இரட்டை வேடம்

இரட்டை வேடம் (double role) என்பது ஒன்றை தயாரிப்பில் இரண்டு வேடங்களில் நடிப்பதைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் கதைக்கு ஏற்றவாறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் இரட்டை வேடங்கள் சித்தரிக்கப்படுகின்றது. சில திரைப்படங்களில் இரட்டையர்கள் இரட்டை வேடங்களில் நடிப்பதும் உண்டு.

தமிழ்த் திரைப்படத்தில் இரட்டை அல்லது அதற்கு மேற்பட்ட வேடங்களில் நடிப்பதுதான் ஒரு நடிகர் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய சவால் ஆகும். இது நட்சத்திர மதிப்பைப் பெறுவதற்கும், பெற்றிருக்கும் நட்சத்திர மதிப்பை உயர்த்திக்கொள்வதற்கும் அதுதான் மிகச் சரியான வாய்ப்பு என கருதப்படுகின்றது.

சவால்கள்

தொகு

ஒரே நடிகர் இரட்டை வேடத்தில் நடிக்கும் போது இருவகைக் குணப்பாங்குகள் ஒரே படத்தில் காட்டப்பட வேண்டும். ஒரே முதகத் தோற்றம் இருந்தாலும் அவர்களின் நடை உடை பாவனை போன்றவற்றில் அவர்கள் வித்தியாசம் காட்டி நடிக்க வேண்டும். அப்படி நடித்து அந்த திரைப்படம் வெற்றி பெரும் பட்சத்தில் அது திரைப்பட வரலாற்றில் பதியப்பட்டு இருக்கும்.

நாடகத்துறை

தொகு

நாடகங்களில் பல வேடங்களைப் பயன்படுத்துவது உற்பத்தி செலவு குறைப்பதற்காக இருக்கலாம். இந்த வகை இரட்டை வேடம் ஒரு திறமையான அல்லது அனுபவம் வாய்ந்த நடிகருக்கு ஒரு பெரிய சவாலைக் கொடுக்கும் நோக்கமாக இருக்கலாம் அல்லது கதைக்கு கருப்பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.

திரைப்படத்துறை

தொகு

தமிழ்த் திரைப்படத்துறையில் 1940 களில் இருந்து இரட்டை வேடங்களில் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டது. முதல் முதலில் 1940 ஆம் ஆண்டு நடிகர் பு. உ. சின்னப்பா நடிப்பில் உத்தம புத்திரன் என்ற திரைப்படம் வெளியானது.[1] இதே கதை பின்னர் சிவாஜி கணேசன் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்து அதே பெயரில் 1958 இல் வெளியானது.[2][3] அதே ஆண்டில் நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் என்பவர் முதல் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த நாடோடி மன்னன் என்ற திரைப்படமும் வெளியானது.

1964 ஆம் ஆண்டு முதன் முதலில் நடிகர் சிவாஜி கணேசன் என்பவர் நவராத்திரி என்ற திரைப்படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்துள்ளார்.[4] இவரை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் என்ற திரைப்படத்தில் நடிகர் கமல் ஹாசன் பத்து வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[5]

கதாநாயகர்கள் மட்டுமின்றி நடிகைகளான ஜெயலலிதா, லட்சுமி, வாணிஸ்ரீ, சினேகா, ஜோதிகா, அசின், போன்ற நாயகிகளும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்கள்.[6]

தொலைக்காட்சித்துறை

தொகு

திரைப்படங்களை விட தொலைக்காட்சித் தொடர்களில் இரட்டை வேடங்களில் நடிப்பது மிகவும் கடினம் ஏன் என்றால் அந்த தொடர் பல அத்தியாயங்களில் தயாரிக்கப்படுகின்றது. இந் துறையில் பெண்களின் ஆதிக்கம் அதிகளவு இருப்பதால் கதாநாயகிகள் தான் பெரும்பாலும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்கள்.

1999 ஆம் ஆண்டு சித்தி என்ற தொடரில் நடிகை ராதிகா சரத்குமார் என்பவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அந்த தொடர் அவருக்கு சின்னத்திரையில் மிகப்பெரிய புகழை பெற்றுக்கொடுத்தது. அதை தொடர்ந்து அண்ணாமலை, வாணி ராணி போன்ற தொடர்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.[7] இவரை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மனைவி என்ற தொடரில் நடிகை கௌசல்யா[8] இரட்டை வேடத்தில் நடித்தார். ரம்யா கிருஷ்ணன், தேவயானி, ஷிவானி நாராயணன், சாந்தினி தமிழரசன் போன்ற பல நடிகைகள் தொலைக்காட்சித்துறையில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Uthama Puthiran — Making history with historicals — Tamil Movie News". IndiaGlitz. 19 September 2006. Archived from the original on 15 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 7 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "'டபுள் ஆக்ட்' படங்களுக்கு தாத்தா 'உத்தமபுத்திரன்'; பி.யு.சின்னப்பாவை சூப்பர் ஸ்டாராக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ்! 80 ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்ச ரூபாய் வசூல் செய்து சாதனை". இந்து தமிழ். 14 அக்டோபர் 2020.
  3. "சினிமாஸ்கோப் 36: அபூர்வ சகோதரிகள்". கட்டுரை. தி இந்து. 2107 சூன் 9. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. Film News Anandan (23 October 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films]. Chennai: Sivakami Publishers. Archived from the original on 9 December 2017. பார்க்கப்பட்ட நாள் 7 டிசம்பர் 2020. {{cite book}}: Check date values in: |access-date= (help); More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
  5. "The impact of Navarathri". 18 July 2008 – via www.thehindu.com.
  6. "6 Times Kollywood Actress Played Dual Roles". 18 July 2008.
  7. "Chithi fame Radhika Sarathkumar bags her next project".
  8. "quick five back in the limelight" – via www.thehindu.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_வேடம்&oldid=4167731" இலிருந்து மீள்விக்கப்பட்டது