இரவின் நிழல்

இயக்குநர் பார்த்திபன் இயக்கிய தமிழ் திரைப்படம்

இரவின் நிழல் என்பது ஜுலை 15 இல் வெளியான இந்திய தமிழ் மொழி பரபரப்பூட்டும் அதிரடிச் சுயாதீனத் திரைப்படம் ஆகும். இதில் அகிரா புரொடக்க்ஷன்ஸ் மற்றும் பயோஸ்க்கோப் பிள்ம் புரேமர்ஸ் ஆகியப் பதாகையின் கீழே இரா. பார்த்திபன் தயாரித்து, எழுதி, துணைத்தொகுப்பாளராக இருந்துள்ளார். இதில் இராதாக்கிருஷ்ணன் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபா சங்கர், பிரியங்கா ருத் மற்றும் பிரிகிதா சாகா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பன்னணி இசை ஏ. ஆர். ரகுமானால் இசையமைக்கப்பட்டு ஆறு பாடல்களைக் கொண்டுள்ளது. இப்படம் முதல் ஆசிய ஒற்றைப்பிடிப்புத் திரைப்படத்திற்காக ஆசியச் சாதனைப் புத்தகம் மற்றும் இந்தியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.[1] உலகின் முதல் நேரியிலற்ற ஒற்றைப்பிடிப்புத் திரைப்படமென்றும் முதல் ஆசிய ஒற்றைப்பிடிப்புத் திரைப்படமென்றும் பெருமிதம்கொள்ளப்பட்டது. தொகுப்பாளரின்றி படைக்கப்பட்ட முதல் ஆசியத் திரைப்படமெனவும் கருதப்படுகிறது. இத்திரைப்படம் கான் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு முன்மொழிந்து அனுப்பப்பட்ட திரைப்படங்களுள் ஒன்றாகும்.

இரவின் நிழல்
இரவின் நிழல் சுவரொட்டி
இயக்கம்ஆர். பார்த்திபன்
தயாரிப்புகால்டுவேல் வேள்நம்பி
அன்ஷு பிரபாகர்
Dr. பின்ச்சி சிரீனிவாசன்
பாலா சுவாமிநாதன்
ரஞ்சித் தண்டபானி
கதைஆர். பார்த்திபன்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஆர். பார்த்திபன்
வரலட்சுமி சரத்குமார்
ரோபோ சங்கர்
பிரியங்கா ருத்
பிரிகிதா சாகா
ஆனந்த கிருஷ்ணன்
ஒளிப்பதிவுஆர்தர் ஆ. வில்சன்
கலையகம்பையோஸ்கோப் பிள்ம் பிரேமர்ஸ்
அகிரா பிள்ம் புரொடக்‌ஷன்ஸ்
விநியோகம்வி கிரியேஷன்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

சந்தைப்படுத்தல் தொகு

படக்குழுவினர் தனிமையானச் சாலையில் இரவு வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதை குறிக்கும் வண்ணமமைந்த திரைப்படத்திலிருந்து குறுங் காணொளியை பிப்ரவரி 2, 2022 அன்று வெளியிட்டனர். மார்ச் 19, 2022 அன்று மூத்த இயக்குநர் மணி ரத்னம் முதற்பார்வை சுவரொட்டியை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். பிறகு மெட்ரால் டாக்கீஸும் டுவிட்டரில் வெளியிடுகின்றனர்.[2][3] திரைப்படத்தின் அதிகாரப்பூர்வத் தூண்டோட்டம்(teaser) யூடியூபில் மே நாளை முன்னிட்டு மே 1, 2022 அன்று வெளியானது.[4]

இசை தொகு

திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் வெற்றிப்பாடல்களாக இல்லாமல் பசுமைப்பாடல்களாக நிரம்பிய பாடல் தொகுப்பைப் படைக்குமாறு ரகுமானிடம் கேட்டுக்கொண்டதாகப் பார்த்திபனே கூறினார்.[5] அதிகாரப்பூர்வ இசை வெளியீட்டு விழா சென்னையில் சூன் 5, 2022 அன்று அபிஷேக் பச்சன் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடந்தது மற்றும் திரைப்படத்திலிருந்து ஒற்றைப்பாடல் வெளியீடு(single release) ஏ. ஆர். ரஹ்மான் முன்னிலையில் சர்வதேச தொழிலாளர் நாளை முன்னிட்டு மே 1, 2022 அன்று வெளியானது.[6][7]

தமிழ் தொகு

# பாடல்கலைஞர்(கள்) நீளம்
1. "பாபம் செயாதிரு"  ஹரினி இவதுரி, நிரஞ்சனா ரமணன், கீர்த்தனா வைதியநாதன் 7:07
2. "காயம்"  கடிஜா ரஹ்மான், சௌந்தர்யா பாலா, வீனா முரளி, டீப்தி சுரேஷ், சௌமியா 5:53
3. "பெஜரா"  ஹரிசரண் 3:40
4. "மாயவா தூயவா"   ஷ்ரேயா கோஷல் 4:09
5. "கண்ணெதிரே"  சர்தக் கல்யாணி, ஹிரால் விரடியா 3:53

தெலுங்கு தொகு

# பாடல்கலைஞர்(கள்) நீளம்
1. "மாயவா சாயவா"   ஷ்ரேயா கோஷல் 4:09

வரவேற்பு தொகு

இத்திரைப்படத்தைத் தமிழ்த் திரையுலகின் கலங்கரைவிளக்கம் என்று அழைத்துப் பாராட்டைக் குவித்தார் இயக்குநர் சீனு இராமசாமி.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Parthiban's 'Iravin Nizhal' enters the Asia and India Book of Records - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  2. "First glimpse of 'Iravin Nizhal' is here! - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  3. "Mani Ratnam to launch Parthiban's 'Iravin Nizhal' first look poster - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  4. "Watch: Teaser of Parthiban's Iravin Nizhal is intriguing". The News Minute (in ஆங்கிலம்). 2022-05-02. பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  5. "AR Rahman shares a glimpse of his new song from Parthiban's 'Iravin Nizhal' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  6. "Iravin Nizhal audio to come out on May 1, announces AR Rahman". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  7. "Parthiban to celebrate AR Rahman's musical journey with audio launch of Iravin Nizhal on May 1 - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
  8. "'Iravin Nizhal' - a real single shot movie; Directors Seenu Ramasamy and Obeli Krishna heaps praise - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.

வெளிப்புற இணைப்புகள் தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் இரவின் நிழல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவின்_நிழல்&oldid=3672341" இலிருந்து மீள்விக்கப்பட்டது