அல்லது தார்தனெல்லி பாலம் (Dardanelles Bridge, துருக்கியம்: Çanakkale Boğaz Köprüsü), என்பது வடமேற்குத் துருக்கியில் சனாக்கலே மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு சாலைத் தொங்கு பாலம் ஆகும். இப்பாலம் மர்மாரா கடலுக்குத் தெற்கே கிட்டத்தட்ட 10 கிமீ (6.2 மைல்) தொலைவில் உள்ள தார்தனெல்லி நீரிணையைக் கடந்து செல்கிறது.[1]
1915 சனாக்கலே பாலம் Çanakkale Bridge Dardanelles Bridge | |
---|---|
2021 சனவரியில் பாலம் கட்டுமானம் | |
அதிகாரப் பூர்வ பெயர் | 1915 சனாக்கலே கோப்ரூசூ |
போக்குவரத்து | 6 வழித்தடங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் பராமரிப்பு நடைபாதைகள் உள்ளன |
தாண்டுவது | தார்தனெல்லி நீரிணை |
இடம் | கனக்கலே மாகாணம், துருக்கி |
வடிவமைப்பு | தொங்கு பாலம் |
மொத்த நீளம் | 4,608 மீ (15,118 அடி) |
அகலம் | 45.06 மீ (148 அடி) |
உயரம் | 334 மீ (1,096 அடி) |
அதிகூடிய அகல்வு | 2,023 மீ (6,637 அடி) |
Clearance below | 70 மீ (230 அடி) |
கட்டுமானம் தொடங்கிய தேதி | மார்ச் 2017[1] |
கட்டுமானம் முடிந்த தேதி | 26 பெப்ரவரி 2022 |
திறப்பு நாள் | 18 மார்ச்சு 2022 |
சுங்கத் தீர்வை | ₺200[2] |
அமைவு | 40°20′24″N 26°38′10″E / 40.34000°N 26.63611°E |
சனாக்கலே பாலம் 321-கிலோமீட்டர் நீள (199 மைல்) US$2.8 பில்லியன் செலவில் திட்டமிடப்பட்டுள்ள கினாலி-பலிக்கேசிர் விரைவுச் சாலையின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு திரேசில் உள்ள O-3 மற்றும் O-7 பெருஞ்சாலைகளை அனத்தோலியாவில் உள்ள O-5 பெருஞ்சாலையுடன் இணைக்கிறது. 2,023 மீ (6,637 அடி) நீளம் கொண்ட இந்தப் பாலம் சப்பானில் உள்ள அகாசி கைக்ஜோ பாலத்தைவிட 32 மீ (105 அடி) நீண்டிருப்பதால், உலகின் மிக நீளமான தொங்கு பாலமாக உள்ளது.[3]
இப்பாலத்தை 2022 மார்ச் 18 இல் துருக்கிய அரசுத்தலைவர் ரசிப் தைய்யிப் எர்டோகன் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.[4] இந்தப் பாலம் தார்தனெல்சு நீரிணை மீதுள்ள முதலாவது நிலையான கடக்கும் பாலமும்,[5] துருக்கிய நீரிணைகளின் குறுக்கே உள்ள ஆறாவது பாலமுமாகு. ஏனையவை பொசுபோரசு நீரிணை மீதுள்ள மூன்று பாலங்களும், அதன் கீழ் உள்ள இரண்டு சுரங்கங்களும் ஆகும்.[6]
வரலாறு
தொகு2020 மே 16 அன்று, ஐரோப்பியக் கரையில் உள்ள கலிபோலி பக்கத்தில் இரண்டாவது கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.[7] 2021 நவம்பர் 13 இற்குள் அனைத்து தட்டுகளும் அமைக்கப்பட்டன.[4] 200 லீரா (€12.20) கட்டணத்தில் 2022 மார்ச் 18 இல் சுங்கச்சாவடிப் பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.[8]
குறியீடுகள்
தொகுசில குறியீடுகள் இப்பாலத்துடன் தொடர்புடையவை. பெயரில் உள்ள எண் 1915 என்பது, முக்கியமான தாங்குபால வடத்தின் குறுக்குவெட்டுப் புள்ளியின் உயரம் (318 மீ),[9] தொடக்க நாள் (18 மார்ச்) ஆகியவை கலிப்பொலி போரில் கடற்படை நடவடிக்கைகளின் போது 1915 மார்ச் 18 அன்று உதுமானியக் கடற்படையின் வெற்றியுடன் தொடர்புடையது. பாலத்தின் நீளம், 2023 மீட்டர், 2023 இல் துருக்கியக் குடியரசின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கிறது.[3]
காட்சியகம்
தொகு-
மேற்குக் கோபுரம், மார்ச் 2020
-
ஐரோப்பியப் பகுதியில் இருந்து ஆசியப் பகுதிக்கான பார்வை, மார்ச் 2020
-
2021 இல் பாலம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Canakkale 1915 Bridge". Road Traffic Technology இம் மூலத்தில் இருந்து 6 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180106174100/http://www.roadtraffic-technology.com/projects/canakkale-1915-bridge/.
- ↑ "Cumhurbaşkanı Erdoğan, 1915 Çanakkale Köprüsü'nün geçiş ücretini açıkladı". ntv.com.tr. NTV. 18 March 2022. Archived from the original on 18 March 2022. பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.
- ↑ 3.0 3.1 "Groundbreaking ceremony for bridge over Dardanelles to take place on March 18". Hürriyet Daily News. 17 March 2017 இம் மூலத்தில் இருந்து 18 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170318134152/http://www.hurriyetdailynews.com/groundbreaking-ceremony-for-bridge-over-dardanelles-to-take-place-on-march-18.aspx?pageID=238&nID=110948&NewsCatID=345.
- ↑ 4.0 4.1 "Turkey opens record-breaking bridge between Europe and Asia". CNN. Archived from the original on 20 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-19.
- ↑ "Turkey inaugurates 1st bridge over Dardanelles Strait-Xinhua". www.xinhuanet.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
- ↑ "Bosphorus Strait | All About Turkey". www.allaboutturkey.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
- ↑ "Last steel block placed in Çanakkale 1915 Bridge". hurriyetdailynews.com. 16 May 2020. Archived from the original on 20 October 2020. பார்க்கப்பட்ட நாள் 13 July 2020.
- ↑ "Turkey builds massive bridge linking Europe and Asia". AP NEWS. 2022-03-18. Archived from the original on 18 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
- ↑ "1915 Çanakkale Köprüsü'nün 318 metrelik çelik kuleleri tamamlandı". A Haber. Archived from the original on 24 May 2021. பார்க்கப்பட்ட நாள் 24 May 2021.
வெளி இணைப்புகள்
தொகு- Official website
- Çanakkale 1915 Bridge பரணிடப்பட்டது 4 நவம்பர் 2020 at the வந்தவழி இயந்திரம் at Daelim web site