2024 மேற்கு வங்க தொடருந்து விபத்து

கஞ்சன்சங்கா விரைவுவண்டி விபத்து (Kanchanjunga Express Accident) மேற்கு வங்கத்தின் [1] புது சல்பைகுரியில் சியால்டா செல்லும் கஞ்சன்சங்கா விரைவுவண்டி மீது காலை 15 மணியளவில் சரக்கு இரயில் மோதியதில்[2] 17.06.2024 ஆம் தேதியன்று குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்தனர்.[3][4]

மேற்கு வங்க தொடருந்து விபத்து
West Bengal train collision
Map
மோதலின் அமைவிடம்
2024 மேற்கு வங்க தொடருந்து விபத்து is located in இந்தியா
2024 மேற்கு வங்க தொடருந்து விபத்து
இந்தியாவின் வரைபடத்தில் விபத்து நிகழ்ந்த
விவரங்கள்
நாள்சூன் 17, 2024 (2024-06-17) am
சுமார் 8:55 இந்திய சீர் நேரம்
இடம்இரங்கபாணி இரயில் நிலையம் அருகில், டார்ச்சிலிங்கு மாவட்டம், மேற்கு வங்காளம்
ஆளுகூறுகள்26°40′N 88°23′E / 26.66°N 88.38°E / 26.66; 88.38
நாடுஇந்தியா
Operatorஇந்திய இரயில்வே
உரிமையாளர்இந்திய அரசு
Incident typeதடம் புரளல், மோதல்
காரணம்விசாரணையில்
தரவுகள்
தொடருந்துகள்2 இரயில்கள்
இறப்புகள்15
காயம்60

விபத்தில் சிக்கிய இரயில் அசாம் மாநிலம் சில்சார் நகரத்திலிருந்து மேற்குவங்கத்தின் சியால்டா நகரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் இரங்கபாணி இரயில் நிலையம் அருகில் விபத்து நடந்துள்ளது.[5] பின்னால் இருந்து சரக்கு இரயில் மோதியதில் கஞ்சன்சங்கா இரயிலின் 5 பெட்டிகள் வரை சேதமடைந்துள்ளன. சரக்கு இரயிலுக்கான சமிக்ஞையை சரியாக கவனிக்காமல் சரக்கு இரயில் முன்னேறியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காலம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.[6]

பாதிக்கப்பட்டவர்கள்

தொகு

இந்த மோதலில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சரக்கு ரயிலின் பொறுப்பு ஓட்டுநர்கள் மற்றும் கஞ்சன்சங்கா விரைவு இரயில் மேலாளர் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.[7][8] காயமடைந்தவர்கள் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றனர்.

பின்விளைவுகள்

தொகு

இரயில்வே மந்திரி அசுவினி வைசுணவ் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார்.[9] விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலாம் பத்து இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என இரயில்வே அமைச்சகம் அறிவித்தது. தீவிர காயமடைந்தவர்களுக்கு 250000 ரூபாயும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கை கூறியது.[10] இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இவ்விபத்தில் இறந்தவர்களுக்கு ₹2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ₹50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக அறிவித்தார்.[11] திரிபுராவில் மாநிலப் து பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாகா அறிவித்தார்.

விபத்தைத் தொடர்ந்து 19 இரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 22 இரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.[12] அதே நாளில் மாலையில் கவுகாத்தி நோக்கிய இரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. மற்ற பாதைகளில் சூன்மாதம் 18 ஆம் தேதியன்று காலை வழக்கம் போல இரயில்கள் ஓடின.[13][14]

மேற்கோள்கள்

தொகு
  1. "9 Dead, 25 Injured After Goods Train Hits Kanchanjunga Express In Bengal". என்டிடிவி. 17 June 2024. https://www.ndtv.com/india-news/kanchanjunga-express-collides-with-goods-train-in-west-bengals-darjeeling-rescue-on-5906662. 
  2. "9 dead as goods train rams Kanchanjunga Express in Bengal, coach flung into air". இந்தியா டுடே. 17 June 2024. https://www.indiatoday.in/india/story/kolkata-bound-kanchanjunga-express-hit-goods-train-bengals-siliguri-no-reports-casualties-2554068-2024-06-17. 
  3. "9 dead, 25 injured as Kanchanjunga Express collides with goods train in Bengal, rescue ops on", The Indian Express (in ஆங்கிலம்), 2024-06-17, பார்க்கப்பட்ட நாள் 2024-06-17
  4. Kumar, Arun (2024-06-17), "மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து", Dinakaran (in அமெரிக்க ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-06-17
  5. "9 including loco pilot dead in collision; PM announces compensation for victims". இந்தியன் எக்சுபிரசு. 17 June 2024. https://indianexpress.com/article/cities/kolkata/kanchanjunga-exoress-train-accident-live-updates-bengal-darjeeling-9396945/. 
  6. "மேற்கு வங்கம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/india/1266189-west-bengal-several-passengers-injured-as-goods-train-rams-into-kanchenjunga-express-in-new-jalpaiguri.html. பார்த்த நாள்: 17 June 2024. 
  7. "9 including loco pilot dead in collision; PM announces compensation for victims". இந்தியன் எக்சுபிரசு. 17 June 2024. https://indianexpress.com/article/cities/kolkata/kanchanjunga-exoress-train-accident-live-updates-bengal-darjeeling-9396945/. 
  8. "9 dead as goods train rams Kanchanjunga Express in Bengal, coach flung into air". இந்தியா டுடே. 17 June 2024. https://www.indiatoday.in/india/story/kolkata-bound-kanchanjunga-express-hit-goods-train-bengals-siliguri-no-reports-casualties-2554068-2024-06-17. 
  9. "Railway minister visits site". The Hindustan Times. 17 June 2024 இம் மூலத்தில் இருந்து 17 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240617051949/https://www.hindustantimes.com/india-news/west-bengal-train-accident-live-updates-sealdah-kanchanjunga-express-collision-latest-news-today-17-june-2024-101718600345471.html. 
  10. "West Bengal Train Accident: ₹10 lakh ex-gratia announced". Live Mint. 17 June 2024 இம் மூலத்தில் இருந்து 17 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240617080653/https://www.livemint.com/news/india/kanchanjungha-express-goods-train-accident-live-updates-dead-injured-collision-newrjalpaiguri-bengal-helpline-number-11718599520428.html. 
  11. "PM Modi offers condolences, Railway minister Vaishnaw heads to West Bengal". The Economic Times. 17 June 2024 இம் மூலத்தில் இருந்து 18 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240618052556/https://economictimes.indiatimes.com/news/india/kanchanjunga-express-derailed-pm-modi-offers-condolences-railway-minister-vaishnaw-heads-to-west-bengal/articleshow/111052489.cms?from=mdr. 
  12. "19 trains cancelled as Kanchanjunga Express accident disrupts service". The Hindustan Times. 17 June 2024 இம் மூலத்தில் இருந்து 17 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240617100755/https://www.hindustantimes.com/india-news/19-trains-cancelled-as-kanchanjunga-express-accident-disrupts-service-full-list-101718616036182.html. 
  13. "Train Services Fully Restored At West Bengal Crash Site Where 10 Died". NDTV. 18 June 2024 இம் மூலத்தில் இருந்து 18 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240618144007/https://www.ndtv.com/india-news/train-services-fully-restored-at-west-bengal-crash-site-where-10-died-5917544. 
  14. "Kanchanjunga Express train accident: 26-km diversion for 22 passenger trains". The Hindu. 18 June 2024 இம் மூலத்தில் இருந்து 18 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240618040918/https://www.thehindu.com/news/national/several-trains-cancelled-diverted-after-kanchenjunga-express-train-mishap-in-west-bengal/article68302556.ece. 

வெளி இணைப்புகள்

தொகு