இலிசிப்ரியா கங்குஜாம்

இலிசிபிரியா கங்குஜாம் (Licypriya Kangujam) இந்தியாவைச் சேர்ந்த குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலராவார் . உலகளவில் இளைய காலநிலை ஆர்வலர்களில் ஒருவரான இவர், எசுப்பானியாவின் மத்ரித்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு 2019 (சிஓபி 25) நிகழ்ச்சியில் உலகத் தலைவர்களிடையே உரையாற்றினார். உடனடியாக காலநிலை சார்ந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். 2018 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் காலநிலை நடவடிக்கைகளுக்காகவும், இந்தியாவின் உயர் மாசு அளவைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களை இயற்றவும், பள்ளிகளில் காலநிலை அளவை மாற்ற கல்வியறிவை கட்டாயமாக்கவும் இவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.[2][3][4][5]

இலிசிப்ரியா கங்குஜாம்
5 செப்டம்பர் 2019 அன்று தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் ஆசிய-பசிபிக் காலநிலை வாரத்தில் இலிசிபிரியா கங்குஜாம்.
பிறப்புஇலிசிப்ரியா கங்குஜாம்
2 அக்டோபர் 2011 (2011-10-02) (அகவை 12)
பாஷிகோங் , மணிப்பூர், இந்தியா
பணிமாணவி, சுற்றுச்சூழல் ஆர்வலர்
செயற்பாட்டுக்
காலம்
2018– தற்போது வரை
அறியப்படுவதுகாலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் குரல்
அரசியல் இயக்கம்குழந்தை இயக்கம்
பெற்றோர்
  • பித்யாராணி தேவி கங்குஜாம் ஓங்க்பி (தாயார்)
  • கேகே சிங் (தாயார்)
உறவினர்கள்சிங்கிள்சானா சிங் (மாமா)
விருதுகள்
  • முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் குழந்தை விருது (2019)
  • உலகக் குழந்தைகள் அமைதி விருது (2019)
  • பூமி நாள் வலையமைப்பின் ஒருவாகும் நட்சத்திரம் (2019)
  • உலகளாவிய குழந்தை மேதை விருது (2020)
  • உன்னத குடிமகன் விருது (2020)
  • டிஎன் கோசு நினைவு விருது (2020)
  • பாரத் சேவ சம்வாட்டின் தேசிய இளைஞர் தின விருது (2021)
  • சிஎன்என்-ஐபிஎன் நியூஸ்18 தண்ணீர் நாயகர் விருது (2021)
  • போர்ப்ஸ் இந்தியாவின் சிறந்த 30 பேர்களில் 30 (2021)
எசுப்பானியாவின் மத்ரித்தில் 2019 திசம்பர் 12 அன்று நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு 2019இல் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரசு உடன் இலிசிபிரியா கங்குஜாம்

இந்த வார்த்தையின் பயன்பாடு இவருக்கு பிடிக்கவில்லை என்றாலும், இவர் இந்தியாவின் கிரெட்டா துன்பர்க் என்று கருதப்படுகிறார்.[6]

இலிசிப்ரியா சூலை 2018 இல் காலநிலை மாற்றத்திற்கு எதிராக வாதிடத் தொடங்கினார். 21 சூன் 2019 அன்று, காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பர்க்கால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவில் காலநிலை மாற்றச் சட்டத்தை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோதியின் கவனத்தை ஈர்க்க இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஒரு வாரம் முகாமிடத் தொடங்கினார். ஆகத்து 31, 2019 அன்று, ஆத்திரேலியாவின் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் (IEP), இளைஞர்களை வளர்ப்பதற்கான பிராந்திய கூட்டணி மற்றும் மாலத்தீவு அரசாங்கத்தின் இளைஞர் விளையாட்டு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் திரு. சார்லஸ் ஆலன் வழங்கிய "உலக குழந்தைகள் அமைதி பரிசு 2019" ஐ இவர் பெற்றார். அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள "எர்த் டே நெட்வொர்க்" தலைமையகத்தால் "வளர்ந்து வரும் நட்சத்திரம்" என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது.[7]

இந்தி மொழி நாளேடுகளில் ஒன்றான தைனிக் பாஸ்கர் நவம்பர் 19, 2019 அன்று, சண்டிகர் பல்கலைக்கழகத்தில் வழங்கிய "நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான தூதர் விருது 2019" ஐ இந்திய அரசின் நிதி ஆயோக்குடன் இணைந்து பெற்றார். 2020 ஜனவரி 3 ஆம் தேதி புது தில்லியில் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடமிருந்து "உலகலாவிய குழந்தை மேதை விருது 2020" ஐ பெற்றார்.[8] பிப்ரவரி 18, 2020 அன்று இந்தியாவின் புது தில்லி தில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற TEDxSBSC இல் உரையாற்றினார். 23 பிப்ரவரி 2020 அன்று இவர் மும்பையில் நடைபெற்ற TEDxGateway லும் உரையாற்றினார். மேலும் இவரது பேச்சுக்கு அனைவராலும் எழுந்து நின்று பாராட்டும் ஒரு வரவேற்பைப் பெற்றார்.[9][10][11][12]

வாழ்க்கை

தொகு

இலிசிபிரியா, அக்டோபர் 2, 2011 அன்று இந்தியாவின் மணிப்பூர் பாஷிகோங்கில் கே.கே.சிங் மற்றும் பித்யாராணி தேவி கங்குஜாம் ஓங்க்பி ஆகியோரின் மூத்த மகளாகப் பிறந்தார். இவர், தனது ஏழு வயதில் காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவு அபாயக் குறைப்பு ஆகியவற்றை எதிர்த்து குரல் எழுப்பத் தொடங்கினார். சூன் 2019 இல், இந்தியாவின் நாடாளுமன்ற சபை முன் இந்தியப் பிரதமர் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்து உரையாற்றினார்.[13][14][15][16]

2018–2019 செயல்பாடு

தொகு
 
20 செப்டம்பர் 2019 அன்று அங்கோலாவில் யுனெஸ்கோ கூட்டாளர் மன்றத்தில் உரையாற்றும் கங்குஜாம்.

மங்கோலியா வருகை

தொகு

2018 ஆம் ஆண்டில், இவர் தனது தந்தையுடன் மங்கோலியாவில் நடந்த ஐ.நா. பேரழிவு மாநாட்டில் கலந்து கொண்டார். இது செயல்பாட்டில் ஈடுபட இவருக்கு ஊக்கமளித்தது. பிபிசி செய்தியில் வந்த ஒரு கட்டுரையில், "பேச்சுக்களை வழங்கும் மக்களிடமிருந்து எனக்கு நிறைய உத்வேகம் மற்றும் புதிய அறிவு கிடைத்தது. இது வாழ்க்கையை மாற்றும் நிகழ்வு" என்றார். நிகழ்வின் பின்னர், காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகளைச் சமாளிப்பதன் மூலம் கிரகத்தைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "குழந்தை இயக்கம்" ஒன்றை நிறுவினார்.[17]

கேரள வெள்ளம் 2018

தொகு

கேரளவில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக, ஆகத்து 24, 2018 அன்று கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தனது 100,000 ரூபாய் சேமிப்பை வழங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவருக்கு கேரள அரசிடம் ஒப்புதல் கடிதம் வந்தது.[18]

கிரேட் அக்டோபர் மார்ச் 2019

தொகு

21 அக்டோபர் 2019 அன்று, இலிசிபிரியா தனது ஆதரவாளர்களுடன் புது தில்லி இந்தியாவின் வாயில் அருகே "கிரேட் அக்டோபர் மார்ச் 2019" என்ற பிரசாரத்தைத் தொடங்கினார். காலநிலை மாற்றம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவும், இந்தியாவில் காலநிலை சட்டத்தை இயற்றவும் அக்டோபர் 21 முதல் 27 வரை பல்வேறு இடங்களில் "கிரேட் அக்டோபர் மார்ச்" பிரச்சாரம் நடந்தது. [17]

பள்ளிகளில் காலநிலை மாற்றத்தை கற்பிப்பதற்கான பிரச்சாரம்

தொகு

பள்ளிகளில் காலநிலை மாற்றம் குறித்த படிப்பினைகளை கட்டாயமாக்க இவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இவரது வேண்டுகோளின்படி குசராத்து அரசு பள்ளிக் கல்வியில் காலநிலை மாற்றத்தையும் சேர்த்துள்ளது.[19]

மேற்கோள்கள்

தொகு
  1. "India climate activist Licypriya Kangujam on why she took a stand". BBC News. அணுகப்பட்டது 6 February 2020.
  2. "Meet Licypriya Kangujam, the 8-yr-old Indian 'Greta' who is urging leaders at COP25 to save the planet". 20 September 2019. https://economictimes.indiatimes.com/magazines/panache/meet-licypriya-kangujam-the-8-yr-old-indian-greta-who-is-urging-leaders-at-cop25-to-save-the-planet/articleshow/72493089.cms. 
  3. "Eight-Year-Old Licypriya Kangujam Is Flying India's Flag at COP25". 10 December 2019. https://thewire.in/environment/licypriya-kangujam-is-flying-indias-flag-at-cop25-shes-eight. 
  4. "Indian 8-year-old challenges world leaders to act on climate change at COP25 in Madrid". 10 December 2019. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/indian-8-year-old-licypriya-kangujam-challenges-world-leaders-to-act-on-climate-change-at-cop25-in-madrid/article30275164.ece. 
  5. "Meet Licypriya Kangujam, the 8-yr-old Indian 'Greta' who is urging leaders at COP25 to save the planet". 10 December 2019. https://economictimes.indiatimes.com/magazines/panache/meet-licypriya-kangujam-the-8-yr-old-indian-greta-who-is-urging-leaders-at-cop25-to-save-the-planet/articleshow/72493089.cms. 
  6. Banerji, Annie (2020-02-08). "'Don’t call me India’s Greta Thunberg and erase my story': Eight-year-old Licypriya Kangujam". Scroll.in. https://scroll.in/article/952444/dont-call-me-indias-greta-thunberg-and-erase-my-story-eight-year-old-licypriya-kangujam. 
  7. "India climate activist Licypriya Kangujam on why she took a stand". BBC News. 6 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 February 2020.
  8. "Licypriya Kangujam from India - the world's youngest climate activist - stands with Greta Thunberg and demands three new policies". Business Insider. https://www.businessinsider.in/science/environment/news/licypriya-kangujam-from-india-the-worlds-youngest-climate-activist-stands-with-greta-thunberg-and-demands-three-new-policies/articleshow/72451200.cms. 
  9. "Licypriya Kangujam". TEDxGateway. https://www.timesnownews.com/mirror-now/society/article/cop25-8-yr-old-indian-greta-urges-world-leaders-to-save-planet/526300. 
  10. "Young ones to take centre stage at TEDxGateway tomorrow". TEDxGateway. https://www.thehindu.com/news/cities/mumbai/young-ones-to-take-centre-stage-at-tedxgateway-tomorrow/article30884650.ece. 
  11. "Licypriya Kangujam" இம் மூலத்தில் இருந்து 22 மார்ச் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200322165001/https://tedxgateway.com/portfolio/licypriya-kangujam/. 
  12. "Climate change, future tech take centre stage". Mumbai Mirror இம் மூலத்தில் இருந்து 22 மார்ச் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200322165001/https://tedxgateway.com/portfolio/licypriya-kangujam/. 
  13. "A 7-Year-Old Takes Stand Near The Parliament Urging PM Modi To Pass The Climate Change Law". ScoopWhoop. 22 June 2019. https://www.scoopwhoop.com/news/7-year-old-climate-change-parliament-pm-modi/. 
  14. "Angola backs Licypriya's green world campaign". Poknapham. 24 September 2019 இம் மூலத்தில் இருந்து 9 பிப்ரவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210209171423/https://www.poknapham.in/daily/english/4694. 
  15. "Seven-year-old becomes the youngest green activist". Daily News and Analysis. 9 September 2019. https://www.dnaindia.com/india/report-seven-year-old-becomes-the-youngest-green-activist-2789383. 
  16. "Aged 7, Licypriya Kangujam stands outside Parliament to urge Prime Minister, MPs to pass climate change law". Mirror Now. 22 June 2019. https://www.timesnownews.com/mirror-now/society/article/aged-7-licypriya-kangujam-stands-outside-parliament-to-urge-prime-minister-mps-to-pass-climate-change-law/441304. 
  17. 17.0 17.1 "India climate activist Licypriya Kangujam on why she took a stand". BBC News. 6 February 2020. பார்க்கப்பட்ட நாள் 6 February 2020."India climate activist Licypriya Kangujam on why she took a stand". BBC News. 2020-02-06. Retrieved 2020-02-06.
  18. "Licypriya Kangujam Donated ₹1,00,000 to Kerala Government to Support Victim Children of Kerala Massive Flood in 2018 but Acknowledged after almost 2 Years". Saarcyouth.org. 22 October 2019 இம் மூலத்தில் இருந்து 28 செப்டம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210928084038/http://www.saarcyouth.org/licypriya-kangujam-donated-to-support-million-of-victim-children-of-kerala-massive-flood-in-2018/. 
  19. "BBC World Service - BBC OS, BBC OS, How I became an 8-year-old climate activist". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலிசிப்ரியா_கங்குஜாம்&oldid=3481090" இலிருந்து மீள்விக்கப்பட்டது