அகாரிகஸ் பைஸ்போரஸ்

2016-01 Agaricus bisporus 01.jpg

அகாரிகஸ் பைஸ்போரஸ் ஒரு உண்ணத்தகுந்த காளான் ஆகும். இது ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்க புல்வெளிப் பகுதிகளில் உருவான காளான் இனமாகும். இதில் 2 வகையான காளான்கள் காணப்படுகின்றன.

1.முதிர்ச்சி அடையாத காளான் வகைதொகு

இது வெண்மை மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. வெண்மை நிற காளான் பொதுவான காளான், பொத்தான் காளான், வெண்மை காளான், வளர்ப்பு காளான் என்றும் அழைக்கப்படுகிறது. பழுப்பு நிற காளான் சுவிஸ் பழுப்பு காளான், ரோமன் பழுப்பு காளான், இத்தாலிய பழுப்பு காளான், கிர்பிமி காளான், செஸ்நெட் காளான் என்றும் அழைக்கப்படுகிறது.

2. முதிர்ச்சி அடைந்த காளான் வகைதொகு

இது வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. இது உருளைக்கிழங்கு காளான் என்றும் அழைக்கப்படுகிறது.

அகாரிகஸ் பைஸ்போரஸ் ஒரு அதிக அளவில் உண்ணத்தகுந்த, 70 க்கும் அதிகமான நாடுகளில் வளர்க்கப்படுகிற காளான் இனமாகும்.

வகைப்பாடுதொகு

இந்த காளான் முதலில் Mordecai Cubitt Cooke என்ற ஆங்கில தாவரவியல் அறிஞரால் விவரிக்கப்பட்டது. இவர் 1871 ல் தனது Handbook of British Fungi என்ற புத்தகத்தில் அகாரிகஸ் கம்பெஸ்டிரிஸ் (வகை. ஹார்டென்சிஸ்) என்ற காளான் இனத்தின் ஒரு வகையாக குறிப்பிட்டார்.பின்னர் Jacob Emanuel Lange என்ற டச்சு நாட்டு காளான் இயல் அறிஞர் இதனை வளர்க்கக்கூடிய தனி காளான் இனமான சாலியோட்டா ஹார்டென்சிஸ் (வகை. பைஸ்போரா) என 1926 ல் குறிப்பிட்டார். 1938 ல் சாலியோட்டா பிஸ்போரா என்ற தனி சிற்றினமாக உருவாக்கப்பட்டது. தற்போதைய தாவரவியல் பெயரான அகாரிகஸ் பைஸ்போரஸ் 1946 ல் Emil Imbach என்பவரால் வழங்கப்பட்டது....

வகைப்பாட்டு படிநிலைகள்தொகு

உலகம் : பூஞ்சைகள்.

தொகுதி : பெசிடியோமைகோட்டா.

வகுப்பு : அகாரிகோமைசீட்ஸ்.

துறை : அகாரிகேல்ஸ்.

குடும்பம் : அகாரிகேசியே.

பேரினம் : அகாரிகஸ்.

சிற்றினம் : அ.பைஸ்போரஸ்

சாகுபடி வரலாறுதொகு

முதன்முதலில் அறிவியல் ரீதியான வளர்ப்பு முறை 1707 ல் Joseph Pitton de Tournefort என்ற பிரெஞ்ச் தாவரவியலாளரால் உருவாக்கப்பட்டது. பின்னர் பிரெஞ்ச் வேளாண் வல்லுநரான என்பவரால் காளான் மறு நடவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஊட்டச்சத்து மதிப்பீடுதொகு

100 கிராம் அளவுடைய உணவுக் காளானில் 93 கிலோஜுல் (22 கிலோ கலோரி) ஆற்றல் உள்ளது. மேலும் இதில் பி வைட்டமின்கள், வைட்டமின் டி (எர்கோகால்சிஃபெரால் - வைட்டமின் டி2), ரைபோஃபிளேவின், நியாசின், பாண்டோதனிக் அமிலம் ஆகியவை காணப்படுகின்றன....

அட்டவணைதொகு

காளான் உணவில் உள்ள ஊட்டச்சதது மதிப்பு (100 கிராம்)

 • ஆற்றல் 93 கிலோஜுல்
 • கார்போஹைட்ரேட்டுகள் 3.26 கி
 • சர்க்கரை 1.98 கி
 • நார்ச்சத்து 1 கி
 • கொழுப்பு 0.34 கி
 • புரதம் 3.09 கி

வைட்டமின்கள்

 • தையமின் (பி1) 0.081 மிகி (7%)
 • ரைபோஃபிளேவின் (பி2) 0.402 மிகி (34%)
 • நியாசினன் (பி3) 3.607 மிகி (24%)
 • பாண்டோதனிக் அமிலம் (பி5) 1.497 மிகி (30%)
 • வைட்டமின் பி6 0.104 மிகி (8%)
 • ஃபோலேட் (பி9) 17 மைகி (4%)
 • வைட்டமின் பி12 0.04 மைகி (2%)
 • வைட்டமின் சி 2.1 மிகி (3%)
 • வைட்டமின் டி 0.2 மைகி (1%)

தாதுப்பொருட்கள்

 • இரும்பு 0.5 மிகி (4%)
 • மெக்னீசியம் 9 மிகி (3%)
 • பாஸ்பரஸ் 86 மிகி (12%)
 • பொட்டாசியம் 318 மிகி (7%)
 • சோடியம் 3 மிகி (0%)
 • ஜிங்க் 0.52 மிகி (5%)
 • நீர் 92.45 கி

(குறிப்பு: கி - கிராம், மிகி - மில்லிகிராம், மைகி - மைக்ரோகிராம்)

சான்றாதாரம்தொகு

https://en.wikipedia.org/wiki/Agaricus_bisporus

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாரிகஸ்_பைஸ்போரஸ்&oldid=2373823" இருந்து மீள்விக்கப்பட்டது