அனந்தநாக் தொடருந்து நிலையம்

அனந்தநாக் தொடருந்து நிலையம் (Anantnag Railway Station), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் அமைந்த அனந்தநாக் நகரத்தில் உள்ளது. இந்த இரயில் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 1,599.89 மீட்டர்கள் (5,249 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையம் அனந்தநாக்கிலிருந்து 5.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது வடக்கு இரயில்வேயின் . ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் உள்ளது. இந்நிலையம் இரண்டு நடைமேடைகள் கொண்டுள்ளது. அமர்நாத் கோயில் செல்லும் பக்தர்கள் இந்த அனந்தநாக் தொடருந்து நிலையத்தில் இறங்கிப் பயணிக்கலாம்.

தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்அனந்தநாக், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
இந்தியா
ஆள்கூறுகள்33°44′19″N 75°06′27″E / 33.7386°N 75.1074°E / 33.7386; 75.1074
ஏற்றம்1,599.89 மீட்டர்கள் (5,249.0 அடி)
உரிமம்இந்திய இரயில்வே, இரயில்வே அமைச்சகம்
தடங்கள்வடக்கு இரயில்வே
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard on-ground station
தரிப்பிடம்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுANT
பயணக்கட்டண வலயம்வடக்கு இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது2008
மின்சாரமயம்ஆம்

தற்போது அனந்தநாக் தொடருந்து நிலையத்திலிருந்து பாரமுல்லா, சிறிநகர், பட்காம், பனிஹால், இராம்பன் (சங்கல்தன்), உதம்பூர் நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகிறது.[1]

ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதைப் பணிகள் முடிவடைந்த பிறகு அனந்தநாக் தொடருந்து நிலையத்திலிருந்து ஜம்மு, தில்லி, சண்டிகர் போன்ற நகரங்களுடன் தொடருந்துகள் மூலம் இணைக்கப்படும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு