அஸ்கோட்
அஸ்கோட் (Askot or Askote (இந்தி: असकोट) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில் அமைந்த பிதௌரகட் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும். இமயமலையில் 1,106 மீட்டர் (3,629 அடி) உயரத்தில் அமைந்த அஸ்கோட் சிற்றூர் இந்திய-நேபாள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.
அஸ்கோட் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 29°46′N 80°21′E / 29.77°N 80.35°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | பிதௌரகட் |
ஏற்றம் | 1,106 m (3,629 ft) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 262543 |
வாகனப் பதிவு | UK |
இணையதளம் | uk |
பிதௌரகட்-தார்ச்சுலா இடையே அமைந்த அஸ்கோட் சிற்றூர் அருகே கஸ்தூரி மான் காப்பகம் இங்குள்ளது. கயிலை மலை-மானசரோவர் யாத்திரை செல்பவர்கள், அஸ்கோட் வழியாகச் செல்லும் தார்ச்சுலா-லிபுலேக் சாலையை பயன்படுத்துவர். மேலும் பஞ்சாபின் தென்மேற்கில் உள்ள மலௌத் நகரத்தையும், உத்தராகண்ட்டின் அஸ்கோட் நகரத்தையும் தேசிய நெடுஞ்சாலை 9 இணைக்கிறது. இது சாரதா ஆற்றின் கரையில் உள்ளது. இதனருகே பஞ்சசூலி, சிப்லாகோட் சிற்றூர்கள் உள்ளது.