ஆராவ் (மக்களவை தொகுதி)

ஆராவ் (மலாய்: Arau; ஆங்கிலம்: Arau; சீனம்: 阿劳) என்பது மலேசியா. பெர்லிஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P003) ஆகும்.[1]

ஆராவ் (P003)
மலேசிய மக்களவை தொகுதி
பெர்லிஸ்
Arau (P003)
Federal Constituency in Perlis
ஆராவ் மக்களவை தொகுதி
முக்கிய நகரங்கள்ஆராவ்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சிபெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்சகிடான் காசிம்
(Shahidan Kassim)
வாக்காளர்கள் எண்ணிக்கை60,876
தொகுதி பரப்பளவு222 ச.கி.மீ
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் ஆராவ் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (87.6%)
  இதர இனத்தவர் (2.3%)
ஆராவ் தொடருந்து நிலையம்

கங்கார் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி, கங்கார் தொகுதி 30 தேர்தல் மாவட்டங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[2]

பொது தொகு

ஆராவ் (மலாய்: Arau) மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஓர் அரச நகரம். பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான கங்கார் நகரில் இருந்து தென்கிழக்காக 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

பெர்லிஸ் மன்னரின் அரண்மனையும் (Royal Palace), அரச பள்ளிவாலும் (Perlis State Mosque) இந்த நகரில் உள்ளன. கோலாலம்பூரில் இருந்து தொடருந்து மூலமாக லங்காவி (Langkawi) தீவிற்குச் செல்ல விரும்பும் சுற்றுப் பயணிகள் ஆராவ் நகரில் இறங்கி, அதன் பின்னர் கோலா பெர்லிஸ் செல்கின்றனர். அங்கிருந்து லங்காவி தீவிற்குப் படகுகள் மூலமாகச் செல்ல வேண்டும்.

மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. மாரா தொழில்நுட்பக் கழகம் என்று முன்பு அழைக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு பலகலைக்கழகத் தகுதியைப் பெற்றது. 2023-ஆம் ஆண்டில், இந்தப் பல்கலைக்கழகத்தில் 5974 மாணவர்கள் 37 கல்வித் துறைகளில் பயில்கின்றனர்.[3]

ஆராவ் நாடாளுமன்றத் தொகுதி தொகு

ஆராவ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
ஆராவ் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு, பெர்லிஸ் உத்தாரா என்பதில் இருந்து மறுபெயரிடப்பட்டது
4-ஆவது 1974–1978 சையது அசன் சையது முகமது
(Syed Hassan Syed Mohamed)
பாரிசான் (அம்னோ)
5-ஆவது 1978–1982
6-ஆவது 1982–1986 அப்துல் அமீத் பாவன்தே
(Abdul Hamid Pawanteh)
7-ஆவது 1986–1990 சகிடான் காசிம்
(Shahidan Kassim)
8-ஆவது 1990–1995
9-ஆவது 1995–1998 கமருதீன் அகமது
(Kamarudin Ahmad)
1998–1999 அசீம் ஜாசின்
(Hashim Jasin)
மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்)
10-ஆவது 1999–2004 மசுதிகா சூனைதா உசின்
(Mastika Junaidah Husin)
பாரிசான் (அம்னோ)
11-ஆவது 2004–2008 சையத் ரசுலான் சையத் புத்ரா ஜமல்லுல்லைல்
(Syed Razlan Syed Putra Jamallullail)
12-ஆவது 2008–2013 இசுமாயில் காசிம்
(Ismail Kassim)
13-ஆவது 2013–2018 சகிடான் காசிம்
(Shahidan Kassim)
14-ஆவது 2018–2022
15-ஆவது 2022–தற்போது பெரிக்காத்தான் (பாஸ்)

மேற்கோள்கள் தொகு

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 1. Archived from the original (PDF) on 25 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 2022-10-31.
  3. Universiti Teknologi MARA, Cawangan Perlis, Kampus Arau, 02600 Arau, Perlis.

மேலும் காண்க தொகு

வார்ப்புரு:மலேசிய தேர்தல் தொகுதிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆராவ்_(மக்களவை_தொகுதி)&oldid=3927506" இலிருந்து மீள்விக்கப்பட்டது