அய்ஜாஸ் அகமது

இலக்கியக் கோட்பாட்டாளர், அரசியல் விமர்சகர்

அய்ஜாஸ் அகமது (Aijaz Ahmad, 1941 - 9 மார்ச் 2022) என்பவர் இந்தியாவில் பிறந்த மார்க்சிய மெய்யியலாளர், இலக்கியக் கோட்பாட்டாளர், அரசியல் விமர்சகர் ஆவார். இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், இர்வின் மனுடவியல் பள்ளியின் ஒப்பீட்டு இலக்கியத் துறையின் பேராசிரியராக இருந்தார். [1]

அகமது 2013 இல் விரிவுரை ஆற்றுகிறார்

துவக்க வாழ்க்கை, குடும்பம், கல்வி தொகு

அய்ஜாஸ் அகமது 1941 ஆம் ஆண்டு பிரித்தானிய இராச்சியத்தின், முசாபர்நகரில் பிறந்தார் [2] இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து தனது பெற்றோருடன் பாகித்தானுக்குக் குடிபெயர்ந்தார்.

தொழில் தொகு

இந்தியாவின் புது தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் சமகால வரலாற்று ஆய்வு மையத்தின் மதிப்புறு பேராசிரியராகவும், புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வு மையத்தின் வருகைதரு பேராசிரியராகவும், கனடாவின்,டொராண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் வருகைதரு பேராசிரியராகவும் இருந்தார். இவர் பிரண்ட்லைனில் தலையங்க ஆலோசகராகவும் நியூஸ்க்ளிக் என்ற செய்தி இணையதளத்தில் மூத்த செய்தி ஆய்வாளராகவும் பணியாற்றினார். [3] [4]

பணிகள் தொகு

மார்க்சிய மெய்யியலில் நின்று உலக நிகழ்வுகளை, உரிமைப் போராட்டங்களை, இடதுசாரி இயக்கங்களின் சாதக பாதக அம்சங்களை அலசி ஆராய்வதில் அய்ஜாஸ் அகமதுவின் காலத்தில் தன்னிகரற்ற சிந்தனையாளராக செயல்பட்டார். பொதுவுடமை அமைப்புகளின் செயல்பாடுகளை திறணாய்வு செய்யும் அதே வேளையில், மார்க்சியத்தின் இயங்கியல் அடிப்படையில் செல்ல வேண்டிய பாதைகளுக்கான ஒளியை சிறந்த முறையில் பாய்ச்சுவார்.

இந்தியாவில் பின்நவீனத்துவக் கோட்பாடு அறிமுகமானபோது, பல மார்க்சியச் சிந்தனையாளர்களெல்லாம் அதை வியந்து விதந்தோதத் தொடங்கியபோது, பின்நவீனத்துவக் கோட்பாடு உண்மையில் மார்க்சியச் சிந்தனைக்கு முந்தைய சிந்தனைப் போக்கு (Postmodernism is Pre-Marxism) என எடுத்துரைத்தார். மார்க்சிய பொதுவடமைக் கட்சியின் மையக் குழு உறுப்பினர்களுக்குப் பின்நவீனத்துவம் குறித்து இவர் பாடம் எடுத்தார்.[5]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மறைவு தொகு

அகமது தனது 81வது வயதில் 2022 மார்ச் 9 அன்று கலிபோர்னியாவின் இர்வின் நகரில் காலமானார். மூப்பு தொடர்பான நோய்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார். [2][6]

நூல் பட்டியல் தொகு

  1. In Theory: Classes, Nations, Literatures - Verso, 1992.
  2. A World To Win: Essays on the Communist Manifesto - with Irfan Habib and Prabhat Patnaik, LeftWord Books, 1999.
  3. Lineages of the Present: Ideological and Political Genealogies of Contemporary South Asia - Verso, 2001.
  4. On Communalism and Globalization: Offensives of the Far Right - Three Essays Collective, New Delhi, 2002.
  5. Iraq, Afghanistan and the Imperialism of Our Time - LeftWord Books, New Delhi, 2004.
  6. In Our Time: Empire, Politics, Culture - Verso, 2007

பதிப்பித்தவை

  1. Ghazals of Ghalib - ed. by Aijaz Ahmad. Oxford India, 1995. (With translations from the Urdu by Aijaz Ahmed, W.S. Merwin, Adrienne Rich, William Stafford, David Ray, Thomas Fitzsimmons, Mark Strand, and William Hunt)
  2. A Singular Voice: Collected Writings of Michael Sprinker - Editor (with Fred Pfeil and Modhumita Roy), 2000.

குறிப்புகள் தொகு

  1. School of Humanities at University of California, Irvine(April 20, 2016). "Aijaz Ahmad joins UC Irvine's Department of Comparative Literature". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: March 10, 2022.
  2. 2.0 2.1 Patnaik, Prabhat (2022-03-10). "A true Marxist intellectual, Aijaz Ahmed’s scholarship encompassed several disciplines" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/a-true-marxist-intellectual-aijaz-ahmeds-scholarship-encompassed-several-disciplines/article65211007.ece. 
  3. ഡെന്നിസ്, സുബിന്‍. "എജാസ് അഹമ്മദിനെ വായിക്കേണ്ടതുണ്ട്; ഇന്നിന്റെ ലോകത്തെ മനസ്സിലാക്കാനും ദിശ മാറ്റിത്തീർക്കാനും" [Ajaz needs to read Ahmed; To understand and change the direction of today's world]. Mathrubhumi.com (in Malayalam). பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Renowned Marxist philosopher Aijaz Ahmad passes away". 10 March 2022. https://english.mathrubhumi.com/news/india/renowned-marxist-philosopher-aijaz-ahmad-passes-away-1.7330768. பார்த்த நாள்: 10 March 2022. 
  5. ஜி. செல்வா, கட்டுரை, அய்ஜாஸ் அகமது: பன்முக மார்க்சியச் சிந்தனையாளர், இந்து தமிழ், 2022, மார்ச், 13
  6. "Aijaz Ahmad, a great intellectual and philosopher of our times is no more: Tarigami" (in en-GB). knskashmir.com. 2022-03-10. http://www.knskashmir.com/aijaz-ahmad--a-great-intellectual-and-philosopher-of-our-times-is-no-more--tarigami-123318. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்ஜாஸ்_அகமது&oldid=3402574" இலிருந்து மீள்விக்கப்பட்டது