2013 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
2013 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2013 Women's Cricket World Cup) பத்தாவது மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும். ஒவ்வொரு அணியும் 50 பந்துப் பரிமாற்றங்களுடன் விளையாடும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட முறையில் விளையாடப்படுகிறது. சனவரி 31, 2013 முதல் பெப்ரவரி 18 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் நடத்தப்பெறும் இப்போட்டிகளை இந்தியா மூன்றாவது முறையாக ஏற்று நடத்துகிறது. இதற்கு முன்னதாக 1978இலும் 1997இலும் இந்தியாவில் இப்போட்டிகள் நடந்தேறியுள்ளன.[1][2]
![]() 2013 மகளிர் உலகக்கிண்ணத்தின் சின்னம் | |
நாட்கள் | 31 சனவரி – 18 பெப்ரவரி |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலை மற்றும் வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | ![]() |
வாகையாளர் | ![]() |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 25 |
தொடர் நாயகன் | ![]() |
அதிக ஓட்டங்கள் | ![]() |
அதிக வீழ்த்தல்கள் | ![]() |
ஆஸ்திரேலிய மகளிர் துடுப்பாட்ட அணி இந்தக் கிண்ணத்தை ஆறாவது முறையாக வென்றது; இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 114 ஓட்டங்கள் வேறுபாட்டில் தோற்கடித்தது.[3][4]
பங்கேற்கும் அணிகள் தொகு
இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் எட்டு நாட்டு மகளிர் அணிகள்:
போட்டித்தொடர் வடிவம் தொகு
எட்டு துடுப்பாட்ட அணிகளும் நான்கு அணிகள் கொண்ட இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தனது குழுவிலுள்ள அணிகளுடன் விளையாடிகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல்நிலையில் உள்ள மூன்று அணிகள் சூப்பர் சிக்ஸ் எனப்படும் அடுத்த நிலைப் போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஆட வேண்டும். இருப்பினும் தங்கள் குழுவில் இல்லாத மற்ற மூன்று அணிகளுடன் மட்டுமே ஆடுகின்றன. தங்கள் குழுவில் உள்ள அணிகளுடன் ஏற்கெனவே விளையாடிப் பெற்றிருந்த புள்ளிகளை தக்க வைத்துக் கொள்கின்றன. சூப்பர் சிக்சில் முதலாவதாக வரும் இரு அணிகள் இறுதி ஆட்டத்தில் விளையாடுகின்றன.
விளையாட்டரங்கங்கள் தொகு
விளையாட்டரங்கம் | நகரம் | குறிப்பு |
---|---|---|
பிராபோர்ன் விளையாட்டரங்கம் | மும்பை | திறப்புவிழா, குழு ஏ, சூப்பர் சிக்ஸ் & இறுதியாட்டம் |
பாந்திரா குர்லா வளாகம் | மும்பை | |
நடுத்தர வருவாய் குழு சங்க மைதானம் | மும்பை | |
பராபதி விளையாட்டரங்கம் | கட்டாக் | குழு பி ஆட்டங்கள் |
தானேசுவர் ரத் பொறியியல் மேலாண்மைக் கல்விக் கழக துடுப்பாட்ட மைதானம் | கட்டாக் | குழு B ஆட்டங்கள் |
முடிவுகள் தொகு
குழு போட்டிகள் தொகு
குழு ஏ தொகு
அணி | வி | வெ | ச | தோ | முஇ | நிஓவீ | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|---|
இங்கிலாந்து | 3 | 2 | 0 | 1 | 0 | +0.641 | 4 |
இலங்கை | 3 | 2 | 0 | 1 | 0 | -0.433 | 4 |
மேற்கிந்தியத் தீவுகள் | 3 | 1 | 0 | 2 | 0 | +0.276 | 2 |
இந்தியா | 3 | 1 | 0 | 2 | 0 | +0.233 | 2 |
குழு பி தொகு
அணி | வி | வெ | ச | தோ | முஇ | நிஓவீ | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|---|
ஆத்திரேலியா | 3 | 3 | 0 | 0 | 0 | +1.099 | 6 |
நியூசிலாந்து | 3 | 2 | 0 | 1 | 0 | +1.422 | 4 |
தென்னாப்பிரிக்கா | 3 | 1 | 0 | 2 | 0 | -0.291 | 2 |
பாக்கித்தான் | 3 | 0 | 0 | 3 | 0 | -1.986 | 0 |
சூப்பர் சிக்ஸ் நிலைப் போட்டிகள் தொகு
முதலிரண்டு அணிகள் மட்டுமே இறுதி ஆட்டத்தில் விளையாடத் தகுதி பெறும்.
அணி | வி | வெ | ச | தோ | முஇ | நிஓவி | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|---|
மேற்கிந்தியத் தீவுகள் | 5 | 4 | 0 | 1 | 0 | +0.941 | 8 |
ஆத்திரேலியா | 5 | 4 | 0 | 1 | 0 | +0.714 | 8 |
இங்கிலாந்து | 5 | 3 | 0 | 2 | 0 | +1.003 | 6 |
நியூசிலாந்து | 5 | 2 | 0 | 3 | 0 | +0.694 | 4 |
தென்னாப்பிரிக்கா | 5 | 1 | 0 | 4 | 0 | -1.131 | 2 |
இலங்கை | 5 | 1 | 0 | 4 | 0 | -2.477 | 2 |
குழு அட்டவணையில் வண்ணங்களுக்கான விளக்கம் |
---|
முதலிரண்டு அணிகளும் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும் |
3வது 4வதான அணிகள் மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் விளையாடும் |
கடைசி இரண்டு அணிகளும் ஐந்தாமிடத்திற்கான ஆட்டத்தில் விளையாடும். |
தரவரிசைக்கான ஆட்டங்கள் தொகு
ஏழாம் இடத்திற்கான ஆட்டம் தொகு
ஐந்தாம் இடத்திற்கான ஆட்டம் தொகு
மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் தொகு
இறுதி ஆட்டம் தொகு
இறுதி தரநிலைகள் தொகு
தரநிலை | அணி | வெற்றி-தோல்வி |
---|---|---|
1st | ஆத்திரேலியா | 6–1 |
2nd | மேற்கிந்தியத் தீவுகள் | 4–3 |
3வது | இங்கிலாந்து | 5–2 |
4வது | நியூசிலாந்து | 3–4 |
5வது | இலங்கை | 3–4 |
6வது | தென்னாப்பிரிக்கா | 2–5 |
7வது | இந்தியா | 2–2 |
8வது | பாக்கித்தான் | 0–4 |
அட்டவணையில் வண்ணமிட்டதற்கான விளக்கம் |
---|
முதல் நான்கு அணிகள் 2017 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் பங்கேற்க தகுதி பெறுகின்றன. |
சான்றுகோள்கள் தொகு
- ↑ "India to host 2013 Women’s Cricket World Cup" இம் மூலத்தில் இருந்து 19 பிப்ரவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110219041348/http://www.cricketworldcup2015.in/. பார்த்த நாள்: 28 March 2011.
- ↑ "'Women's Cricket World' book launch". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 February 2011 இம் மூலத்தில் இருந்து 2012-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405212520/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-19/delhi/28614608_1_cricket-writers-sunil-yash-kalra-anjum-chopra. பார்த்த நாள்: 28 March 2011.
- ↑ "WWC 2013: Australia are champions of the world". Wisden India இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303233545/http://www.wisdenindia.com/match-report/wwc-australia-champions-world/51218. பார்த்த நாள்: 17 February 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-04-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130408002616/http://www.cricketcountry.com/cricket-articles/ICC-Women-s-World-Cup-2013-Australia-beat-West-Indies-by-114-runs-in-final-to-win-tournament/23181.