அக்மோஸ்-மெரிதமுன்

அக்மோஸ்-மெரிதமுன் (Ahmose-Meritamun or Ahmose-Meritamon) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன் முதலாம் அக்மோஸ்- அரசி அக்மோஸ்-நெபர்தாரி இணையரின் மகளும், பார்வோன் முதலாம் அமென்கோதேப்பின் மூத்த சகோதரியும், மனைவியும் ஆவார். [1]மிக அழகான இந்த அரசி இளமையில் மறைந்த போது, தேர் எல் பகாரியின் கல்லறையில், இவரது உடலை மம்மியாக அடக்கம் செய்யப்பட்டது.

அரசி அக்மோஸ்-மெரிதமுன்
அரசி அக்மோஸ்-மெரிதமுனின் சிலை
அரசி அக்மோஸ்-மெரிதமுனின் சிலை, பிரித்தானிய அருங்காட்சியகம்
புதைத்த இடம்
துணைவர்முதலாம் அமென்கோதேப்
அரசமரபுஎகிப்தின் பதினெட்டாம் வம்சம்
தந்தைபார்வோன் முதலாம் அக்மோஸ்
தாய்அரசி அக்மோஸ்-நெபர்தாரி
மதம்பண்டைய எகிப்தின் சமயம்
அக்மோஸ்-மெரிதமுன் படவெழுத்துக்களில்
iaH
ms
imn
n
mriit

அக்மோஸ்-மெரிதமுன்
இலா கடவுளின் குழந்தை, அமூன் கடவுளின் அன்பைப் பெற்றவர்.

அரசி அரசி அக்மோஸ்-நெபர்தாரிக்குப் பின்னர் அக்மோஸ்-மெரிதமுன் அமூன் கடவுளின் மனைவியாக வழிபடப்பட்டார். 1817-இல் கர்னாக் தொல்லியல் அகழாய்வின் போது அரசி அக்மோஸ்-மெரிதமுனின் சுண்ணாம்புக் கல் சிலை கண்டெடுக்கப்பட்டது.[2]1930-இல் தேர் எல் பகாரி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்த போது, அரசி அக்மோஸ்-மெரிதமுனின் மம்மி மரப்பெட்டியில் கண்டெடுக்கப்பட்டது. [3]

தீபை நகரத்தின் கல்லறை எண் 359-இன் சுவரில், மேல் வரிசையில், இடமிருந்து வலம்: 18ஆம் வம்சம் முதல் 20-ஆம் வம்ச வரையிலான பார்வோன்களான முதலாம் அமென்கோதேப், முதலாம் அக்மோஸ், அரசி அக்மோஸ்-மெரிதமுன், அக்மோஸ்-சிதாமுன், அக்மோஸ்-ஹெனுத்தாமேகு, அக்மோஸ்-துமெரிசி, அக்மோஸ்-நெபெத்தா, அக்மோஸ்-சபையர், கீழ் வரிசையில், இடமிருந்து வலமாக: அரசி அக்மோஸ்-நெபர்தாரி, முதலாம் ராமேசஸ், இரண்டாம் அமென்கோதேப் இரண்டாம் மெண்டுகொதேப், செக்கனென்ரே தாவோ, நான்காம் ராமேசஸ், முதலாம் தூத்மோஸ் ஓவியங்கள்
மரச் சவப்பெட்டியில் அரசி அக்மோஸ்-மெரிதமுனின் மம்மி

பண்டைய எகிப்திய ஆட்சியாளர்களின் மம்மி ஊர்வலம்

தொகு

3 ஏப்ரல், 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து எகிப்தின் பதினேழாம் வம்சம் முதல் எகிப்தின் இருபதாம் வம்சம் வரையிலான புகழ்பெற்ற 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு சிறப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது அரசி அக்மோஸ்-மெரிதமுன் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Aidan Dodson & Dyan Hilton: The Complete Royal Families of Ancient Egypt. Thames & Hudson, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05128-3, p.123, 127, 129
  2. "Upper part of a limestone statue of Queen Ahmose-Merytamun," The British Museum Web site.
  3. Tyldesley, Joyce. Chronicle of the Queens of Egypt. Thames & Hudson. 2006. p. 91, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05145-3
  4. Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்மோஸ்-மெரிதமுன்&oldid=3781903" இலிருந்து மீள்விக்கப்பட்டது