இமொயினு இரட்பா

இமொயினு இரட்பா அல்லது வாக்ச்சிங் தரணித்தோய்னி பண்பா என்பது மெய்தெய் மக்களால் கொண்டாடப்படும் ஒரு மத திருவிழா ஆகும். இது செல்வம் மற்றும் செழுமையின் தெய்வமான இமொயினு அஹோங்பிக்கு அர்ப்பணிக்கப்பட்ட விளக்குகளின் திருவிழாவாகும். மெய்தெய் நாட்காட்டிப்படி இது வாக்ச்சிங் மாதத்தின் பன்னிரண்டாவது சந்திர நாளில் கொண்டாடப்படுகிறது. வடகிழக்கு இந்தியாவில் மணிப்பூர், அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும் அண்டை நாடுகளில், மியான்மர் நாட்டில் சிலரால் அனுசரிக்கப்படுகிறது. திருவிழாவில் தெய்வத்திற்கான தியாகங்கள் மற்றும் பிரார்த்தனைகள் அடங்கும், அதைத் தொடர்ந்து பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும்.

இமொயினு இரட்பா
இமொயினு இரட்பா
கடைபிடிப்போர்மெய்தெய் மக்கள்
வகைமதம்
கொண்டாட்டங்கள்விளக்குகளின் திருவிழா
அனுசரிப்புகள்பிரார்த்தனை
நாள்மெய்தெய் நாட்காட்டிப்படி, வாக்ச்சிங் மாதத்தின் பன்னிரண்டாவது சந்திர நாளில்
நிகழ்வுஆண்டுதோறும்

சொற்பிறப்பியல்

தொகு
 
இமொய்னு

மெய்தி மொழியில் இரட்பா என்றால் "தியாகம்" மற்றும் இமொயினு இரட்பா என்றால் "இமொயினு தெய்வத்திற்கு தியாகம்" என்று பொருள்.[1] இந்த திருவிழா "வாக்ச்சிங் தரணித்தோய்னி பண்பா" என்றும் அழைக்கப்படுகிறது.[2] இதன் பொருள் " வாக்ச்சிங்க்கின் பன்னிரண்டாம் நாள்" (தரணித்தோய்னி என்றால் "பன்னிரண்டாம் நாள்" மற்றும் பண்பா என்றால் "இருப்பது"). இது பண்டிகை கொண்டாடப்படும் நாளைக் குறிக்கிறது.[3]

நிகழ்வு

தொகு

மெய்தெய் நாட்காட்டிப்படி, திருவிழா வாக்ச்சிங் மாதத்தின் பன்னிரண்டாவது சந்திர நாளில் கொண்டாடப்படுகிறது.[4][5]

அனுசரிப்பு

தொகு

இந்த திருவிழா பாரம்பரிய மதமான சனமகியை பின்பற்றும் மெய்தெய் மக்கள் கொண்டாடும் விளக்குகளின் திருவிழா ஆகும்.[6][7] இந்து மதம் போன்ற பிற மதங்களைப் பின்பற்றும் மெய்தெய் மக்களாலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.[4] வடகிழக்கு இந்தியாவில் மணிப்பூர், அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.[8][9] அண்டை நாடான மியான்மர் இல் குடியேறிய மக்களில் சிலரால் இது அனுசரிக்கப்படுகிறது.[10] இது மணிப்பூரில் ஒரு பொது விடுமுறை நாள்.[5]

நடைமுறைகள்

தொகு

திருவிழாவின் போது, ​​மக்கள் அரிசி, காய்கறி, பழங்கள் மற்றும் இனிப்புகள் செல்வம் மற்றும் செழுமையின் தெய்வமான இமொயினு அஹோங்பிக்கு வழங்குகிறார்கள்.[10] இரவு நேரத்தில், மக்கள் தெருக்களில் மெழுகுவர்த்திகள் மற்றும் பிற அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் வைப்பார்கள்.[4][6] மீன் முக்கிய உணவாக சமைக்கப்படுகிறது மற்றும் சமையலறையில் உள்ள பாரம்பரிய அடுப்பினருகில் தெய்வத்திற்கு படைக்கபப்படுகிறது.[4] தனிப்பட்ட வீடுகளில் வழிபாடு தவிர, சமூக அளவில் பல்வேறு சடங்குகளும் நடக்கும்.[4] தெய்வத்திற்கான பிரார்த்தனைகள் மற்றும் அதைத் தொடர்ந்து பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும். முந்தைய இரவு மத ஊர்வலமும் இதில் இடம்பெறும். இதில் இமோயினு தேவியின் சிலை வீடுகளுக்கு பாடல் மற்றும் இசையுடன் கொண்டு செல்லப்படுகிறது.[11]

மக்கள் பாரம்பரிய இசைக்கருவியான பேனா இசையில், பாரம்பரிய நடனங்கள் கம்பா தோய்பி மற்றும் மைபி ஜாகோய் நிகழ்த்துகிறார்கள். இமோயினு தெய்வத்தைப் பற்றிய கதைகள் சொல்லப்பட்டு, தெய்வத்தை அழைக்கும் பாடல்கள் பாடப்படுகின்றன.[12] பாரம்பரிய தற்காப்புக் கலை நிகழ்ச்சி தாங்-டா, வாள் (தாங்) மற்றும் ஈட்டி (டா) ஆகியவற்றைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுகிறது. [11]

 
இமொய்னு

மேற்கோள்கள்

தொகு
  1. Kirti Singh, Moirangthem (1998). Recent Researches in Oriental Indological Studies Including Meiteilogy. Parimal Publications. p. 65.
  2. "Fish fair at Emoinu Festival on Jan 3 in Manipur". North-East Affairs. 29 December 2022. https://thenortheastaffairs.com/fish-fair-at-emoinu-festival-on-jan-3-in-manipur/. 
  3. Bindyarani Devi, Haobam (மார்ச் 2019). IJCIRAS. பன்னாட்டுத் தர தொடர் எண்:2581-5334. http://www.ijciras.com/PublishedPaper/IJCIRAS1126.pdf. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Ngangbam, Indrakanta (3 January 2015). "Meiteis celebrate Emoinu". Telegraph India. https://www.telegraphindia.com/north-east/meiteis-celebrate-emoinu/cid/1627030. 
  5. 5.0 5.1 "What is Imoinu Iratpa and Why is it a Bank Holiday in Imphal?". News18. 3 January 2023. https://www.news18.com/news/lifestyle/what-is-imoinu-iratpa-and-why-is-it-a-bank-holiday-in-imphal-6744121.html. 
  6. 6.0 6.1 "Significance of Imoinu Eratpa Festival for people of Manipur". Imphal Free Press. 15 January 2022. https://www.ifp.co.in/festival/significance-of-imoinu-eratpa-festival-for-people-of-manipur. 
  7. K.R. Gupta; Amita Gupta, eds. (2006). Concise Encyclopaedia of India. Atlantic Publishers. p. 1198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-126-90639-0.
  8. India, a Reference Annual. Ministry of Information and Broadcasting, Government of India. 2014. p. 998.
  9. Khumukcham, Rinku (17 January 2019). "CM wishes on Ima Imoinu Iratpa numit". Imphal Times. https://www.imphaltimes.com/news/cm-wishes-on-ima-imoinu-iratpa-numit/. 
  10. 10.0 10.1 "Imoinu Eratpa festival celebrated across Manipur". Imphal Free Press. 15 January 2022. https://www.ifp.co.in/manipur/imoinu-eratpa-festival-celebrated-across-manipur. 
  11. 11.0 11.1 "Imoinu Iratapa observed, 2023 held". E-pao. 9 January 2009. https://www.e-pao.net/GP.asp?src=11..100109.jan09. 
  12. "Imoinu Iratpa extensively held all over". E-pao. 2 January 2015. https://e-pao.net/GP.asp?src=7..030115.jan15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமொயினு_இரட்பா&oldid=3909362" இலிருந்து மீள்விக்கப்பட்டது