2012 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

14வது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்


இந்தியக் குடியரசின் பதின்மூன்றாம் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க பதினான்காவது குடியரசுத் தலைவர் தேர்தல் 2012 சூலை 19, 2012இல் நடைபெற்றது. அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலின் பதவிக்காலம் சூலை 2012ல் முடிவடைய இருந்ததை அடுத்து அத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012

← 2007 19 ஜூலை 2012 2017 →
 
வேட்பாளர் பிரணாப் முகர்ஜி பி. ஏ. சங்மா
கட்சி காங்கிரசு தேமக
சொந்த மாநிலம் மேற்கு வங்கம் மேகாலயா

தேர்வு வாக்குகள்
713,763 315,987
வென்ற மாநிலங்கள் 20+
டில்லி+
புதுவை
8
விழுக்காடு 69.3% 30.7%
மாற்றம் 3.5% Increase 3.5%

மாநிலங்கள் வாரியாக
வெற்றியாளர்கள் . பிரணாப் முகர்ஜி நீலம், சங்மா இளஞ்சிவப்பு.

முந்தைய குடியரசுத் தலைவர்

பிரதீபா பாட்டீல்
காங்கிரசு

குடியரசுத் தலைவர் -தெரிவு

பிரணாப் முகர்ஜி
காங்கிரசு

குடியரசுத் தலைவர் தேர்தல்

தொகு

குடியரசுத் தலைவர் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. குடியரசுத் தலைவருக்கான மொத்தவாக்குகள் இந்திய வாக்காளர் குழுவின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இத்தேர்தலுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெறுவர்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக எதிர்பார்க்கப்பட்டவர்கள்

தொகு

கருத்துக்கள்/நிகழ்வுகள்

தொகு
  • மே 5 - குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்து அதிமுக இன்னும் முடிவு எடுக்கவில்லை [5] என்றும் அதுகுறித்து யாரும் தங்களிம் பேசவில்லை என்றும் தில்லி செல்லும் போது செய்தியாளர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா தெரிவித்தார் [6]. பி. ஏ. சங்மா மே 15 அன்று செயலலிதாவை சந்தித்து தமக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரியதை ஏற்று அவரை ஆதரித்து மே 18ல் அறிக்கை வெளியிட்டார்.[7].
  • குடியரசுத் தலைவராக பழங்குடியினத்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிஏ சங்கமா கருத்து தெரிவித்தார் [8].
  • பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்தினால் திமுக ஆதரிக்கும் என்று கருணாநிதி தெரிவித்தார்.[2].

வெற்றி பெற்றவர்

தொகு

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இந்தியக் குடியரசின் 13வது குடியரசுத் தலைவர் ஆனார்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Pranab emerges as front runner for President". த இந்து. 3 மே 2012. http://www.thehindu.com/news/national/article3381046.ece. 
  2. 2.0 2.1 "குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபை ஆதரிப்பதில் தயக்கமில்லை: கருணாநிதி". தினமணி (சென்னை). 5 மே 2012. http://dinamani.com/edition/story.aspx?artid=593508&SectionID=129&MainSectionID=129. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "கலாமை ஆதரிப்பதில் தயக்கமில்லை: பாரதிய ஜனதா கட்சி". தினமணி (புது தில்லி). 1 மே 2012. http://www.dinamani.com/edition/print.aspx?artid=590797. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "PA Sangma appeals to parties to support a tribal for President". டைம்ஸ் ஆப் இந்தியா (புது தில்லி). 18 மே 2012. http://timesofindia.indiatimes.com/india/PA-Sangma-appeals-to-parties-to-support-a-tribal-for-President/articleshow/13222263.cms. 
  5. "Nobody has approached us on Presidential poll: Jayalalithaa". த இந்து (சென்னை). 5 மே 2012. http://www.thehindu.com/news/national/article3386930.ece. 
  6. "குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து யாரும் பேசவில்லை : ஜெயலலிதா". தினமணி (தில்லி). 5 மே 2012. http://dinamani.com/edition/story.aspx?artid=593111&SectionID=164&MainSectionID=164. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "குடியரசுத் தலைவர் தேர்தல்: சங்மாவுக்கு நவீன், ஜெயலலிதா ஆதரவு". தினமணி (சென்னை). 18 மே 2012. http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=599748&SectionID=130&MainSectionID=130. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "குடியரசுத் தலைவராக பழங்குடி இனத்தவருக்கு வாய்ப்பு வேண்டும்: சங்மா". தினமணி (தில்லி). 5 மே 2012. http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=592891&SectionID=164&MainSectionID=164. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

தொகு