அசோக் சந்த்னா

இந்திய அரசியல்வாதி (பிறப்பு 1984)

அசோக் சந்த்னா (Ashok Chandna) (பிறப்பு  : 13 சனவரி 1984) இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக கிந்தோலி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் 15வது இராசத்தான் சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் இராசத்தான் அரசாங்கத்தில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை (தனிப் பொறுப்பு), திறன், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு (சுயாதீனப் பொறுப்பு), போக்குவரத்து மற்றும் சிப்பாய் நலன் ஆகியவற்றின் மாநில அமைச்சராகவும் உள்ளார்.[1]

அசோக் சந்த்னா
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்
இராசத்தான் அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
28-திசெம்பர்-2018
தலைவர்
இராசத்தான் இளைஞர் காங்கிரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
28-மார்ச்-2013
இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
08-திசெம்பர்-2013
தொகுதிகிந்தோலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13-சனவரி-1984 (வயது 39)
பூண்டி, இராசத்தான்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
கல்வி(பி.காம்) புனே பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்

கல்வி மற்றும் ஆரம்ப வாழ்க்கை தொகு

அசோக் சந்த்னா 13 சனவரி 1984 ஆம் நாளன்று பூண்டியின் நைன்வாவில் ஒரு குர்சார் குடும்பத்தில் பிறந்தார். பிலானியில் உள்ள பிர்லா சீனியர் செகண்டரி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புனே பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.

அரசியல் பயணம் தொகு

அசோக் சந்த்னா 2009 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் பொது காங்கிரசு ஊழியராக சேர்ந்தார். அதே ஆண்டில் அசுமீர் சில்லா பரிசத்தின் உறுப்பினராகவும், இராசத்தான் இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2013 ஆம் ஆண்டில் இராசத்தான் இளைஞர் காங்கிரசு தலைவராக ஆனார். அக்டோபர் 2013 ஆம் ஆண்டில் கிந்தோலி தொகுதியில் இருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 11 டிசம்பர் 2018 ஆம் நாளன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது கெலாட் அமைச்சகத்தில் இணை அமைச்சராகவும் சேர்க்கப்பட்டார்.

விளையாட்டு தொகு

2001-ம் ஆண்டு 200 மீட்டர் பேக் ச்ட்ரோக்கில் இராசத்தானை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பில்வாரா கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். தற்போது, 2013 ஆம் ஆண்டு சவாய் மான் சிங் வாசு மற்றும் தண்டர்போல்ட் கோப்பையை வென்ற சந்த்னா குரூப் போலோ அணிக்கு தலைமை தாங்குகிறார். சமீபத்தில் இவரது அணி 2023 ஆம் ஆண்டு செனரல் அமர் சிங் கனோட்டா கோப்பையை வென்றது.

அசோக் சந்த்னா இராசத்தான் கிராமின் ஒலிம்பிக்கிற்கு கருத்துருவாக்கம் செய்தார். கிராமப்புற விளையாட்டுகள் 29 ஆகத்து 2022 முதல் அக்டோபர் 5, 2022 வரை திட்டமிடப்பட்டது. அதில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்ததோடு, இராசத்தானைத் தொடர்ந்துப் பிற மாநிலங்களிலும் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்க உதவும் என்று கருதப்பட்ட ராசீவ் காந்தி கிராமப்புற ஒலிம்பிக் போட்டிகள் முன்னோடியானது என அழைக்கப்படுகிறது.[2]

சர்ச்சைகள் தொகு

பஞ்சாயத்து தேர்தல் சீட்டு தொடர்பாக காங்கிரசு தொண்டர் மீது சாதி வெறித்தனமாக அவதூறாக பேசியதாகக் கூறப்படும் இவரது தொலைபேசி உரையாடலின் ஒவிக்கோப்பு சமூக ஊடகங்களில் பரவலானபோது சர்ச்சையில் சிக்கினார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. . 17 March 2021. 
  2. "Cm Hails Rural Games As Pivotal Step In Building Sports Culture | Jaipur News" (in ஆங்கிலம்). TNN. Aug 23, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.
  3. "BJP seeks probe into Rajasthan minister's audio clip" (in ஆங்கிலம்). 22 November 2020. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_சந்த்னா&oldid=3926453" இலிருந்து மீள்விக்கப்பட்டது