அக்குமோலா பிராந்தியம்
அக்மோலா பிராந்தியம் (Akmola Region, காசாக்கு மொழி: Ақмола облысы , اقمولا) என்பது கசக்கஸ்தான் நாட்டின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பிராந்தியம் ஆகும். இதன் தலைநகரம் கோக்ஷெட்டாவ் நகரம் ஆகும். தேசிய தலைநகரான நூர்-சுல்தான் இப்பிராந்தியத்தால் சூழப்பட்டுள்ளது. என்றாலும் அரசியல் ரீதியாக அக்மோலா பிராந்தியத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் மக்கள் தொகை 715,000 ஆகும். இதில் கோக்ஷெட்டா நகரின் மக்கள் தொகை 157,000 ஆகும். பிராந்தியததின் பரப்பளவு 146,200 சதுர கிலோமீட்டர். இந்த பிராந்தியமும், கராகண்டா பிராந்தியம் மட்டுமே கசக்கஸ்தான் நாட்டின் பன்னாடடு எல்லைகளைத் தொடாதவை ஆகும். அக்மோலா பிராந்தியம் வடக்கில் வடக்கு கசக்கஸ்தான் பிராந்தியத்தையும், கிழக்கில் பாவ்லோடர் பிராந்தியத்தையும், தெற்கில் கராகண்டி பிராந்தியத்தையும், மேற்கில் கோஸ்தானே பிராந்தியத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளன. இப்பகுதியில் தங்கம் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் சில உள்ளன.
அக்மோலா பிராந்தியம் Ақмола облысы (காசாக்கு மொழி) Акмолинская область (உருசிய மொழி) | |
---|---|
பிராந்தியம் | |
புராபே தேசிய பூங்கா | |
![]() கசக்கஸ்தான் வரைபடத்தில், அக்மோலா பிராந்தியத்தின் இருப்பிடம் காட்டபட்டுள்ளது | |
ஆள்கூறுகள்: 52°0′N 69°0′E / 52.000°N 69.000°E | |
நாடு | ![]() |
தலைநகரம் | கோக்ஷெட்டா |
அரசு | |
• அகீம் | மாலிக் முர்சலின் |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 1,46,219 km2 (56,455 sq mi) |
மக்கள்தொகை (2017-06-01)[2] | |
• மொத்தம் | 7,15,000 |
• அடர்த்தி | 4.9/km2 (13/sq mi) |
அஞ்சல் குறியீடு | 020000 |
தொலைபேசி குறியீடு | +7 (717) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | கேஇசட்-ஏகேஎம் |
வாகனப் பதிவு | 03, C |
மாவட்டங்கள் | 17 |
மாநகரங்கள் | 8 |
நகரியங்கள் | 14 |
ஊர்கள் | 671 |
இணையதளம் | akmo |
சொற்பிறப்பியல்தொகு
கசாக் மொழியில் அக்மோலா என்றால் வெள்ளை புதைப்பு என்று பொருள்.
மக்கள் வகைப்பாடுதொகு
இனக்குழுக்கள் (2020): [3]
- கசக்குகள் : 51.83%
- உருசியர் : 32.55%
- உக்ரேனியர் : 4.23%
- ஜெர்மனியர் : 3.49%
- தாதர் : 1.77%
- மற்றவர்: 6.13%
நிர்வாக பிரிவுகள்தொகு
இப்பிராந்தியம் நிர்வாக ரீதியாக பதினேழு மாவட்டங்களாகவும், கோக்ஷெட்டாவ் மற்றும் ஸ்டெப்னோகோர்ஸ்க் என இரு மாநகரங்களவும் பிரிக்கப்பட்டுள்ளது. [4]
- அக்கோல் மாவட்டம், இதன் தலை நகரம் அக்கோல் நமரமாகும்.
- அர்ஷலி மாவட்டம், இதன் முதன்மை குடியிருப்பு அர்ஷலி
- அஸ்ட்ரகான் மாவட்டம், செலோவின் அஸ்ட்ரகாங்கா
- அட்பசார் மாவட்டம், அட்பாசர் நகரம்;
- பிர்ஜன் சால் மாவட்டம், ஸ்டெப்னியாக் நகரம்;
- புலாண்டி மாவட்டம், மக்கின்ஸ்க் நகரம்;
- புராபே மாவட்டம், சுச்சின்ஸ்க் நகரம்;
- எகிண்டிகோலின் மாவட்டம், எகிண்டிகோல் மாவட்டம்;
- எரிமென்டோ மாவட்டம், எரிமென்டோ நகரம்;
- எசில் மாவட்டம், எசில் நகரம்;
- கோர்கால்ஜின், கோர்கால்ஜின் நகரம்;
- சாண்டிக்டாவ் மாவட்டம், பால்காஷினோவின் செலோ;
- ஷார்டாண்டி மாவட்டம், ஷோர்டாண்டியின் நகரம்
- டெக்ஸினோகிராட் மாவட்டம், அக்மோலின்;
- ஜெரெண்டி மாவட்டம், ஜெரெண்டியின் செலோ;
- ஜாக்ஸி மாவட்டம், ஜாக்ஸியின் குடியேற்றம்;
- ஜார்கைன் மாவட்டம், டெர்ஷாவின்ஸ்க் நகரம்.
- அக்மோலா பிராந்தியத்தில் பின்வரும் பத்து வட்டாரங்கள் நகர அந்தஸ்தைக் கொண்டுள்ளன: [4] அவை அக்கோல், அட்பசார், டெர்ஷாவின்ஸ்க், எரிமென்டோ, எசில், கோக்ஷெட்டாவ், மாகின்ஸ்க், சுச்சின்ஸ்க், ஸ்டெப்னோகோர்க் மற்றும் ஸ்டெப்னியாக் ஆகும்.
குறிப்பிடத்தக்க நபர்கள்தொகு
- டேவிட் ரிகர்ட், பளுதூக்குபவர், ஒலிம்பிக் வாகையர், 5 எக்ஸ் உலக வாகையர் (லைட்-ஹெவிவெயிட் மற்றும் ஹெவிவெயிட்), 68 உலக சாதனைகள்.
குறிப்புகள்தொகு
- ↑ "Official site - General Information". 2008-01-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-01-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Agency of statistics of the Republic of Kazakhstan: Численность населения Республики Казахстан по областям с начала 2013 года до 1 февраля 2013 года பரணிடப்பட்டது 2019-05-11 at the வந்தவழி இயந்திரம் (russisch; Excel-Datei; 55 kB).
- ↑ "Численность населения Республики Казахстан по отдельным этносам на начало 2020 года". Stat.kz. 2020-05-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-08-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 Акиматы районов, г. Петропавловска (Russian). Официальный интернет-ресурс Северо-Казахстанской области. 8 ஆகஸ்ட் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 June 2012 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
வெளி இணைப்புகள்தொகு
- அதிகாரப்பூர்வ வலைத்தளம் பரணிடப்பட்டது 2013-08-20 at the வந்தவழி இயந்திரம்