அயோத்தியாபட்டினம்

அயோத்தியாபட்டினம் (ஆங்கிலம்:Ayothiapattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி தாலுகாவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அயோத்தியாப்பட்டின ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு செயல்படுகிறது. இங்கு அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில் உள்ளது.

அயோத்தியாபட்டினம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் வாழப்பாடி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

11,517 (2011)

1,152/km2 (2,984/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi)

அமைவிடம்தொகு

அயோத்தியாபட்டினம் பேரூராட்சி, சேலத்திலிருந்து 10 கிமீ தொலைவிலும்; வாழப்பாடியிலிருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

10 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,982 வீடுகளும், 11,517 மக்கள்தொகையும், எழுத்தறிவு 79%, பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1,011 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,473 மற்றும் 80 ஆக உள்ளனர்.[4] [5]

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. Ayothiapattinam Town Panchayat
  5. Ayothiapattinam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோத்தியாபட்டினம்&oldid=2742078" இருந்து மீள்விக்கப்பட்டது