அந்தமான் விரைவுவண்டி
16031/16032 அந்தமான் விரைவுவண்டி, இந்திய நகரங்களான சென்னைக்கும், ஜம்மு தாவிக்கும் இடையே இயக்கப்படுகிறது. இது வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும். மொத்தமாக 2800 கி.மீ தொலைவைக் கடக்கிறது.[1] இது போபால், லூதியானா, நாக்பூர், ஜான்சி, புது தில்லி உள்ளிட்ட 78 இடங்களில் நின்று செல்லும்.
அந்தமான் விரைவுவண்டி Andaman Express | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | விரைவுவண்டி | ||
நிகழ்வு இயலிடம் | தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, தில்லி, பஞ்சாப், ஜம்மு கஷ்மீர் | ||
நடத்துனர்(கள்) | இந்திய இரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் | ||
இடைநிறுத்தங்கள் | 78 | ||
முடிவு | ஜம்மு தாவி | ||
ஓடும் தூரம் | 2,800 km (1,700 mi) | ||
சேவைகளின் காலஅளவு | வாரத்துக்கு மூன்று முறை | ||
தொடருந்தின் இலக்கம் | 16031 / 16032 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | மூன்றாம் தர ஏசி, படுக்கை, பொதுப் பெட்டிகள் | ||
இருக்கை வசதி | உண்டு | ||
படுக்கை வசதி | உண்டு | ||
உணவு வசதிகள் | உண்டு | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
வேகம் | 50 km/h (31 mph) (சராசரி) | ||
|
வழித்தடம்
தொகுஇந்த வண்டி கூடூர் - தெனாலி - குண்டூர் - விசயவாடா - வாரங்கல் - ஜம்மிகுண்டா-நாக்பூர் - இட்டர்சி - போப்பால் சந்திப்பு - பினா - ஜான்சி - குவாலியர் சந்திப்பு - புது தில்லி - ஜிந்து - துரி - லூதியானா - ஜலந்தர் ஆகிய ஊர்களைக் கடந்து செல்கிறது.
இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Air-con relief for CAPF to stay alert, yet cool". The new Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2013-06-19.