இந்தியாவின் விவசாயத்தில் பெண்கள்
இந்தியாவின் விவசாயத்தில் பெண்கள் (Women in agriculture in India) வேளாண் உற்பத்திக்கு கட்டுப்பட்ட ஒரு தேசிய பாரம்பரியம் இந்தியாவில் உள்ளது. வடக்கில், சிந்து பள்ளத்தாக்கும் பிரம்மபுத்திரா பகுதிகளும், கங்கைஆரும்பருவமழையால் அலங்கரிக்கப்பட்ட முக்கியமான விவசாய பகுதிகளகும். 2011 உலக வங்கி தரவுகளின் அடிப்படையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 17.5% மட்டுமே விவசாய உற்பத்தியால் கணக்கிடப்படுகிறது. [1] இது நாட்டின் பெரும்பான்மையினரின் வாழ்க்கை முறையாகும். இது பெரும்பாலும் கிராமப்புற இந்தியாவில் வாழும் 1.1 பில்லியன் மக்களில் 72% மதிப்பீடாகும். [2]
இந்தியாவில் விவசாயம் பழக்கமான பாரம்பரியம், சமூக உறவுகள், பாலின பாத்திரங்கள் ஆகியவற்றை வரையறுக்கிறது. விவசாயத் துறையில் பெண்கள் ஈடுபடுவது என்பது, பாரம்பரிய அல்லது தொழில்துறை வழிமுறைகள், வாழ்வாதாரம் அல்லது விவசாயத் தொழிலாளர் மூலம், ஒரு குறிப்பிடத்தக்க மக்கள்தொகை குழுவைக் குறிக்கிறது. பொருளாதார சுதந்திரம், முடிவெடுக்கும் திறன்கள், நிறுவனங்கள் மூலம் கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் போன்ற பிரச்சினைகளுடன் விவசாயம் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறை வறுமை மற்றும் ஓரங்கட்டப்படுதல், பாலின சமத்துவமின்மை போன்ற சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
இந்திய விவசாயத்தின் பின்னணி
தொகு2012 தரவுகளின் அடிப்படையில், இந்தியா உலகின் நான்காவது பெரிய விவசாயத் துறையை கொண்டுள்ளது. இந்தியாவில் 180 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் உள்ளன. அதில் 140 மில்லியன் ஹெக்டேர் விதைக்கப்பட்டு தொடர்ந்து பயிரிடப்படுகிறது. ஆயினும்கூட, 1960கள் மற்றும் 70களில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் மற்றும் உலக வங்கியின் அழுத்தத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பசுமைப் புரட்சிக் கொள்கைகளின் சர்ச்சைக்குரிய தாக்கங்களால் இந்தியாவின் விவசாய விவரங்கள் நிழலாடுகின்றன.
உழைப்பின் பாலினப் பிரிவு
தொகுஇந்தியாவில், பெண் விவசாய தொழிலாளி அல்லது விவசாயியின் வழக்கமான வேலையானது விதைத்தல், நடவு செய்தல், களையெடுத்தல் மற்றும் அறுவடை போன்ற குறைந்த திறமையான வேலைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை வளர்ப்பு கட்டமைப்பிற்குள் நன்றாக பொருந்துகிறது. பருத்தி விதை உற்பத்தியில், அவர்கள் மகரந்தச் சேர்க்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பொறுமையும் சிறிது துல்லியமும் தேவைப்படுகிறது. விவசாயப் பணிகளில் பல பெண்கள் சம்பளமில்லாத வாழ்வாதார தொழிலாளர்களாகவும் பங்கேற்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, இந்தியப் பெண்களில் 32.8% பேர் மட்டுமே தொழிலாளர் குழுவில் முறையாகப் பங்கேற்கிறார்கள். இது 2009 புள்ளிவிவரங்களிலிருந்து நிலையானதாக உள்ளது. ஒப்பிடுகையில், ஆண்கள் 81.1%. [3]
எழுத்தறிவு
தொகுவேளான்மையில் ஈடுபடும் இந்தியப் பெண்களில் 52-75% பேர் படிப்பறிவில்லாதவர்களாக இருக்கின்றனர். கல்வித் தடையானது பெண்கள் அதிக திறமையான தொழிலாளர் துறைகளில் பங்கேற்பதைத் தடுக்கிறது. அனைத்து நடவடிக்கைகளிலும், சராசரி பாலின ஊதிய ஏற்றத்தாழ்வும் உள்ளது, பெண்கள் ஆண்களின் ஊதியத்தில் 70 சதவீதம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். [4] கூடுதலாக, பல பெண்கள் சம்பளமில்லாத வாழ்வாதார தொழிலாக விவசாய வேலைகளில் பங்கேற்கின்றனர். வேலைவாய்ப்பு இயக்கம் மற்றும் கல்வியின் பற்றாக்குறை விவசாய சந்தையின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை சார்ந்திருப்பதால், இந்தியாவில் பெரும்பான்மையான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். [5]
திருமணங்களும் சாதி ஏற்பாடும்
தொகுகிராமப்புற இந்தியாவில், குடும்பத்தில் பெண்களின் பங்கு சமூக அமைப்பு மற்றும் குடும்ப உறவுகளால் பெரிதும் வரையறுக்கப்படுகிறது. ஒவ்வொரு சாதி அமைப்பிற்கும் குறிப்பிட்ட திருமணங்கள்அவர்களின் பொருளாதார மதிப்பை நிர்ணயிக்கின்றன. வழக்கமான கிராமப்புற இந்திய குடும்பம் ஒரு ஆணாதிக்க மற்றும் பகுதிசார்ந்த குடும்பமாகும். இதில் ஒரு கணவர் அல்லது அவருக்கு பதிலாக மூத்த மகன் ஒரு குடும்பத்திற்கான முடிவுகளை எடுப்பார்.
இதையும் பார்க்கவும்
தொகு- இந்தியாவில் குடும்ப வன்முறை
- இந்தியாவில் வரதட்சணை முறை
- இந்தியாவில் பெண்கருக் கலைப்பு
- இந்தியாவில் பாலினப் பாகுபாடு
- இந்தியாவில் பாலின ஊதிய இடைவெளி
- தேசிய மகளிர் ஆணையம்
- இந்தியாவில் வன்கலவி
- இந்தியாவில் பெண்களுக்கான நலத்திட்டங்கள்
- இந்தியாவில் பெண்கள்
- இந்தியப் பாதுகாப்புப் படைகளில் பெண்கள்
- பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச் சட்டம்
மேற்கோள்கள்
தொகு- ↑ . (2011): http://devdata.worldbank.org/AAG/ind_aag.pdf பரணிடப்பட்டது 2010-05-29 at the வந்தவழி இயந்திரம்
- ↑ “Role of Farm Women In Agriculture: Lessons Learned,” SAGE Gender, Technology, and Development 2010 http://gtd.sagepub.com/content/14/3/441.full.pdf+html பரணிடப்பட்டது 2016-01-01 at the வந்தவழி இயந்திரம்
- ↑ UNHDR-2011
- ↑ "Women Empowerment (SAFE) - Roshni Sanstha - NGO in India". Roshni Sanstha (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 April 2021.
- ↑ Satyavathi, C. Tara; Bharadwaj, Ch.; Brahmanand, P.S. (2010). "Role of Farm Women In Agriculture: Lessons Learned." பரணிடப்பட்டது 2016-01-01 at the வந்தவழி இயந்திரம் SAGE Gender, Technology, and Development