அமிர்தேசுவரர் கோயில், அமிர்தபுரம்

அமிர்தேசுவரர் கோவில் (Amrutesvara Temple) அல்லது "அம்ருதேசுவரர்" என்றும் உச்சரிக்கப்படும் இது இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்திலுள்ள சிக்மகளூர் நகரத்திற்கு வடக்கே 67 கிமீ தொலைவில் அமிர்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அமிர்தபுரம் தேசிய நெடுஞ்சாலை 206 இல் ஹாசனிலிருந்து 110 கிமீ தொலைவிலும், சிமோகாவிலிருந்து 50 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கோவில் போசள மன்னன் இரண்டாம் வீர வல்லாளன் காலத்தில் பொ.ஊ. 1196 இல் கட்டப்பட்டது.[1]

அமிர்தேசுவரர் கோயில், அமிர்தபுரம்
கிராமம்
ஏககூடம (தனி சன்னதி) அமிர்தேசுவரர் கோயில், (1196), சிக்மகளூரு மாவட்டம்
ஏககூடம (தனி சன்னதி) அமிர்தேசுவரர் கோயில், (1196), சிக்மகளூரு மாவட்டம்
அமிர்தேசுவரர் கோயில், அமிர்தபுரம் is located in கருநாடகம்
அமிர்தேசுவரர் கோயில், அமிர்தபுரம்
அமிர்தேசுவரர் கோயில், அமிர்தபுரம்
கர்நாடகாவில் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°44′28″N 75°51′14″E / 13.741°N 75.854°E / 13.741; 75.854
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிக்மகளூரு
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

அம்ருதேஸ்வரர் கோவில்

தொகு
 
அமிர்தேசுவரர் கோயில் பொ.ஊ. 1196 )
 
அமிர்தேசுவரர் கோயிலில் தூண்களுடன் கூடிய திறந்த மண்டபம்
 
அமிர்தேசுவரர் கோயில் விமானத்திலுள்ள கீர்த்திமுகங்கள்
 
அமிர்தபுரத்தில் உள்ள அமிர்தேசுவரர் கோயிலிலுள்ள பழைய கன்னட கல்வெட்டு (பொ.ஊ. 1196).

போசளக் கட்டிடக்கலைப்படி கட்டப்பட்ட இந்த ஆலயம், பரந்த திறந்த மண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது.[2] கோயிலின் அசல் வெளிப்புற சுவருடன் சமமான இடைவெளியில் வட்ட வடிவ வேலைப்பாடுகள் உள்ளன. கோயிலில் ஒரு விமானம் உள்ளது. எனவே இது ஒரு ஏககூட தனி சன்னதியாகக் கட்டப்பட்டுள்ளது.[3] ஒரு மூடிய மண்டபம் உள்ளது, இது கருவறையை பெரிய திறந்த மண்டபத்துடன் இணைக்கிறது.

மண்டபத்தின் அமைப்பு மற்றும் அளவு பெலவாடி, வீர நாராயண கோவிலைப் போன்ற சில வாஸ்து அம்சங்களைக் கொண்ட நடுத்தர அளவிலான போசளர் காலக் கோயிலாகும். திறந்த மண்டபத்தில் இருபத்தி ஒன்பது விரிகுடாக்கள் உள்ளன.[4] மூடிய மண்டபத்தில் ஒன்பது விரிகுடாக்கள் உள்ளன. அவை தெற்குப் பக்கத்தில் ஒரு தனி சன்னதிக்குச் செல்கிறது. சன்னதி சதுர வடிவில் கட்டப்பட்டு அதன் மேல் விமானமு உள்ளது. இது கீர்த்திமுகங்கள், சிறிய அலங்கார கோபுரங்கள் ஆகியவற்றின் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேற்கட்டுமானத்திற்கு கீழே, பொதுவாகக் காணப்படும் இந்து தெய்வங்களின் சிலைகள் இல்லை. சுவரின் அடிப்பகுதியில் ஐந்துவடிவமைப்புகள் உள்ளன. இது கலை விமர்சகர் போகேமாவின் கூற்றுப்படி "பழைய போசளர் பாணி" ஆகும்.[5] கருவறையை மூடிய மண்டபத்துடன் இணைக்கும் முன்மண்டபத்தின் மேல் உள்ள கோபுரத்தில்[6] சிங்கத்துடன் சண்டையிடும் "சாலா" என்ற அசல் போசளச் சின்னம் உள்ளது.[7][8]

தாழ்வாரத்திற்கு அருகில் உள்ள பெரிய கல்வெட்டு, இடைக்கால கன்னட கவிஞர் ஜன்னாவால் இயற்றப்பட்ட கவிதைகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Amritesvara Temple". Archaeological Survey of India, Bengaluru Circle. ASI Bengaluru Circle. Archived from the original on 26 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 26 July 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Foekema (1996), p37
  3. Quote:"Depending on the number of towers, temples are classified as ekakuta (one), dvikuta (two), trikuta (three), chatushkuta (four) and panchakuta (five). The last two types are rare. Sometimes a trikuta temple is literally not trikuta as only the central of three shrines may have a superstructure", Foekema (1996), p25
  4. Quote:"A bay is a square or rectangular compartment in the hall", Foekema (1996) p36, p93
  5. Quote:"In a typical "older style" that was popular throughout most of the 12th century Hoysala temples, there is one set of eaves where the tower meets the wall of the shrine. The eaves runs all around the temple. Eaves is a projecting roof overhanging the temple wall. Below the eaves are decorated miniature towers on pilasters. Below these towers are the wall panels of Hindu Gods, Goddesses and their attendants. Below these panels are the five mouldings", Foekema (1996), p28
  6. Foekema(1996), p22
  7. Foekema (1996), p22
  8. According to Kamath, Sala fights a tiger. According to historians such as C. Hayavadhana Rao, J Duncan M Derrett and B. R Joshi, "Sala" was the mythical founder of the empire, Kamath (2001), p123

இதனையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு