சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Incheon International Airport, IIA) (ஐஏடிஏ: ICN, ஐசிஏஓ: RKSI) (கொரிய மொழி: 인천국제공항) தென் கொரியாவின் மிகப்பெரும் வானூர்தி நிலையமும் தலைநகரப் பகுதியான சியோலின் முதன்மை வானூர்தி நிலையமும் ஆகும். 2005ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகளவில் மிகச் சிறந்த நிலையமாக வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவால் தரப்படுத்தப்பட்டுள்ளது.[1][2] மேலும் உலகின் புகழ்பெற்ற வான்போக்குவரத்து ஆய்வு நிறுவனமான இசுக்கைடிராக்சு நிறுவனம் வழங்கும் ஐந்து நட்சத்திர தரத்தை எட்டிய உலகின் மூன்று பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.[3] இந்த வானூர்தி நிலையத்தில் குழிப்பந்தாட்டம்|குழிப் பந்தாட்ட மைதானம்]], குளியல் நீருற்றுக்கள், தனிப்பட்ட உறங்கும் அறைகள், பனிச்சறுக்கு அரங்கம், சூதாட்டரங்கம், உள்ளரங்கப் பூங்காக்கள், கொரியப் பண்பாட்டு அருங்காட்சியகம் ஆகியன உள்ளன. வானூர்தி நிலையத் தரவுகளின்படி சராசரி உட்செல்லல் 19 நிமிடங்களும் (உலக சராசரி 60 நிமிடங்கள்) வெளியேற்றம் 12 நிமிடங்களும் (உலக சராசரி 45 நிமிடங்கள்) எடுப்பதாக கோரப்படுகிறது. இது உலகளவில் சுங்கச்சோதனைகளுக்கான சாதனையாகவும் கருதப்படுகிறது.[1] இங்குள்ள சுங்கமில்லா அங்காடி மையம் தொடர்ந்து மூன்றாண்டுகளாக உலகில் மிகச் சிறந்ததாக பிசினஸ் டிராவெல்லர் மதிப்பிடுகிறது.[4] Incheon International Airport also claims that it has only a 0.0001% baggage mishandling rate.[5]
இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் 인천국제공항 仁川國際空港 Incheon Gukje Gonghang Inch'ŏn Kukche Konghang | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையச் சின்னம் | |||||||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||||||||||
உரிமையாளர் | தென் கொரிய அரசு | ||||||||||||||||||
இயக்குனர் | இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் (IIAC) | ||||||||||||||||||
சேவை புரிவது | சியோல் பெருநகரப் பகுதி (சுடோக்வான்) | ||||||||||||||||||
அமைவிடம் | இங்கியோன், தென் கொரியா | ||||||||||||||||||
மையம் |
| ||||||||||||||||||
உயரம் AMSL | 23 ft / 7 m | ||||||||||||||||||
இணையத்தளம் | www.airport.kr | ||||||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
உலங்கூர்தித் தளங்கள் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2012) | |||||||||||||||||||
|
சியோல் நகரத்தின் மேற்கே 48 km (30 mi) தொலைவில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் ஏசியானா எயர்லைன்ஸ், கொரியன் ஏர், ஜேஜு ஏர், போலார் ஏர் கார்கோ போன்ற வான் போக்குவரத்து நிறுவனங்களின் முனைய நடுவமாக விளங்குகிறது. இது ஆசியாவின் எட்டாவது பயணிகள் போக்குவரத்து மிகுந்த நிலையமாகவும் சரக்குப் போக்குவரத்தில் உலகின் நான்காவது நிலையமாகவும் உள்ளது. 2011இல் 35,062,376 பயணிகள் இந்நிலையத்தைப் பயன்படுத்தி உள்ளனர்.[6]
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 http://www.rustourismnews.com/?p=16016
- ↑ "Airport Service Excellence Awards". ACI website. Februar 27, 2008. பார்க்கப்பட்ட நாள் 24 September 2008.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Skytrax". பார்க்கப்பட்ட நாள் 29 April 2013.
- ↑ http://biz.chosun.com/site/data/html_dir/2013/01/11/2013011101435.html
- ↑ "25 Reasons Incheon International Airport is the Best Airport in the World". Seulistic. 12 July 2012. பார்க்கப்பட்ட நாள் 29 April 2013.
- ↑ "ACI releases World Airport Traffic Report 2010" (PDF). 1 August 2011. Archived from the original (PDF) on 24 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 April 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Incheon International Airport Official Site
- Incheon International Airport Foreign Carrier Cargo Terminal பரணிடப்பட்டது 2008-12-09 at the வந்தவழி இயந்திரம்
- Official Site of Korea Tourism Org.: Incheon பரணிடப்பட்டது 2018-06-25 at the வந்தவழி இயந்திரம்
- Korea City Air Terminal பரணிடப்பட்டது 2008-11-08 at the வந்தவழி இயந்திரம்
- Korea Airport Service
- உலக ஏரோ தரவுத்தளத்தில் RKSI குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.
- Incheon Airport Bus Guide & Map
- New Airport Highway Co. Incheon International Airport Expressway பரணிடப்பட்டது 2008-11-08 at the வந்தவழி இயந்திரம்
- Incheon International Airport Railroad (A'REX) பரணிடப்பட்டது 2009-12-31 at the வந்தவழி இயந்திரம்