இரண்டாம் சாம்திக்

இரண்டாம் சாம்திக் (Psamtik II) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட இருபத்தி ஆறாம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 595–589 வரை 6 ஆண்டுகள் ஆண்டார்.[1] இவர் இரண்டாம் நெச்சோவின் மகன் ஆவார்.[2]

இரண்டாம் சாம்திக்
இரண்டாம் சமேதிசூஸ்
பார்வோன் இரண்டாம் சாம்திக்கின் ஸ்பிங்ஸ்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 595–589, இருபத்தி ஆறாம் வம்சம்
முன்னவர்இரண்டாம் நெச்சோ
பின்னவர்ஆப்ரீஸ்
துணைவி(யர்)தகுயித்
பிள்ளைகள்ஆப்ரீஸ், அன்கேனேஸ்நெபரிபிரி
தந்தைஇரண்டாம் நெச்சோ
தாய்முதலாம் கெதேநெயித்திர்பினெத்
இறப்பு589 BC
பார்வோன் இரண்டாம் சாம்திக் குஷ் இராச்சியத்தை வெற்றி கொண்டமைக்கு நிறுவப்பட்ட வெற்றித் தூண்

இரண்டாம் சாம்திக் கிமு 592-இல் நூபியா எனும் தற்கால சூடான் நாட்டின் வடக்கு பகுதியை வென்று, பின்னர் குஷ் இராச்சியத்தை வென்றார்.[3]

நினைவுச் சின்னங்கள்

தொகு

கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலத்தில், இரண்டாம் சாம்திக் மற்றும் அவரத் மகன் ஆப்ரீஸ் ஆகியோர் எகிப்தியக் கோயில்களை நிறுவினர்.[4]தனது நூபியா மற்றும் குஷ் இராச்சிய வெற்றிகளை நினைவுப்படுத்தும் வகையில், இரண்டாம் சாம்திக் 21.79 மீட்டர் உயரத்தில் இரண்டு கல்தூபிகளை ஹெல்லியோபோலிஸ் நகரக் கோயிலில் நிறுவினார். இவற்றில் ஒரு கல்தூபியை உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் பெயர்த்துக்கொண்டு கிமு 10-இல் உரோமில் நிறுவினார்.[4]மற்றொன்றை கிமு 525-இல் பாரசீக அகாமனிசியர்கள் உடைத்தெறிந்தனர்.

இரண்டாம் சாம்திக், அமூன், மூத் மற்றும் கோன்சு ஆகிய எகிப்தியக் கடவுளர்களுக்கு ஹிப்பிஸ், கார்கா பாலைவனச் சோலையில் கோயில் மற்றும் சிலைகளை எழுப்பினார்.[5]

 
இரண்டாம் சாம்திக் கார்கா பாலைவனச் சோலையில் நிறுவிய ஹிப்பீஸ் கோயில்
 
மறுசீரமைத்த ஹிப்பீஸ் கோயிலின் காட்சி, ஆண்டு 2008

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames and Hudson, 1994. p.195
  2. Roberto Gozzoli: Psammetichus II, Reign, Documents and Officials, London 2017, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1906137410, p. 18 (the father-son relation is known from Herodotus and confirmed by an inscription on a statue)
  3. The New Encyclopædia Britannica: Micropædia, Vol.9, 15th edition, 2003. p.756
  4. 4.0 4.1 Dieter Arnold, Temples of the Last Pharaohs, Oxford University Press, 1999. p.76
  5. Arnold, p.77


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சாம்திக்&oldid=3449760" இலிருந்து மீள்விக்கப்பட்டது