அல் மக்தாஸ்

அல்-மக்தாஸ் அல்லது பெத்தானி (Al-Maghtas (அரபு மொழி: المغطس‎, அரபு மொழியில் திருமுழுக்கு. அலுவல் பூர்வமாக திருமுழுக்கு தலமான இதனை ஜோர்டான் நாட்டிற்கு வெளியே பெத்தானி என்றழைக்கப்படுகிறது. யுனெஸ்கோவால் 2015ம் ஆண்டில் உலகப்பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட இப்புனிதத் தலம், ஜோர்டான் நாட்டின் பல்கா ஆளுநரகத்தில் பாயும் ஜோர்டான் ஆற்றின் கிழக்கு கரையில் உள்ளது. இத்தலத்தில் உள்ள ஜோர்டான் ஆற்றில் திருமுழுக்கு யோவான், இயேசு கிறிஸ்துவிற்கு திருமுழுக்கு செய்வித்தார் என விவிலியம் மூலம் அறியப்படுகிறது. இங்கு உரோமைப் பேரரசு மற்றும் பைசாந்தியப் பேரரசு காலத்திய தேவாலயங்களின் இடிபாடுகள், ஒரு துறவிமடம் மற்றும் திருமுழுக்கு குளங்கள் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.[1][2][3]

அல்-மக்தாஸ்
பெத்தானி
உள்ளூர் பெயர்
அரபு: المغطس
ஞானஸ்தானம் தளத்தின் அகழாய்வு
அமைவிடம்பல்கா ஆளுநரகம், ஜோர்டான்
ஆள்கூற்றுகள்31°50′14″N 35°33′01″E / 31.837109°N 35.550301°E / 31.837109; 35.550301
இணையதளம்www.baptismsite.com
அல் மக்தாஸ் is located in ஜோர்தான்
அல் மக்தாஸ்
ஜோர்தான் இல் அல்-மக்தாஸ்
பெத்தானி அமைவிடம்
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
அலுவல்முறைப் பெயர்இயேசு திருமுழுக்கு பெற்ற தலம்; ஜோர்டானுக்கு வெளியே பெத்தானி என்பர் (ஜோர்டானில் அல்-மக்தாஸ் என்பர்)
கட்டளை விதிபண்பாட்டுக் களம்: (iii)(vi)
உசாத்துணை1446
பதிவு2015 (39-ஆம் அமர்வு)
பரப்பளவு294.155 ha (1.13574 sq mi)
Buffer zone957.178 ha (3.69568 sq mi)

அல்-மக்தாஸ் இரண்டு முக்கிய தொல்பொருள் களங்களை உள்ளடக்கியது: ஜபல் மார்-எலியாஸ் (எலியா மலை) என்று அழைக்கப்படும் ஒரு மேட்டின் மீது உள்ள மடாலயத்தின் எச்சங்கள் மற்றும் தேவாலயங்கள், திருமுழுக்கு குளங்கள் மற்றும் யாத்ரீகர்கள் மற்றும் துறவிகளின் குடியிருப்புகளின் எச்சங்களைக் கொண்ட ஜோர்டான் ஆற்றுக்கு அருகில் உள்ளது.[3] இரண்டு பகுதிகளும் வாடி கர்ரர் என்ற நீரோடை மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

ஜெருசலேமுக்கும் அரசர்களின் நெடுஞ்சாலைக்கும் இடையே உள்ள மூலோபாய இடம், இஸ்ரேலியர்கள் ஜோர்டானைக் கடப்பதைப் பற்றிய யோசுவா புத்தகம் மூலம் தெளிவாகத் தெரிகிறது. ஜபல் மார்-எலியாஸ், எலியா தீர்க்கதரிசி சொர்க்கத்திற்கு ஏறிய இடமாக பாரம்பரியமாக அடையாளப்படுத்தப்படுகிறது. 1967 ஆறு நாள் போருக்குப் பிறகு, ஜோர்டான் ஆற்றின் இருகரைகளும் முழுவதுமாக இஸ்ரேல் வசம் சென்றது.

1994ல் இஸ்ரேல்-ஜோர்டான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஜோர்டானிய இளவரசர் காசியின் முயற்சியால் அப்பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.[4] அதன் பின்னர் அல்-மக்தாஸ் எனப்படும் பெத்தானி தளம் பல தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளைக் கண்டுள்ளது. மூன்று திருத்தந்தைகள் (ஜான் பால் II, பெனடிக்ட் XVI, மற்றும் பிரான்சிஸ்) மற்றும் பல நாட்டுத் தலைவர்களின் வருகைகள்,[9] மற்றும் சுற்றுலாப் பயணிகளையும், புனித யாத்தீரிகர்களையும் ஈர்க்கிறது.[10] 2015 ஆம் ஆண்டில், ஜோர்டான் ஆற்றின் மேற்குப் பகுதியைத் தவிர்த்த, கிழக்கு கரை பகுதியை மட்டும் 2015ம் ஆண்டில் யுனெஸ்கோ மன்றம் உலகப் பாரம்பரியத் தளமாக் அறிவித்தது.[2][5]

2016ஆம் ஆண்டில் ஏறத்தாழ 81,000 பேர் அல்-மக்தாஸ் பகுதிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலும் ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் அரேபிய சுற்றுலாப் பயணிகள் ஆவார். எபிபானி விடுமுறையைக் கொண்டாட சனவரி 6 அன்று ஆயிரக்கணக்கானோர் இந்த தளத்திற்கு வருகிறார்கள்.

பெயர்கள்

தொகு

பெத்தானி

தொகு

யோவானின் நற்செய்தியிலிருந்து ஜோர்டானுக்கு அப்பால்" அல்லது அல்லது "ஜோர்தான் முழுவதும்" என்ற பெயரில் ஒரு இடத்தைக் குறிப்பிடுகிறது:

யோவான் 1:28: யோர்தானுக்கு அப்பால் யோவான் திருமுழுக்கு கொடுத்துக்கொண்டிருந்த பெத்தானியாவில் நடந்தது. புதிய ஏற்பாட்டில் "ஜோர்டானின் கிழக்குக் கரையில் உள்ள பெத்தானியா" பற்றிய ஒரே குறிப்பு இதுதான். யோவான் 10:40 அவர் இயேசு மீண்டும் யோர்தானைக் கடந்து யோவான் முன்பு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார், அங்கே அவர் தங்கினார்.

"பெத்தானி" என்பது பெத்-அனனியா, எபிரேய மொழியில் "ஏழைகளின்/பாதிக்கப்பட்டவர்களின் வீடு" என்பதாகும். புதிய ஏற்பாட்டில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ள ஒலிவ மலையில் அமைந்துள்ள வேறு நகரத்துடன் "பெத்தானியா" என்ற பெயர் பகிரப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டின் பெரும்பாலான ஆங்கிலப் பதிப்புகள் "ஜோர்டான் ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ள பெத்தானியா" என்பதைக் குறிப்பிடுகின்றன.

அல்-மக்தாசை புதுப்பிக்கும் ஜோர்டான்

தொகு

இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற 2,000ம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில் 2030ம் ஆண்டில் ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களை அல்-மக்தாஸுக்கு ஈர்க்கும் நோக்கத்துடன் ஜோர்டான் நாடு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு திட்டத்தை அறிவித்ததுள்ளது.

ஜோர்டான் ஆறு மற்றும் அதன் பள்ளத்தாக்கு யூதர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை அங்கீகரிக்கும் வகையில், அந்தப் பகுதியில் ஒரு விவிலிய கிராமம் மற்றும் மிகப்பெரிய கிறிஸ்தவ புனித யாத்திரை மற்றும் மத வேறுபாடற்ற சமூக மையம் அமைக்க ஜோர்டான் திட்டமிட்டுள்ளது.

ஜான் மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கு கிடைத்த அனுபவத்தை எங்களது பார்வையாளர்கள் மற்றும் புனித யாத்திரீகர்களுக்கும் கிடைக்கச் செய்வது சிறப்பு வாய்ந்தது எனக்கருதுகிறது ஜோர்டான் நாடு. ஜோர்டானிய அதிகாரிகளின் அழைப்பை ஏற்று, பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகள் தெளிவான திட்டமிடலுடன் இங்கு புதிய தேவாலயங்களைக் கட்டியுள்ளன. இது மத்திய கிழக்கில் மிக அரிதான ஒன்று.[6]

அல்-மக்தாஸ் தளத்தின் நிர்வாகம்

தொகு

அல்-மக்தாஸ் எனும் திருமுழுக்கு தளத்தை, ஜோர்டான் மன்னரால் நியமிக்கப்பட்ட அறங்காவலர் ஆணையம் நிர்வகிக்கப்படுகிறது.[7] 2016-2017ம் ஆண்டில் ஏறக்குறைய 81,000 பேர் இத்தளத்தைப் பார்வையிட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது, இது 2015 ஆம் ஆண்டை விட 23% அதிகமாகும். இது பெரும்பாலும் ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் அரேபிய சுற்றுலாப் பயணிகளால் ஈர்க்கப்படுகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Baptism Site "Bethany Beyond the Jordan" (Al-Maghtas) – UNESCO World Heritage Centre". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 6 December 2015.
  2. 2.0 2.1 Tharoor, Ishaan (July 13, 2015). "U.N. backs Jordan's claim on site where Jesus was baptized". The Washington Post. https://www.washingtonpost.com/news/worldviews/wp/2015/07/13/u-n-backs-jordans-claim-on-site-where-jesus-was-baptized/. 
  3. "The Discovery of Bethany Beyond the Jordan River (Wadi Al-Kharrar)". Journals.ju.edu.jo. Archived from the original on 2015-04-0. பார்க்கப்பட்ட நாள் 2015-04-29. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "UNESCO backs Jordan River as Jesus' baptism site". Al Arabiya News. Associated Press (Dubai, United Arab Emirates). 13 July 2015. http://english.alarabiya.net/en/perspective/features/2015/07/13/UNESCO-backs-Jordan-as-Jesus-baptism-site-.html. 
  5. "Jesus' Baptism at Jordan River Named 'World Heritage Site;' but UNESCO Says Only on Jordanian Side, Not Israel". Christian Post. 13 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-12-07.
  6. இயேசு ஞானஸ்நானம் பெற்ற இடத்தை பிரமாண்டமாக புதுப்பிக்கும் இஸ்லாமிய நாடு - என்ன காரணம்?
  7. about-us.html வரலாறு மற்றும் தகவல்: எங்களைப் பற்றி|[https://web.archive.org/web/20160114220119/http://baptismsite.com/index.php/about-us.html பரணிடப்பட்டது 2016-01-14 at the வந்தவழி இயந்திரம், அணுகப்பட்டது 10 பிப்ரவரி 2016

உசாத்துணை

தொகு
Piccirillo, Michele; Alliata, Eugenio (1999). The Madaba Map Centenary 1897-1997. Travelling through the Byzantine Umayyad Period. Proceedings of the International Conference Held in Amman, 7-9 April 1997. Collectio Maior. Vol. 40. Jerusalem: Franciscan Printing Press.
    • Alliata, Eugenio (1999). The Pilgrimage Route During Byzantine Period in Transjordan. p. 122. Archived from the original on 23 October 2015. பார்க்கப்பட்ட நாள் 9 December 2015. ... the construction of a new church on the more accessible west bank of the river succeeded in attracting the toponym as it appears also in the Madaba map. The new church of the "Prodromos" was built by the Emperor Anastasius (AD 491–518) as the pilgrim and archdeacon Theodosius [518–530] reports. Starting from the sixth century a major festival took place there on the feast of Epiphany (January 6). It is well described by the pilgrim of Piacenza [570s] and, without a doubt, many people also from the eastern side of the Jordan took part in this annual event.
    • Piccirillo, Michele (1999). Aenon, where now is Sapsaphas - (Wadi Kharrar). pp. 219–220. Archived from the original on 25 December 2003. பார்க்கப்பட்ட நாள் 31 July 2022. In 1106 Abbot Daniel a Russian pilgrim was well impressed by the place.... The place was later abandoned for security reasons. However, the memory of the place was not lost;.... in the year 1400 AD....

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Baptism place
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_மக்தாஸ்&oldid=4041027" இலிருந்து மீள்விக்கப்பட்டது