அரசு பிரென்னன் கல்லூரி
பிரென்னன் கல்லூரி (Brennen College) என்பது கேரளாவிலுள்ள உள்ள ஓர் கல்வி நிறுவனமாகும். இது கண்ணூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இது இந்தியாவின் கேரள மாநிலத்தின் தலச்சேரியிலுள்ள தர்மடம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. தலச்சேரி துறைமுகத்தின் முதன்மை உதவியாளரான ஆங்கிலேய பரோபகாரர் எட்வர்ட் பிரென்னன் நிறுவிய பள்ளியிலிருந்து இந்த கல்லூரி உருவானது. அவர் தலசேரியை தனது வீடாக மாற்றிக் கொண்டார். 125 ஆண்டுகளுக்கும் மேலான கல்லூரியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 2016 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவால் இந்த கல்லூரிக்கு சிறப்பு பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.[2] தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் அகில இந்திய தரவரிசையில் இந்த கல்லூரி 97 வது இடத்தைப் பிடித்துள்ளது.
Other name | பிரென்னன் |
---|---|
குறிக்கோளுரை | "Knowledge is Power" |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1862 |
முதல்வர் | சி. பாபுரா |
அமைவிடம் | |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | brennencollege |
வரலாறு
தொகுஅரசு பிரென்னன் கல்லூரி, 1862 ஆம் ஆண்டில் தலச்சேரி துறைமுகத்தின் முதன்மை உதவியாளரான எட்வர்ட் பிரென்னனால் நிறுவப்பட்ட இலவச பள்ளியிலிருந்து உருவாக்கப்பட்டது. இது 1890 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இரண்டாம் நிலை கல்லூரியாக உயர்த்தப்பட்டது. இந்த நிறுவனம் 1947 இல் முதல் தரக் கல்லூரியாக மாறியது. மேலும் இது 1958 இல் தர்மடத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.[3]
வளாகம்
தொகுபிரென்னன் கல்லூரி வளாகம் தலச்சேரி நகருக்கு வடக்கே 5 கி. மீ. தொலைவிலும், கண்ணூர்-தலச்சேரி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 1 கி. மீ தொலைவிலும் தர்மடம் பேரூராட்சியில் அமைந்துள்ளது.[4] இந்த வளாகத்தில் 34.5 ஏக்கர் (140,000 சதுர மீட்டர்) நிலப்பரப்பில் கல்வித் துறைகள், நிர்வாக அலுவலகம், மத்திய நூலகம், மாணவர் விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன.
பிரென்னன் நூலகம்
தொகுபிரென்னன் கல்லூரியில் சுமார் 21600 புத்தகங்களைக் கொண்ட ஒரு மத்திய நூலகம் உள்ளது. இதில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முக்கியமாக மங்களூரிலுள்ள பாசெல் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட பல அரிய மற்றும் கிடைக்காத மலையாள நூல்கள் உள்ளன.[5] இந்த நூலகம் 2004 ஆம் ஆண்டில் இந்த மலையாள வெளியீட்டின் மின்னணு பட்டியலைத் தயாரித்துள்ளது. உள்ளூர் எழுத்துக்களில் தேடல் பொறிமுறையைக் கொண்ட முதல் மின்னணு பட்டியல் இதுவாகும். பிராந்திய ஆய்வுகளுக்கான குறிப்புக்கான தனித்துவமான ஆதாரமாக இந்த நூலகம் உள்ளது.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
தொகு- ஏ. கே. கோபாலன், பொதுவுடைமை தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
- பிணறாயி விஜயன், அரசியல்வாதி மற்றும் கேரளாவின் தற்போதைய முதலமைச்சர் [6]
- கே. கே. ராமச்சந்திரன் மாஸ்டர், கேரள அரசின் முன்னாள் அமைச்சர்.
- கு. சுதாகரன், தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்
- பி. சதிதேவி , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
- வி. முரளிதரன், அரசியல்வாதி மற்றும் தற்போதைய மத்திய அமைச்சர்
- அக்பர் கக்கட்டில், எழுத்தாளர்
- ஏ. கே. பாலன், கேரள முன்னாள் சட்ட அமைச்சர்
- ஏ. கே. பிரேமாஜம், அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்
- வி. உன்னிகிருஷ்ணன் நாயர், கவிஞர்
- ஏ. என். ஷம்சீர், மாண்புமிகு சபாநாயகர், கேரள சட்டப்பேரவை
- .ஈ. அகமது, முன்னாள் மத்திய அமைச்சரும், கேரளாவில் மிக நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும் ஆவார்.
- ஜேம்ஸ் மேத்யூ, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், அரசியல்வாதி
- தயாத் சங்கரன், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி
- கே. தயாத், எழுத்தாளர்
- என். பிரபாகரன், எழுத்தாளர்
- புனத்தில் குஞ்ஞப்துல்லா, எழுத்தாளர்
- இராஜன் குருக்கள், வரலாற்றாசிரியர்
- ஷிஹாபுதீன் போய்தும்கடவு, எழுத்தாளர்
- வாழக்குளங்கரயில் காலித், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் காஷ்மீரின் பொறுப்பு ஆளுநர்
- வி. ஆர். சுதீசு, எழுத்தாளர்
- ச. ஆ. பவானி தேவி, வாள்வீச்சு வீராங்கனை
மேற்கோள்கள்
தொகு- ↑ "GOVT. BRENNEN COLLEGE".
- ↑ "Brennan College conferred special heritage status | Kozhikode News - Times of India". The Times of India.
- ↑ "GOVERNMENT BRENNEN COLLEGE". www.brennencollege.ac.in.
- ↑ "GOVERNMENT BRENNEN COLLEGE".
- ↑ "GOVERNMENT BRENNEN COLLEGE".
- ↑ "A college that moulded the CM Pinarayi Vijayan, and many more". Deccan Chronicle. 21 May 2016. Archived from the original on 22 May 2016.