அகமது ருஷ்டி

அகமது ருஷ்டி (Ahmed Rushdi) (24 ஏப்ரல் 1934 - 11 ஏப்ரல் 1983) பாக்கித்தானின் பல்துறை பின்னணி பாடகரான இவர், "பாக்கித்தான் திரைப்பட இசையின் பொற்காலத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராக இருந்தார்." [2] [3] தெற்காசியாவின் மிகச்சிறந்த பாடகர்களில் ஒருவராகக் கருதப்படும் [4] [5] இவர், உயர் நுட்பக் குறிப்புகளை எளிதில் பாடக்கூடியவர். [6] சிக்கலான மற்றும் அடர்ந்த உணர்ச்சி வெளிப்பாடுகளுடன், இவரது பல்துறை [7] மற்றும் தனித்துவமான குரலுக்காக இவர் மிகவும் பிரபலமானவர். [8] [9] தெற்காசியாவின் முதல் பரப்பிசைப் பாடகராகக் கருதப்பட்ட இவர், தெற்காசியாவின் முதல் பரப்பிசைப் பாடலான கோ கோ கொரினா என்ற பாடலை 1966 ஆம் ஆண்டில் வெளியான அர்மான் என்றத் திரைப்படத்தில் பாடினார். [10]

அகமது ருஷ்டி
Ahmed Rushdi playback singer 1954.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சையது அகமது ருஷ்டி
பிற பெயர்கள்மயக்கும் குரல் [1]
பிறப்புஏப்ரல் 24, 1934(1934-04-24)
ஐதராபாத் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
பிறப்பிடம்பாக்கித்தான் பாக்கித்தான்i
இறப்பு11 ஏப்ரல் 1983(1983-04-11) (அகவை 48)
கராச்சி, பாக்கித்தான்
இசை வடிவங்கள்பாரம்பரிய இசை, பாப், கசல், திசுக்கோ, ஹிப் ஹாப், ராக் அண்டு ரோல்
தொழில்(கள்)உருது, பிராந்திய மொழிகளில் பின்னணிப் பாடகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாடுக் கலைஞர்
இசைத்துறையில்1951–1983

ஐதராபாத் இராச்சியத்தில் பிறந்த இவர் இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். 1954 ஆம் ஆண்டில், பாக்கித்தானின் அதிகாரப்பூர்வ தேசிய கீதத்தை பல பாடகர்களுடன் பதிவு செய்தார். [11] பாக்கித்தான் திரைப்பட வரலாற்றில் உருது, ஆங்கிலம், பஞ்சாபி, பெங்காலி, சிந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படப் பாடல்களை இவர் பதிவு செய்துள்ளார். மேல்லும், 1950களின் நடுப்பகுதி முதல் 1980களின் முற்பகுதி வரை பின்னணிக் கலைஞராக முன்னெப்போதுமில்லாத வெற்றியைக் கண்டார். [12] மேடை நடிப்பிற்காகவும் இவர் அறியப்பட்டார். [13] தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் மோசமான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், தனது 48 வயதில் மாரடைப்பால் இறந்தார். வெளியான 583 படங்களுக்கு சுமார் ஐந்தாயிரம் திரைப்படப் பாடல்களைப் பதிவுசெய்துள்ளார். பிரபலமான இசையைத் தவிர, நசீர் துராபியின் கசல்களை பிரபலப்படுத்தவும் இவர் உதவினார். இவருக்கு ஐந்து நிகர் விருதுகள், " நூற்றாண்டின் சிறந்த பாடகர்" என்ற தலைப்பு, "வாழ்நாள் சாதனையாளர் விருது", " லெஜண்ட் விருது" மற்றும் லக்ஸ் ஸ்டைல் விருது போன்றவை வழங்கப்பட்டன . [14]

2003 ஆம் ஆண்டில், இவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பாக்கித்தான் குடியரசுத் தலைவர் பர்வேஸ் முஷாரஃப் இவருக்கு கலைத்துறையில் சிறப்பான தகுதிக்காக "சிறந்த நட்சத்திரம்" என்றசித்தாரா-இ-இம்தியாஸை வழங்கினார். ஆசிய உமன் மேகசின் என்ற பெண்கள் பத்திரிகையின் 2016 கணக்கெடுப்பின்படி, இவர் எல்லா காலத்திலும் ஒரு அன்பான பாடகராக அறிவிக்கப்பட்டார். [15]

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

இவர், 1934 இல் ஐதராபாத் இராச்சியத்தில் ஒரு மத, பழமைவாத குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சையத் மன்சூர் முகமது, ஐதராபாத் இராச்சியத்திலுள்ள அவுரங்காபாத் கல்லூரியில் அரபு, இசுலாமிய வரலாறு, பாரசீகம் போன்ற மொழியைக் கற்பித்தார். இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது அவர் இறந்து போனார். சிறு வயதிலிருந்தே, வானொலியில் இருந்து ஒளிபரப்பப்பட்ட பாடல்கள் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகளைக் கேட்பது இவருக்கு மிகவும் பிடிக்கும். இவர் யாரிடமிருந்தும் இசையை வாரிசாகப் பெறவில்லை. அல்லது இவரது குடும்பத்தில் எவரும் இசையுடன் இணைந்திருக்கவில்லை. இவரது பாடும் திறமைகள் இவரது தந்தையின் மிக நெருங்கிய நண்பரைக் கவர்ந்தன. அவர், இவரை உள்ளூர் இசைப் பள்ளி ஒன்றில் சேர்ந்தார். மேலும், அக்கால பிரபல இசையமைப்பாளர்களான எம்.ஏ.ரூஃப், இக்பால் குரேஷி ஆகிய இருவரும் இந்தப் பள்ளியில் இசையை கற்பித்து வந்தனர். இவர், அவர்களிடமிருந்து இசையின் அடிப்படைகளை கற்றுக்கொண்டார். பின்னர், உஸ்தாத் நாது கான் என்பவரிடமிருந்து பாரம்பரிய இசையில் சில பயிற்சிகளைப் பெற்றார். [16]

1951 ஆம் ஆண்டில் இப்ராட் என்ற இந்தியத் திரைப்படத்தில் தனது முதல் பாடலைப் பாடி அங்கீகாரம் பெற்றார். இவரது குடும்பம் பாக்கித்தானுக்குச் சென்று 1954 இல் கராச்சியில் குடியேறியது, அங்கு இவர் வானொலியில் பல்வேறு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்கத் தொடங்கினார். 1954 ஆம் ஆண்டில், பிரபலமான ரேடியோ பாக்கித்தான் நிகழ்ச்சியான பச்சோன் கி துனியாவிற்காக மெஹ்தி ஜாகீர் எழுதிய "பந்தர் ரோட் சே கீமரி" என்ற தனது முதல் திரைப்படமற்ற பாடலை இவர் பதிவு செய்தார். இந்த பாடல் வெற்றி பெற்றது. மேலும், இவரது எதிர்காலத்திற்கான படியாக அமைந்தது.

 
நேரடி நிகழ்ச்சியின் போது ருஷ்டி

சொந்த வாழ்க்கைதொகு

திருமணம்தொகு

இவர் 1963 நவம்பர் 30 அன்று குமேரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1992 இல் இவரது மனைவி இறந்தார். இவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். இவரும், பாடகி நூர் ஜஹானும் தங்கள் காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய பாடகர்களாக இருந்தனர். [17]

இறப்புதொகு

 
கராச்சியின் சாகி ஹாசன் கல்லறையில் அகமது ருஷ்டியின் கல்லறை

1983 ஏப்ரல் 11 அன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தனது 48வது வயதில் இறந்து போனார். கராச்சியின் சாகி ஹாசன் கல்லறையில் இவர், அடக்கம் செய்யப்பட்டார்.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_ருஷ்டி&oldid=3230683" இருந்து மீள்விக்கப்பட்டது