அனிதா கரிபால்டி
அனிதா கரிபால்டி ( Anita Garibaldi ; பிறப்பு ; 30 ஆகஸ்ட் 1821 - 4 ஆகஸ்ட் 1849) பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு புரட்சியாளர் ஆவார். இவர் இத்தாலிய புரட்சியாளர் கியூசெப் கரிபால்டியின் மனைவியும் மற்றும் தோழமையும் ஆவார். இவர்களின் கூட்டாண்மை 19 ஆம் நூற்றாண்டின் புனைவியம் மற்றும் புரட்சிகர தாராளவாதத்தின் உணர்வை வெளிப்படுத்தியது.
அனிதா கரிபால்டி | |
---|---|
1845 இல் அனிதா | |
பிறப்பின்போதான் பெயர் | அனா மரியா டி ஜீசஸ் ரிபேரோ |
பிறப்பு | லாகுனா, பிரேசில் இராச்சியம் | 30 ஆகத்து 1821
இறப்பு | 4 ஆகத்து 1849 இராவன்னா, திருத்தந்தை நாடுகள் | (அகவை 27)
அடக்கம் | ஜானிகுலம், உரோம், இத்தாலி |
போர்கள்/யுத்தங்கள் | இராகமுபின் போர் உருகுவேயின் உள்நாட்டுப் போர் இத்தாலியின் முதல் சுதந்திரப் போர் |
துணை(கள்) | கரிபால்டி (தி. 1842) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅனா மரியா டி ஜீசஸ் ரிபேரோ என்ற பெயரில் ஆகஸ்ட் 30, 1821 இல், பிரேசில் இராச்சியத்தின் ( போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் ) ஒரு பகுதியான லகுனாவில் - பிரேசிலின் சுதந்திரத்திற்கு ஒரு வருடம் முன்பு - ஒரு ஏழை. அசோரசு போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தார்.[1]
பிரேசிலிலுள்ள வணிகப் பகுதிகள் மற்றும் நுகர்வோர் மையங்களுக்கு இடையே குதிரைகள், கால்நடை மற்றும் கோவேறு கழுதைகளை ஓட்டிச் செல்பவர்களைக் கண்காணிக்கும் பணியிலிருந்த[2] மரியா அன்டோனியா டி ஜீசஸ் அன்ட்யூன்ஸ் மற்றும் பென்டோ ரிபேரோ டா சில்வா ஆகியோருக்குப் பிறந்த பத்து குழந்தைகளில் இவர் மூன்றாவது குழந்தை. 1835 ஆம் ஆண்டில், பதினான்கு வயதில், மானுவல் டுவார்டே அகுயர் என்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது. இவரது கணவர் ஏகாதிபத்திய இராணுவத்தில் சேருவதற்காக இவரைக் கைவிட்டார்.
கியூசெப் கரிபால்டியுடன் வாழ்க்கை
தொகுஇலிகுரியன் வம்சாவளியைச் சேர்ந்த நிகோயிஸ் மாலுமியான கியூசெப் கரிபால்டி, இத்தாலிய தேசியவாத புரட்சியாளராக மாறினார். 1836 இல் ஐரோப்பாவை விட்டு வெளியேறி, தெற்கு பிரேசிலில் பிரிவினைவாத ரியோகிராண்டன்ஸ் குடியரசு சார்பாக போராடினார். இளைஞரான கரிபால்டி அனிதாவை முதன்முதலில் பார்த்தபோதே, "நீங்கள் என்னுடையவராக இருக்க வேண்டும்" என்று அவரிடம் கூறினார்.[3] அனிதா அக்டோபர் 1839 இல் கரிபால்டியின் ரியோ பார்டோ என்ற கப்பலில் சேர்ந்தார். ஒரு மாதத்திற்குப் பிறகு, இம்பிடுபா மற்றும் லகுனாவில் நடந்த போர்களில், தனது காதலருடன் இருந்தார்.
குரிட்டிபனோஸ் போரில், போட்டிக் குழுவால் கைது செய்யப்பட்ட அனிதா கரிபால்டியுடனான தொடர்பை இழந்தார். சிறைபிடிக்கப்பட்ட நிலையில், காவலர்கள் அனிதாவிடம் கரிபால்டி இறந்துவிட்டதாகக் கூறினார்கள். அனிதா மிகவும் மனமுடைந்து போனார். போரில் இறந்தவர்களிடையே கரிபால்டியை தேட அனுமதி பெற்ற அனிதா அங்கிருந்து குதிரை மீதேறி தப்பித்து அருகிலுள்ள காடுகளுக்குத் தப்பித்தார். எதிரிகளிடமிருந்து தப்பித்த அனிதா நான்கு நாட்கள் காடுகளில் உணவோ பானமோ இல்லாமல் அலைந்து திரிந்தார். இறுதியாக, இவர் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது . மேலும், வகாரியாவில் கரிபால்டியுடன் மீண்டும் இணைந்தார். சில மாதங்களுக்குப் பிறகு, இவர்களின் முதல் குழந்தை, மெனோட்டி (1840-1903) பிறந்தது. இத்தாலியப் போராளி சிரோ மெனோட்டியின் நினைவாக இவருக்கு இந்த பெயர் வழங்கப்பட்டது. பின்னர் மெனோட்டி சுதந்திரத்திற்கான போராளியாக ஆனார். இத்தாலியில் நடந்த போர்களில் தனது தந்தைக்கு உதவியாக இருந்தார். இவர்களுக்கு மேலும் ரோசிட்டா (பிறப்பு 1843-1845 ), தெரசிட்டா (பிறப்பு 1845-1903) மற்றும் ரிச்சியோட்டி (பிறப்பு 1847-1924) என மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
அனிதா கரிபால்டி மற்றும் அவரது செஞ்சட்டை படைவீரர்களுடன் 1848 இல் நடந்த புரட்சிகளில் சேர மீண்டும் இத்தாலிக்கு சென்றார். அங்கு இவர் ஆஸ்திரிய பேரரசின் படைகளுக்கு எதிராக போராடினார். பிப்ரவரி 1849 இல், கரிபால்டி நியோபோலிடன் மற்றும் பிரெஞ்சு தலையீட்டிற்கு எதிராக திருத்தந்தை நாடுகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட புதிதாக அறிவிக்கப்பட்ட உரோமானிய குடியரசுடன் கரிபால்டி இணைந்தார். ஜூன் 30 அன்று அனிதா தனது கணவருடன் இணைந்து கொண்டார். பின்னர் அவர் கரிபால்டியன் படையணியுடன் பிரெஞ்சு மற்றும் ஆஸ்திரிய துருப்புக்களிடமிருந்து தப்பி ஓடினார்.
இறப்பு
தொகுகர்ப்பிணியாக இருந்த அனிதா மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகஸ்ட் 4, 1849 அன்று இரவு 7:45 மணிக்கு இத்தாலியின் ராவென்னாவுக்கு அருகிலுள்ள மாண்ட்ரியோலில் உள்ள குய்சியோலி பண்ணையில் இறந்தார். இவருடைய உடலை அவசரமாக புதைக்க வேண்டியிருந்தது. பின்னர் ஒரு நாயால் தோண்டி எடுக்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Portal Legislativo do Senado Federal do Brasil பரணிடப்பட்டது சூன் 21, 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Adílcio Cadorin (1999). Anita Garibaldi - A Guerreira das Repúblicas (in போர்ச்சுகீஸ்) (2 ed.). pp. 22–29, 193.
- ↑ "The Latin Americanist". Archived from the original on 2007-02-25. பார்க்கப்பட்ட நாள் 2007-02-23.
- ↑ "Garibaldi's Worst Hours - Beachcombing's Bizarre History Blog". 24 September 2010.
முறையான கல்வி இல்லாததால், அனிதா ரிபெய்ரோ கரிபால்டி தனது அனுபவங்களைப் பற்றிய சில குறிப்புகளை மட்டுமே விட்டுச் சென்றர். பல தசாப்தங்களுக்குப் பிறகு, கியூசெப் கரிபால்டி தனது சுயசரிதையில் இவரைப் பற்றி விவரித்துள்ளார். வலேரியோவின் காதல் வாழ்க்கை வரலாற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு மட்டுமே தற்போதைய நிலையான ஆதாரமாக உள்ளது.
- "Anita Garibaldi" website hosted by Universidade do Estado de Santa Catarina - UDESC, Florianópolis, Brazil
- Anita Garibaldi: Guerrillera en América del Sur, Heroína de la Unidad Italiana, by Julio A. Sierra (2003).
- Anita Garibaldi: A Biography, by Anthony Valerio (2000).
- Anita Garibaldi: Uma Heroína Brasileira, by Paulo Markun (1999).
- Anita, Anita: Garibaldi of the New World, a novel by Dorothy Bryant (1993).
- Garibaldi e Anita: Corsari, by Lucio Lami (1991).
- L'Amazzone Rossa, by Giuseppe Marasco (1982).
- Aninha do Bentão, by Walter Zumblick (1980).
- I am my beloved: The Life of Anita Garibaldi, by Lisa Sergio (1969).
- Anita Garibaldi, by Giuseppe Bandi (1889).
- Autobiography, by Giuseppe Garibaldi, trans. A Werner (1971, 1889).
- The Memoirs of Garibaldi, by Giuseppe Garibaldi and Alexandre Dumas (1931, 1861)
- Anita Garibaldi - vita e morte (life and death), by Isidoro Giuliani and Antonio Fogli. Ed. Marcabò (2001)
- Marloes Geboers - 'visual representation of Anita Garibaldi on Social media' in: emotional hashtags (2018). Winterschool datasprint (Amsterdam).
- Maarten van Gestel - "Gamification of Anita Garibaldi" (NRC 2018).
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் அனிதா கரிபால்டி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.