ஆலம்கோடு, எடப்பல்
ஆலம்கோடு (Alamcode , also Alamkod) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1]
ஆலம்கோடு | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°43′58″N 76°01′47″E / 10.7328800°N 76.029650°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
அரசு | |
• வகை | உள்ளூர் நிர்வாகம் |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 30,118 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 679591 |
வாகனப் பதிவு | KL-53 |
மக்கள்தொகை
தொகு2001 இந்தியா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆலம்கோட்டின் மொத்த மக்கள் தொகை 30,118 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 14,364 என்றும், பெண்களின் எண்ணிக்கை 15,754 என்றும் உள்ளது.[1] ஆலம்கோடு ஊராட்சியானது திருச்சூர், மலப்புரம், பாலக்காடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. சங்கரம்குளம் காவல் நிலையம் ஆலம்கோடு ஊராட்சியில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
தொகுஆலம்கோடு சிற்றூரானது குட்டிப்புரம் நகரத்தின் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 66 எடப்பாள் வழியாகச் செல்கிறது. இச்சாலையானது வடக்கில் நீண்டு சென்று கோவா மற்றும் மும்பையுடன் இணைக்கிறது. சாலையானது தெற்கில் நீண்டு கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 966 பாலக்காடு மற்றும் கோயம்புத்தூரை இணைகிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள முக்கிய தொடருர்து நிலையம் குட்டிப்புரத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.