இந்திய பெரும் புனுகுப்பூனை

இந்திய பெரும் புனுகுப்பூனை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: ஊனுண்னி
வரிசை: பெலிபார்மியா
குடும்பம்: விவ்ரெரிடே
பேரினம்: விவேரா
இனம்: வி. சிபேத்தா
இருசொற் பெயரீடு
விவேரா சிபேத்தா
லின்னேயஸ், 1758
இந்திய பெரும் புனுகுப்பூனை பரம்பல்

இந்திய பெரும் புனுகுப்பூனை (Large Indian civet)(விவேரா சிபேத்தா) என்பது தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு புனுகுப்பூனைச் சிற்றினம் ஆகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்பு பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த கவலை இனம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இதனுடைய உலக அளவில் குறைவதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் தொடர்ச்சியற்ற பரம்பல் காரணமாகவும், குறிப்பாகச் சீனா உள்ளிட்ட பகுதியில் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால் இதனுடைய எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது.[1].

சிறப்பியல்புகள் தொகு

 
மண்டை ஓடு

இந்திய பெரும் புனுகுப்பூனை சாம்பல் அல்லது பழுப்பு நிறமானது. தோள்களின் பின்னாலிருந்து வால் அடிப்பகுதி வரை கருப்பு முதுகுத்தண்டு பட்டையைக் கொண்டுள்ளது. முகவாய் முன்புறம் வெண்மை நிறத் திட்டு உள்ளது. கன்னம் மற்றும் முன் தொண்டை கருப்பாக காணப்படும். கழுத்தின் பக்கங்களும் கீழ் மேற்பரப்பு கருப்பு கோடுகளுடன், இடையில் வெள்ளை இடைவெளிகளுடன் காணப்படும். கருமைநிற வாலில் வெள்ளை வளையங்கள் மாறி மாறி அமைந்துள்ளது. இது தன் கால் நகங்களை உள்ளிழுக்ககூடியது. உள்ளங்காலில் உரோமங்கள் காணப்படும்.[2]

இதன் பொதுவான பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இது ஒப்பீட்டளவில் பெரிய புனுகுப்பூனை ஆகும்.இது விவெரா சிற்றினங்களில் மிகப்பெரியது மற்றும் ஆப்பிரிக்கப் புனுகுப்பூனை மற்றும் கரடிப் பூனை மட்டுமே விவேரிடே குடும்பத்தில் மிகப் பெரிய உயிரிகளாகும். இதன் தலை மற்றும் உடல் நீளம் 50–95 cm (20–37 அங்) வரை இருக்கும். வாலின் நீளம் 38–59 cm (15–23 அங்) ஆகும். பின்னங்காலின் அளவு 9–14.5 cm (3.5–5.7 அங்). இதன் எடை 3.4–9.2 kg (7.5–20.3 lb) வரை இருக்கும். சில சிற்றினங்கள் 11 kg (24 lb) வரை எடையுள்ளதாக இருக்கும் எனத் தரவுகள் கூறுகின்றன.[3][4][5]

பரவல் மற்றும் வாழ்விடம் தொகு

இந்திய பெரும் புனுகுப்பூனை, நேபாளம், வடகிழக்கு இந்தியா, பூட்டான், வங்காளதேசம் முதல் மியான்மர், தாய்லாந்து, மலாய் தீபகற்பம் மற்றும் சிங்கப்பூர் வரை கம்போடியா, லாவோஸ், வியட்நாம் மற்றும் சீனா வரை பரவியுள்ளது.[1]

நேபாளத்தில் இமயமலையில், இந்திய பெரும் புனுகுப்பூனை 2,250 m (7,380 அடி) வரை பதிவு செய்யப்பட்டது. இது இந்த நாட்டின் மிக உயரமான இடத்தில் காணப்பட்டது என்ற சாதனையாக உள்ளது.[6]

சீனாவில், இதன் உரோம வர்த்தகத்திற்காக வேட்டையாடுதல், கத்தூரி சுரப்பிகளை மருந்தாகப் பயன்படுத்துதல் மற்றும் வாசனைத் திரவியத் தொழிலுக்குப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களாலும்[3], 1950களில் காடழிப்புக்குப் பிறகு, காட்டில் இந்திய பெரும் புனுகுப்பூனை எண்ணிக்கை 94-99% வரை வெகுவாகக் குறைந்துள்ளது. 1990களில், இது பெரும்பாலும் தெற்கு சீனாவில் குவாங்டொங் மாகாணத்தின் வடக்கே மட்டுமே காணப்பட்டது. ஆனால் 1998 மற்றும் 2008க்கு இடைப்பட்ட ஆய்வுகளின் போது ஆய்னான் தீவில் பதிவு செய்யப்படவில்லை.[7]

சூழலியல் மற்றும் நடத்தை தொகு

 
இந்தியாவின் நம்தாபா புலிகள் காப்பகத்தில் உள்ள பெரிய இந்திய சிவெட்

இந்திய பெரும் புனுகுப்பூனை, தனித்து வாழும், இரவு நேர உயிரியாகும். இது பெரும்பாலான நேரத்தை நிலத்தில் செலவிடுகிறது. இதன் உணவில் மீன், பறவைகள், பல்லிகள், தவளைகள், பூச்சிகள், தேள்கள் மற்றும் பிற கணுக்காலி, நண்டுகள், கோழி மற்றும் கழிவுகள் அடங்கும். இதன் இனப்பெருக்க நடத்தை பற்றி அதிகம் அறியப்படவில்லை. இது ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் என்றும், ஒரு முறை இரண்டு முதல் நான்கு குட்டிகள் வரை இடும் என்றும். ஆண்டிற்கு இரு முறை இனப்பெருக்கம் செய்கின்றன.[8]

தாய்லாந்தில் ரேடியோ-தடமறியப்பட்ட செய்யப்பட்ட இந்திய பெரும் புனுகுப்பூனை 2.7 முதல் 8.8 km2 (1.0 முதல் 3.4 sq mi) வரை வாழிட வரம்புகளைக் கொண்டிருந்தன.[9]

பாதுகாப்பு தொகு

விவேரா சிபேத்தா1972ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மலேசியாவில் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு, சீன வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் வகை II இல் பட்டியலிடப்பட்டுள்ளது. A2acd அளவுகோல்களின் கீழ் சீனா இதை 'அழிந்துவரும்' விலங்கு என்று பட்டியலிட்டது. மேலும் இது இரண்டாம் வகுப்பு பாதுகாக்கப்பட்ட மாநில இனமாகும் (உணவு மற்றும் வாசனை சுரப்பிகள் காரணமாக). இது தாய்லாந்து, வியட்நாம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் பாதுகாக்கப்படுகிறது. இது இதன்வாழிட வரம்பில் பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகிறது. இந்தியாவில் இதன் எண்ணிக்கையினை CITES இணைப்பு III-ல் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

ஆங்காங்கில், இது 1970களிலிருந்து ஆங்காங்கில் இயற்கையான நிலையில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், வன விலங்குகள் பாதுகாப்பு கட்டளை 170-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமாகும். மேலும் இது அழிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.[10]

வகைப்பாட்டியல் தொகு

 
இந்திய பெரும் புனுகுப்பூனை, பிரையன் ஹோட்டன் ஹோட்சன் வரைந்த ஓவியம்

விவேரா சிபேத்தா என்பது1758-ல் கரோலஸ் லின்னேயஸால் இந்திய பெரும் புனுகுப்பூனைக்கு இடப்பட்ட விலங்கியல் பெயராகும்.[11] பல இயற்கை ஆர்வலர்கள் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் சிற்றினங்கள் மற்றும் துணையினங்களை முன்மொழிந்தனர், இவற்றில் பின்வருபவை 2005-ல் செல்லுபடியாகும் துணையினங்களாக அங்கீகரிக்கப்பட்டன:[12]

  • வி. சி. சிபேத்தா என்பது நேபாளத்திலிருந்து கிழக்கு நோக்கி அசாம் வரை காணப்படும் பரிந்துரைக்கப்பட்ட கிளையினமாகும்.[2][13]
  • 1864-ல் ராபர்ட் ஸ்வின்ஹோ விவரித்த விவேரா அசுத்தோனி என்பது சீனாவின் புஜியான் மாகாணத்தில் மேல் மின் ஆற்றின் அருகே சுடப்பட்ட ஒரு விலங்கின் தோல் மூலம் விவரிக்கப்பட்டது[14] occurs in China.[13]
  • வி. சி. பிக்டா. 1915-ல் இராபர்ட் சார்லசு உரோட்டனால் விவரிக்கப்பட்டது. மியான்மரில் உள்ள மேல் சின்ட்வின் ஆற்றின் கம்தி அருகே இருந்து இரண்டு தோல்களை அடிப்படையாகக் கொண்டது;[15] அசாம் மற்றும் வடக்கு மியான்மர் முதல் இந்தோசீனா வரை காணப்படுகிறது.[2][13]
  • வி. சி. புருனோசா 1915-ல் உரோட்டனால் விவரிக்கப்பட்டது. மியான்மரின் தாநின்தாரி பிரதேசத்தினைச் சேர்ந்த ஒரு வயது ஆண் பெரிய இந்திய பெரும் புனுகுப்பூனை தோலின் அடிப்படையில் விவரிக்கப்பட்டது;[15] தெற்கு மியான்மர் முதல் தீபகற்ப மலேசியா வரை காணப்படும்.[13]
  • வி. சி. கைனானா 1983-ல் ஹைனான் தீவிலிருந்து யிங்-சியாங் வாங் மற்றும் சூ ஆகியோரால் விவரிக்கப்பட்டது.[3]

வியட்நாமில் உள்ள கியா லாய் மாகாணத்தில் உள்ள டெய் நுயனைச் சேர்ந்த சோகோலோவ், ரோஷ்னோவ் மற்றும் பாம் சோங் ஆகியோரால் 1997-ல் விவரிக்கப்பட்ட விவேரா தானிகுயினென்சிசு செல்லுபடியாகும் தன்மை தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மேலும் இது இப்போது பொதுவாக வி. சீபெத்தாவின் ஒத்த இனமாகக் கருதப்படுகிறது.[1]

உள்ளூர் பெயர்கள் தொகு

  • உத்தரப் பிரதேசத்தில் (பல்லியா) இது 'கத்வாசு' என்று அழைக்கப்படுகிறது. .
  • பெங்காலியில் இது பாம் அல்லது கோந்தோ கோகுல் என்று அழைக்கப்படுகிறது.
  • அசாமிய மொழியில் இது ஹாகா ஜெண்டரா என்று அழைக்கப்படுகிறது.
  • மலாய் மொழியில் இது முசாங் கஸ்தூரி (முசாங் = சிவெட், கத்தூரி) என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் கத்தூரி வாசனை காரணமாக.
  • தாய் மொழியில், இது சாமோட் பேங் ஹேங் ப்லாங் (ชะมดแผงหางปล้อง; pronounced [tɕʰa.mót.pʰɛ̌ːŋ.hǎːŋ.plɔ̂ŋ])
  • லாவோவில், இது ngen phaeng hang kan (ເຫງັນແຜງຫາງກ່ານ; pronounced [ŋěn.pʰɛ̌ːŋ.hǎːŋ.kāːn])
  • மலையாளத்தில் இது 'வெருகு' (வெருக்) என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Timmins, R.J.; Duckworth, J.W.; Chutipong, W.; Ghimirey, Y.; Willcox, D.H.A.; Rahman, H.; Long, B.; Choudhury, A. (2016). "Viverra zibetha". IUCN Red List of Threatened Species 2016: e.T41709A45220429. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T41709A45220429.en. https://www.iucnredlist.org/species/41709/45220429. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 2.2 Pocock, R. I. (1939). "Viverra zibetha Linnaeus. The Large Indian Civet". The Fauna of British India, including Ceylon and Burma. Mammalia. – Volume 1. London: Taylor and Francis. பக். 346−354. https://archive.org/stream/PocockMammalia1/pocock1#page/n429/mode/2up. 
  3. 3.0 3.1 3.2 Wozencraft, W.C. (2008). "Viverridae". in Smith, A. T.. A Guide to the Mammals of China. Princeton: Princeton University Press. பக். 404−414. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781400834112. https://books.google.com/books?id=ka-9f68nPT4C&pg=PA412. 
  4. Menon, V. (2014). Indian mammals: a Field Guide. Hachette India.
  5. Hahn, A. (2019). Zoo and Wild Mammal Formulary. John Wiley & Sons.
  6. Appel, A.; Werhahn, G.; Acharya, R.; Ghimirey, Y.; Adhikary, B. (2013). "Small carnivores in the Annapurna Conservation Area, Nepal". Vertebrate Zoology 63 (1): 111–121. http://www.wild-cat.org/infos/Appel_al2013-small-carnivores-ACA_VZ63-1_111-121.pdf. 
  7. Lau, M. W. N.; Fellowes, J. R.; Chan, B. P. L. (2010). "Carnivores (Mammalia: Carnivora) in South China: a status review with notes on the commercial trade". Mammal Review 40 (4): 247–292. doi:10.1111/j.1365-2907.2010.00163.x. 
  8. Lekagul, B. and McNeely, J.A. (1977). Mammals of Thailand. Association for the Conservation of Wildlife, Bangkok.
  9. Simcharoen, S. (1999). Home range size, habitat utilization and daily activities of Large Indian Civet (Viverra zibetha). Research and progress report year 1999, Wildlife Research Division, Department of National Parks, Wildlife and Plant Conservation, Bangkok.
  10. Shek, C. T. (2006). A Field Guide to the Terrestrial Mammals of Hong Kong. Friends of the Country Parks / Cosmos Books, Hong Kong. 403 pp. ISBN 978-988-211-331-2. Page 281
  11. Linnæus, C. (1758). "Viverra Zibetha" (in la). Systema naturæ per regna tria naturæ, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Tomus I (10 ). Holmiæ (Stockholm): Laurentius Salvius. பக். 44. https://archive.org/details/carolilinnisys00linn/page/44. 
  12. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14000423. 
  13. 13.0 13.1 13.2 13.3 Ellerman, J. R.; Morrison-Scott, T. C. S. (1966). "Viverra zibetha Linnaeus, 1758. Large Indian Civet". Checklist of Palaearctic and Indian mammals 1758 to 1946 (Second ). London: British Museum of Natural History. பக். 281. https://archive.org/stream/checklistofindia00elle#page/280/mode/2up. 
  14. Swinhoe, R. (1864). "Viverra ashtoni, n. sp.". Proceedings of the Zoological Society of London: 379−380. https://archive.org/details/proceedingsofgen64zool/page/378. 
  15. 15.0 15.1 Wroughton, R. C. (1915). "The Burmese Civets". Journal of the Bombay Natural History Society 24: 63−65. https://archive.org/details/journalofbombayn24191517bomb/page/63. 

வெளி இணைப்புகள் தொகு