இலத்தீன் ஒன்றியம்
இலத்தீன் ஒன்றியம் (Latin Union) இலத்தீன் அடையாளத்தையும் தாக்கத்தையும் உலகில் நிறுவி இலத்தீன மக்களின் பொதுவான பண்பாட்டு மரபை உலகெங்கும் பரப்பவும், பாதுகாக்கவும் வெளிப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட உரோமானிய மொழிகள் பேசும் நாடுகளின் சர்வதேச அமைப்பு ஆகும். இது 1954இல் எசுப்பானியாவின் மத்ரித்தில் நிறுவப்பட்டது. இதன் உறுப்பினர் எண்ணிக்கை 12 இலிருந்து 36 நாடுகளாக வளர்ந்துள்ளது. இதில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசிய-பசிபிக் மண்டல நாடுகள் அங்கம் பெற்றுள்ளன. [2]
இலத்தீன் ஒன்றியம் | |
---|---|
தலைமையகம் | பாரிஸ், பிரான்சு |
உறுப்பினர்கள்[1] |
|
தலைவர்கள் | |
• பேராயத் தலைவர் | ஒலெக் செரெப்ரியன் |
• செயலாளர்-நாயகம் | ஓசே லாயி டிசென்ட்டா பாலெசுட்டர் |
நிதி நெருக்கடி காரணமாக தனது நடவடிக்கைகளை இடைநிறுத்தம் செய்து கொள்வதாக சனவரி 26, 2012 அன்று அறிவித்துள்ளது. தனது தலைமைச் செயலகத்தை கலைத்ததுடன் சூலை 31, 2012 முதல் அனைத்து பணியாளர்களையும் வேலைநீக்கம் செய்தது. [3]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "États membres". Latin Union. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
- ↑ "Unión Latina; Estados miembros". Archived from the original on 2008-12-28. பார்க்கப்பட்ட நாள் 2009-01-05.
- ↑ "Disolución de la Secretaría General de la Unión Latina", Unión Latina, accessed 2012-06-10.