இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை

மலேசிய கூட்டரசு சாலை 52

இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 52; அல்லது Iskandar Coastal Highway) (ICH); (முன்னர்: ஜொகூர் பாரு மேற்கு கடற்கரை பூங்கா சாலை (Johor Bahru West Coast Parkway); மலாய்: Laluan Persekutuan Malaysia 52 அல்லது Lebuhraya Pesisir Pantai Iskandar (LPPI); என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டத்தில் உள்ள கூட்டரசு சாலை ஆகும்.[1]

மலேசிய கூட்டரசு சாலை 52
Malaysia Federal Route 52
Laluan Persekutuan Malaysia 52

இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை
Iskandar Coastal Highway
Johor Bahru West Coast Parkway
Lebuhraya Pesisir Pantai Iskandar

கோத்தா இசுகந்தர் நெடுஞ்சாலை (2016)
வழித்தட தகவல்கள்
நீளம்:23 km (14 mi)
இசுகந்தர் புத்தேரி–தங்கா விரிகுடா: 15 km (9.3 mi)
தங்கா விரிகுடா–நகர மையம்: 8 km (5.0 mi)

முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:இசுகந்தர் புத்திரி
 கோத்தா இசுகந்தர் சாலை

புக்கிட் இண்டா நெடுஞ்சாலை
1 சுகூடாய் நெடுஞ்சாலை
188 ஜொகூர் பாரு உள்வட்டச் சாலை
ஓங் ஆ பூக் சாலை

தஞ்சோங் புத்திரி சாலை
கிழக்கு முடிவு:ஜொகூர் பாரு நகர மையம்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கோத்தா இசுகந்தர்; பெர்லிங்; புக்கிட் இண்டா; தங்கா விரிகுடா
நெடுஞ்சாலை அமைப்பு

ஜொகூர் பாரு மாநகரத்தில் தற்போது மிகவும் பரபரப்பான சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.

பொது

தொகு

இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 0; இசுகந்தர் புத்திரியில் உள்ள லேடாங் வட்டச்சுற்று வழியில் அமைந்துள்ளது. இது ஒரு கட்டணமில்லா நெடுஞ்சாலை; மற்றும் இசுகந்தர் மலேசியா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை என்பது இசுகந்தர் மலேசியாவில் கிழக்கு-மேற்கு நோக்கிய ஐந்தாவது அதிவேக நெடுஞ்சாலை ஆகும்.

இசுகந்தர் மலேசியாவில் உள்ள இதர நெடுஞ்சாலைகள்:

அமைவு

தொகு

இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை என்பது ஜொகூர் பாரு மேற்கு கடற்கரை பூங்கா சாலை (Johor Bahru West Coast Parkway) என்று அழைக்கப்பட்டது. 8 கிமீ (5 மைல்) நீளம் கொண்ட அந்தக் கடற்கரை பூங்கா சாலை, சுகூடாய் நெடுஞ்சாலை கட்டப்படுவதற்கு முன்பு மலேசிய கூட்டரசு சாலை 1-இன்   ஒரு பகுதியாக இருந்தது.

இருப்பினும், 1965-இல் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, சிங்கப்பூர் மக்களுக்கான வணிக மையமாக ஜொகூர் பாரு மாற்றம் கண்டது. அதன் காரணமாக சுகூடாய் நெடுஞ்சாலை கட்டப்படுவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது.

சாலைத் தரம்

தொகு

இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]

விளக்கம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.

வெளி இணைப்புகள்

தொகு