2021 நாகாலாந்து கொலைகள்
4 திசம்பர் 2021 அன்று, 21 பாராசூட் சிறப்புப் படைகளின் ஒரு பிரிவும்,[1] இந்தியாவின் சிறப்புப் படைகளும், இந்திய ஒன்றியம் நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தின் ஓட்டிங் கிராமத்திற்கு அருகே தவறுதலாக ஆறு அப்பாவி பொதுமக்களைக் கொன்றது. இதன் எதிரொலியாக அடுத்தடுத்து ஏற்பட்ட வன்முறை போராட்டங்களில் ஒரு இராணு வீரர் கோல்லப்பட மேலும் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்பப் பெறவேண்டும் என்று பலர் அழைப்பு விடுத்தனர். இந்தக் கொலைகள் பரவலாகக் கண்டிக்கப்பட்டன.
2021 நாகாலாந்து கொலைகள் | |||
---|---|---|---|
Part of நாகாலாந்தின் இனப்போராட்டம் | |||
கோகிமாவில் மெழுகுவர்த்தி ஏந்தி நிகழ்த்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சி | |||
தேதி | 4–5 திசம்பர் 2021 | ||
அமைவிடம் | திரு-ஓட்டிங் சாலை, மோன் மாவட்டம், நாகாலாந்து, இந்தியா | ||
காரணம் | தவறான இலக்கு | ||
முறைகள் | திடீர்தாக்குதல், கலவரம் | ||
தரப்புகள் | |||
| |||
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள் | |||
|
பின்னணி
தொகுநாகாலாந்து நீண்ட காலமாக இனப்போராட்ட அரசியலால் சூழப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாக பரவியுள்ளது. மேலும் ஆயுதப்படைகளும் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கம் அப்பகுதியில் உள்ள வளங்களை கொள்ளையடிப்பதாகவும், அங்கு வாழும் மக்களின் வாழ்வை மேம்படுத்த ஒன்றும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.[2] 1958 ஆம் ஆண்டில், இந்திய நாடாளுமன்றம் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை இயற்றியது. இது ஆயுதப்படைகளுக்கு கணிசமான அதிகாரங்களை வழங்கியது. இந்தச் சட்டத்தை கேடயமாக பயன்படுத்தி இந்திய இராணுவம் குடிமைச் சமூகத்தில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், கற்பழிப்பு உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.[2]
நிகழ்வுகள்
தொகுதிடீர்தாக்குதல்
தொகு4 திசம்பர் 2021 அன்று மாலை இ.சீ.நே சுமார் 4:00-5:00 மணிக்கு இந்திய இராணுவத்தின் 21 பாரா சிறப்புப் படைகளின் [1] ஒரு பிரிவு, திருவிலுள்ள நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து ஓட்டிங் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களை ஏற்றிக் கொண்டு திறந்த-ஹூட் பிக்கப் டிரக்கில் திரும்பிக் கொண்டிருந்த வாகனத்தை பதுங்கியிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கியது.[3][4] இத் தாக்குதலில் ஆறு அப்பாவி தொழிலாளர்கள் இறந்தனர், இருவர் பலத்த காயமடைந்தனர்.[4]
உளவுத்துறையின் தவறான தகவலால் இது நடந்ததாக இந்திய ராணுவம் கூறியது. அந்த வாகனத்தில் நாகா போராளிகள் இருந்ததாக அவர்கள் சந்தேகித்தனர்.[4] வாகனத்தை நிறுத்துமாறு கூறப்பட்டதற்கு செவிசாய்க்காததால் தான் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக படைத்துறையினர் குற்றம் சாட்டினர்.[5] ஆரம்பகட்ட விசாரணையில் நாகாலாந்து காவல்துறை இந்த இரண்டு கூற்றுகளையும் நிராகரித்தது.[6]
உடல்கள் மீட்பு
தொகுஇறந்த உடல்களை தார்ப்பாய்களில் சுற்றி எடுத்துக் கொண்டு படையினர் செல்ல முயன்றபோது, நிகழ்விடத்துக்கு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதையடுத்து, மீண்டும் வன்முறை வெடித்தது.[5][7] இறந்த உடல்களைப் படையினர் தங்கள் முகாம்களுக்கு கொண்டு செல்ல முயன்றதாகவும், உடல்களை ஒப்படைக்க மறுத்து மோதலுக்கு வழிவகுத்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.[6][7]
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், இராணுவ வாகனங்களின் வட்டகைகள் பஞ்சராக்கப்பட்டு, மூன்று வாகனங்கள் எரிக்கப்பட்டன, ராணுவ வீரர்களை அரிவாளால் தாக்கியதில், ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்; இதற்கு பதிலடியாக இராணுவம் துப்பாக்கியால் சுட்டதில், ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[3][7][8] 12 பொதுமக்கள் படுகாயமடைந்தனர், எட்டு பேர் சிறிய காயங்களுக்கு ஆளாகினர்.[7]
இந்திய இராணுவமானது வேறுவழியின்றி நிர்பந்தத்தின் காரணத்தினிலாயே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியது. பொதுமக்களின் தாக்குதலினால் ஒரு காலாட்படை வீரர் இறந்து மற்றவர்கள் காயமடைந்தனர் என்றது.[9][10] கிராமவாசிகள் அவர்களின் விளக்கத்தை நிராகரித்து, இராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டினர். பாரதிய ஜனதா கட்சியின் (நாகாலாந்து மாநிலத்திலும் இந்தியாவிலும் தற்போது ஆளும் கட்சி) மாவட்டப் பிரிவின் தலைவர் நியாவாங் கொன்யாக் குறிப்பிடுகையில், கட்சிக் கொடியுடன் தனது வாகனம் நின்றிருந்த நிலையிலும் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறினார்.[9] இந்திய இராணுவ வீரர்கள் தனது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்குப் பொறுப்பேற்றதாகவும், துப்பாக்கிச் சூட்டில் அவரது தோழர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் கொன்யாக் கூறினார்.[11]
போராட்டங்கள்
தொகு5 திசம்பர் 2021 அன்று நாகாலாந்து முழுவதும் பொது மக்களின் போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. மோன் டவுனில் உள்ள அசாம் ரைபிள்ஸ் ராணுவ முகாமை இருநூறுக்கும் மேற்பட்டோர் தாக்கி நாசப்படுத்தினர். இதில் மேலும் ஒரு குடிமகன் கொல்லப்பட்டார்.[5][10][12]
பின்விளைவு
தொகுஅடுத்த நாள், நாகாலாந்து அரசு மோன் மாவட்டத்தில் பொது மக்கள் கூடுவதையும், நடமாடுவதைக் கட்டுப்படுத்தவும் 144வது தடை உத்தரவை விதித்தது. அத்துடன் செல்பேசி இணையம் மற்றும் மொத்த குறுஞ்செய்தி சேவைகளையும் நிறுத்தியது.[5]
ஆறு பழங்குடியினப் பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு (ENPO) கோகிமாவுக்கு அருகில் கிசாமாவில் நடைபெறும் வருடாந்திர ஹார்ன்பில் திருவிழா கொண்டாட்டத்தில் இருந்து விலகியது.[5] திருவிழாவில் நாகா மக்கள் கருப்புக் கொடிகளை ஏற்றினர். அதே நேரத்தில் கொன்யாக்கள் தங்கள் கலாச்சாரக் குழு திருவிழாவில் கலந்துகொள்வதைத் தவிர்க்க முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து மற்ற நாகா கலாச்சாரக் குழுக்களுடன் விழா திசம்பர் 5 அன்று நடந்தது. அன்றைய தினம் மைதானத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.[13][14]
பின்னர் திசம்பர் 5 அன்று மாலை, கோஹிமா மக்கள் 30 நிமிடங்களுக்கு மின்சார நிறுத்தம் செய்து அப்பாவி பொதுமக்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.[13][14] அதே நாளில் கோஹிமா, திமாபூர் மற்றும் பிற நகரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி அணிவகுப்பு நடத்தப்பட்டது.[5] நாகா மாணவர் கூட்டமைப்பு சார்பில் 6 மணி நேர கடையடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.[15][16]
இந்த நிகழ்வு பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியது. ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்பப் பெறவேண்டும் என்று பலர் கோரியதுடன், நிகழ்வுக்கு பரவலாகக் கண்டனம் செய்யப்பட்டது.[17][18][19][20]
விசாரணை
தொகுதிசம்பர் 6 ஆம் தேதி, நாகாலாந்து காவல்துறை 21 பாரா சிறப்புப் படைக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்து, முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து.[15][21] ஒரு மாதத்தில் விசாரணையை முடிக்க சிறப்பு புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டது.[10] இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு கேட்பாணை அனுப்பியது.[15]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Nagaland killings: Full statement made by Home Minister Amit Shah in Parliament". The Indian Express (in ஆங்கிலம்). 6 December 2021.
- ↑ 2.0 2.1 Wouters, Jelle J. P. (2018). In the Shadows of Naga Insurgency: Tribes, State, and Violence in Northeast India. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-909776-0.
- ↑ 3.0 3.1 "Nagaland killings: rioting as Indian security forces shoot dozen civilians". The Guardian. 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
- ↑ 4.0 4.1 4.2 "At least 13 civilians shot dead by army in India's Nagaland state". Al Jazeera. 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Karmakar, Rahul; Peri, Dinakar (December 5, 2021). "Army operation in Nagaland goes awry, 15 civilians dead" – via www.thehindu.com.
- ↑ 6.0 6.1 "Nagaland Police rejects army's claim of credible intelligence behind Oting firing, says troops fired without establishing facts". thenortheasttoday.com. 2021-12-06. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Nagaland Civilian Killings: Police Report Also Hints at Cover-Up Attempt". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
- ↑ X, Samrat. "Ambush, mob fury, and a lawless law: A timeline of what happened in Nagaland on December 4". Newslaundry. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
- ↑ 9.0 9.1 Zaman, Rokibuz. "A Nagaland village mourns its dead: 'How can the army kill my innocent sons?'". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
- ↑ 10.0 10.1 10.2 "Nagaland civilian killings: What Amit Shah said in Parliament". The Times of India (in ஆங்கிலம்). 2021-12-06. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
- ↑ Saikia, Arunabh (5 December 2021). "BJP district chief in Nagaland alleges security forces fired at him 'despite party flag on car'". Scroll.in.
- ↑ Yasir, Sameer; Kumar, Hari (December 5, 2021). "Anger Spreads in Northeastern India After Security Forces Kill 14 Civilians". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
- ↑ 13.0 13.1 "Several civilians killed by security forces in Mon; High-level SIT t to investigate incident". The Morung Express. 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
- ↑ 14.0 14.1 "Nagaland killings: Lotha Hoho to abstain from Hornbill Festival". East Mojo. 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
- ↑ 15.0 15.1 15.2 "Nagaland killings spark fresh demand for AFSPA repeal, SIT report in a month: Key points". The Times of India (in ஆங்கிலம்). 2021-12-06. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
- ↑ Ambrocia, Medolenuo (2021-12-06). "Nagaland killings: 6-hour total shut down across Naga inhabited areas". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
- ↑ "Explained: Why Nagaland killings have rekindled debate on AFSPA". The Indian Express (in ஆங்கிலம்). 2021-12-07. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
- ↑ Mishra, Stuti (5 December 2021). "Nagaland: 13 civilians accidentally shot dead by Indian security forces". The Independent. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
- ↑ "NESO condemns Oting massacre, demands repeal of AFSPA". www.uniindia.com. 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
- ↑ "Amit Shah expresses anguish over Nagaland killings, conveys condolences to families". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 5 December 2021.
- ↑ Kanojia, Sonu (2021-12-06). "Nagaland Police lodged FIR against 21 Para Special Forces in the Nagaland Op Death". HW English (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-12-07. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.