அடூர் பவானி

இந்திய நடிகை

அடூர் பவானி (Adoor Bhavani) (1927 - 25 அக்டோபர் 2009) இந்தியத் திரைப்படத்துறையில் மலையாள சினிமாவில் பணியாற்றிய இந்திய நடிகை ஆவார். இவர் இராமு காரியத் இயக்கிய தேசிய விருது பெற்ற செம்மீன் (1965) திரைப்படத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர் ஆவார். முடியனாய புத்திரன், துலாபாரம், கல்லிச்செல்லம்மா, அனுபவங்கள் பலிச்சங்கள் உட்பட சுமார் 450 படங்களில் நடித்துள்ளார்.[1] கே. மது இயக்கிய சேதுராம ஐயர் சிபிஐ திரைப்படம்தான் இவர் நடித்த கடைசித் திரைப்படம் ஆகும். இவர் ஒரு மேடை நடிகையும் மற்றும் பிரபல நாடகக் குழுவான KPAC உடன் தொடர்புடையவரும் ஆவார்.[2]

அடூர் பவானி
பிறப்பு1927
அடூர், திருவிதாங்கூர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு25 அக்டோபர் 2009 (வயது 82)
பன்னிவிழா, அடூர், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
பெற்றோர்கே. ராமன் பிள்ளை, குஞ்சு குஞ்சம்மா
வாழ்க்கைத்
துணை
ஜனார்த்தனன் பிள்ளை
பிள்ளைகள்இராஜீவ்

பவானி திருவிதாங்கூரில் உள்ள அடூரில் பிறந்தார்.[3] இவரது சகோதரி அடூர் பங்கஜமும் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். அடூர் பவானி 25 அக்டோபர் 2009 அன்று இறந்தார் [4][5]

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

தொகு

1969 ஆம் ஆண்டில், கல்லிசெல்லம்மா படத்திற்காக பவானி இரண்டாவது முறையாக சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். 1982-ஆம் ஆண்டில் நாடகத்துறையில் சிறப்பாக பங்களித்தமைக்காக கேரள சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார் [6] 2002 இல் மாத்ருபூமி - மெடிமிக்ஸ் மூலம் சலசித்ரா சபர்யா வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில், கேரள சங்கீத நாடக அகாடமி, நாடகம் மற்றும் நாடகத்திற்கான ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக பவானி மற்றும் பங்கஜம் ஆகியோரை கௌரவித்தது. 

திரைப்படங்களில் நடிகையாக

தொகு

இவர் காத்தபுருசன், நதி, கேளி, ஸ்ரீ நாராயண குரு, ஏப்ரல் 18, சுயம்வரம், அடிமைகள், கள்ளிச்செல்லம்மா, விருந்துகாரி, செம்மீன் மங்கள சூத்ரம், பாக்கியவான், பொன்னுச்சாமி, அர்த்ரம், கோட்டயம் குஞ்சச்சான், ருக்மணி, அத்தியாயம் ஒன்னு முதல், ருக்மா, சர்ப்பம், இவள் ஒரு நாடோடி, நெல்லு, யாமினி, மயிலாடும் குன்னு, துலாபாரம், போபனும் மோலியும், பியர்ல் வியூ, மாயா, குரு சேத்ரம், புதிய ஆகாசம் புதிய பூமி, பாக்ய ஜாதகம், பாடாத பைங்கிளி, ஓடையில் நின்னு, வர்தாக்யபுராணம், இஞ்சக்காடன் மத்தாய் & சன்ஸ், சத்யப்பிரதிக்ஞா போன்ற ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நாடகங்கள்

தொகு
  • வேலுத்தம்பி தளவா
  • மூலதானம்
  • அஸ்வமேதம்
  • துலாபாரம்
  • முடியனய புத்திரன்
  • யுத்தகாண்டம்
  • பரித்ரநயம்
  • பாம்சுலா
  • ரங்கபூஜை
  • பாசுபத்ராஸ்திரம்
  • தண்டனைச் சட்டம்
  • சக்ரவர்த்தினி
  • பாடம் ஒண்ணு
  • அன்யாயம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Manorama Online". Manorama Online (in மலையாளம்). 2 December 2013. Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
  2. "Adoor Bhavani passes away". 26 October 2009 இம் மூலத்தில் இருந்து 14 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200114063519/https://www.thehindu.com/news/national/kerala/Adoor-Bhavani-passes-away/article16888528.ece. 
  3. "അടൂര്‍ സഹോദരിമാര്‍, Interview - Mathrubhumi Movies" (in ml). 19 September 2008 இம் மூலத்தில் இருந்து 19 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219081608/http://www.mathrubhumi.com/movies/interview/20006/. 
  4. "Veteran actress Adoor Bhavani laid to rest". 26 October 2009. http://www.mathrubhumi.org/news.php?id=25235#. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Malayalam Actress Adoor Bhavani Passes Away". 25 October 2009 இம் மூலத்தில் இருந்து 30 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180330213625/https://www.kerala9.com/news/malayalam-actress-adoor-bhavani-passes-away/. 
  6. "Kerala Sangeetha Nataka Akademi Award: Drama". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடூர்_பவானி&oldid=4115228" இலிருந்து மீள்விக்கப்பட்டது