இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு - காயல்பட்டினம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாடு இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் 2011 சூலை 8, சூலை 9, சூலை 10ம் திகதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர்களும், இலங்கை, மலேசியா சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களும், பேராளர்களாகவும், ஆய்வாளர்களாகவும் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் கருப்பொருள்
தொகுஇஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி
துவக்க விழா
தொகுமாநாட்டின் துவக்கவிழா சூலை 8 2011ல் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்திடலில் அமைக்கப்பட்டிருந்த விசேட அரங்கில் ஆரம்பமானது. ஏற்பாட்டுக்குழுத் தலைவர் எம். எம். உவைஸ் தலைமை தாங்கினார். துவக்கவிழாவின் விசேட அம்சமாக ஜலாலுத்தீன் ரூமி எழுதிய மஸ்னவி சரீப் எனும் அரபு நூலின் தமிழாக்கம் வெளியிடப்பட்டது.
கவியரங்கம்
தொகுமாநாட்டின் துவக்க விழாவைத் தொடர்ந்து காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்திடலில் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் 'ஊடகம்' எனும் தலைப்பில் ஈரோடு தமிழ் அன்பன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் முப்பத்துமூன்று கவிஞர்கள் கவி பாடியமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய பாடல் அரங்கம்
தொகுசூலை 8 2011ல் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்திடலில் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் இஸ்லாமிய பாடல் அரங்கம் கவிஞர் எஸ். செய்யது அஹமத் தலைமையில் நடைபெற்றது.
இஸ்லாமிய கலாசார, தமிழ் இலக்கிய கண்காட்சி
தொகுஎன். டி. அப்துல் ஹை ஆலிம் நுழைவு வாயில் எம். கே. எஸ். முஹியத்தீன் இப்றாகிம் சாகிப் காக்கா அரங்கில் சூலை 9 2011ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆய்வரங்கம்
தொகுபுலவர் நாயகம் சேக்குனா புலவர் அரங்கம்: சூன் 9ம் திகதி குமரி ஆனந்தன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆய்வரங்கம் 01
தொகுசாம் சிகாபுதீன் ஒலி அரங்கம் எஸ். ஏ. சுலைமான் கட்டிடம் எல். கே. மேனிலைப்பள்ளி மண்டபத்தில் சூலை 9, 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு திருவனந்தபுரம், பல்கலைக்கழகக் கல்லூரி, மேனாள் முதல்வர், முனைவர் திருமலர் மீரான் பிள்ளை தலைமை தாங்கினார்.
தலைப்பு: காப்பியம்
- காப்பியக்கோ ஜின்னா சர்புத்தீனின் தீரன் திப்பு சுல்தான் காவியம்
ஆய்வுரை நடத்தியவர்: உணர்வுப் பாவலர் அ. உசேன், புதுச்சேரி
- வரிசை நபியும் வான் மழையும்
ஆய்வுரை நடத்தியவர்: புலவர் மு. கமால் முகைதீன், புளியங்குடி
- இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்
ஆய்வுரை நடத்தியவர்: பி. சங்கர நாராயணன், பெரியகுளம்
- குஞ்ஞ மூசா கவிராசரின் செய்யிதத்து படைப்போர் புரட்சி வீரக் காப்பியம்
ஆய்வுரை நடத்தியவர்: எம்.எல்.சுகத குமாரி, முனைவர் பட்ட ஆய்வாளர் பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்
- சீறாவும், மனிதமேம்பாடும்
ஆய்வுரை நடத்தியவர்: முனைவர் க. சேட்டு, தமிழாசிரியர், ஈ.கே.எம்.அ.க. மதரஸா, இஸ்லாமிய உயர் நிலைப்பள்ளி, ஈரோடு
- ஜின்னா சர்புதீனின் மஹஜபீன் காவியம்
ஆய்வுரை நடத்தியவர்: டாக்டர் தாஸிம் அஹமது, இலங்கை
- காயல் சேகனாப் புலவரின் புது குஸ்ஸாம் - ஓர் ஆய்வு
ஆய்வுரை நடத்தியவர்: தக்கலை பசீர், நாகர்கோவில்
- காயல் சேகனாப் புலவரின் திருமணி மாலையில் காப்பிய நாயகர் இபுறாஹிம் நபி
ஆய்வுரை நடத்தியவர்: முனைவர் திருமலர் மீரான் பிள்ளை
- சீறாப்புராணம் மானுக்குப் பிணைநின்ற படலத்தில் மனித விழுமியங்கள்
ஆய்வுரை நடத்தியவர்: முனைவர் ர. விஜயலட்சுமி, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை
- சீறாவில் உமறுப்புலவர் காட்டும் புதுமை உலா
ஆய்வுரை நடத்தியவர்: முனைவர் நா. இளங்கோ, தமிழ்ப் பேராசிரியர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி - 8
ஆய்வரங்கம் 02
தொகுஅரபு தமிழ் ஹாபிழ் அமீர் ஒலி அரங்கம். எஸ். ஏ. சுலைமான் கட்டிடம், எல். கே. மேனிப்பள்ளி மண்டபத்தில் சூலை 9 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு சென்னை, இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு நிலையம், முனைவர் தக்கலை எம். எஸ். பசீர் தலைமை தாங்கினார்.
தலைப்பு: மெய்ஞ்ஞானம்
- தத்துவத் தமிழை முத்திமிட்ட முஸ்லிம்கள்
ஆய்வு நிகழ்த்தியவர்: வி. எஸ். அப்துல்ரசாக், கடையநல்லூர்
- அப்பாவின் ஓளரங்குசாஹ் ஒரு பார்வை
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் கா. மு. அ. அஹமது ஜுபைர், அரபித் துறை உதவிப் பேராசிரியர், புதுக்கல்லூரி, சென்னை.
- அகமறியா அன்மீகம்
ஆய்வு நிகழ்த்தியவர்: ஜி.எஸ்.டி.மஹபூபு சுபுஹானி
- குணக்குன்று குணங்குடி மஸ்தானின் நாடக இலக்கணம்
ஆய்வு நிகழ்த்தியவர்: ப.க.மணிமேகலை, தமிழ்த்துறை தூய தாமஸ் கலை அறிவியல் கல்லூரி, சென்னை
- மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞான உமர் கயாம்
ஆய்வு நிகழ்த்தியவர்: கவிஞர் இ.முகமதலி, மக்கள் தொடர்பு அலுவலர், பி.எஸ்.என்.எல். (ஓய்வு), திருச்சி
- காயல் சூபி கவிஞர்
ஆய்வு நிகழ்த்தியவர்: அதிரை அருட்கவி மு.முகம்மது தாஹா, அதிராம்பட்டினம்
- அறிஞர் சித்தி லப்பையின் படைப்புகளில் மெய்ஞ்ஞானம்
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் பி. எம். ஜமாஹிர், மெய்யியல் உளவியல் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை
- ஞானப் பெண்மணி கட்சிப் பிள்ளை அம்மாள்
ஆய்வு நிகழ்த்தியவர்: பேராசிரியர் சா. நசீமாபானு, காரைக்கால்
ஆய்வரங்கம் 03
தொகுஉமர் ஒலி அரங்கம் எஸ். ஏ. சுலைமான் கட்டிடம், எல். கே. மேனிலைப்பள்ளி மண்டபத்தில் சூலை 9, 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு மேனாள் காப்பாட்சியர் அருங்காட்சியம், சென்னை, முனைவர் ஜெ. ராஜா முகம்மது தலைமை தாங்கினார்.
தலைப்பு: வரலாறு
- பரங்கிப்பேட்டை வரலாற்று நோக்கில் ஒரு பன்முகப் பார்வை.
ஆய்வு நிகழ்த்தியவர்: சாதிக் அப்துல் ஹமீது, தமிழ்த்துறைத் தலைவர், முஹம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி, சோழகங்க நல்லூர், சென்னை
- வேதாரண்யம் உப்பு சத்தியா கிரகத்தில் தமிழக முஸ்லிம்களின் பங்கு - ஓர் ஆய்வு
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் கே. சங்கரி, வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- குமரியில் இஸ்லாம்
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் எஸ். பத்மநாபன், பொதுச் செயலர், கன்னியாகுமரி, வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம்
- இந்திய விடுதலைப் போரில் கான் சாகிபின் பங்கு
ஆய்வு நிகழ்த்தியவர்: இரா. பாலாஜி, வரலாற்றுத்துறை, உதவிப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
- இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளில் வகி பங்கு
ஆய்வு நிகழ்த்தியவர்: செல்வி. எஸ். ஏ. சி. பெரோஸியா, வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை
- இலங்கை இஸ்லாமிய தமிழிலக்கியத்தில் கண்டி வகி பாகம்
ஆய்வு நிகழ்த்தியவர்: ஆர். மகேஸ்வரன், துணை நூலகர் பேராதனைப் பல்கலைக்கழகம்
- காயல்பட்டினத்தின் வரலாற்றுச் சுருக்கம்
ஆய்வு நிகழ்த்தியவர்: கே. ஜே. முஹம்மது அஜ்ஹாருதீன், கூத்தாநல்லூர்
- பொன் விழாக்கண்ட காயல்பட்டினம் எல். கே. பள்ளி
ஆய்வு நிகழ்த்தியவர்: கே. ஏ. ஜஹபர் உசேன் கூத்தாநல்லூர்
- இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர் பங்கு
ஆய்வு நிகழ்த்தியவர்: பேராசிரியர் மை. பரீதாபேகம், வரலாற்றுத்துறை காதிர் முகைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்
- நூற்றாண்டு காலக் காயல் - கீழை இணையங்கள்
ஆய்வு நிகழ்த்தியவர்: மானா மக்கீன், இலங்கை
ஆய்வரங்கம் 04
தொகுகண்ணகமது மொகுதூம் முஹம்மது அரங்கம் எஸ். ஏ. சுலைமான் கட்டிடம், எல். கே. மேனிலைப்பள்ளி மண்டபத்தில் சூலை 9 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு எஸ். முத்துமீரான் தலைமை தாங்கினார்.
தலைப்பு: சமயம்
- அட்சரம் மாறாத அல்குர்ஆன்
ஆய்வு நிகழ்த்தியவர்: கவிஞர் நா.இராச செல்வம், விரிவுரையாளர், புதுச்சேரி
- இஸ்லாமும் தமிழும் இயம்பும் இணைக் கூறுகள்
ஆய்வு நிகழ்த்தியவர்: கவிஞர் சீ. ராசா முஹம்மது, தென்காசி
- இனிய சமயம் இஸ்லாம் மார்க்கம்
ஆய்வு நிகழ்த்தியவர்: கவிஞர் சீர்காழி இறையன்பனார், சீர்காழி
- செம்மொழித் தமிழும் இஸ்லாமிய சமயமும்
ஆய்வு நிகழ்த்தியவர்: கவிஞர் பொன்னகரம் சுல்தான், சென்னை
- இஸ்லாம் காட்டும் சீரிய நெறி
ஆய்வு நிகழ்த்தியவர்: சா. செய்யது முஹம்மது, தலைமையாசிரியர், கிருஸ்ணகிரி
- மனிதநேயம் காத்த மாநபி
ஆய்வு நிகழ்த்தியவர்: கவிஞர் இ. மு. முஹம்மது புகாரி, கடையநல்லூர்
- பெரும் புரட்சியாளர் பெருமானார்
ஆய்வு நிகழ்த்தியவர்: மௌலவி எம்.முஹம்மது ரஃபீக் ரஸ்ஸாதி, விழுப்புரம்
- அஸ்-ஸாஉ
ஆய்வு நிகழ்த்தியவர்: மௌலவி எம். சி. எம். சுஹைல், இலங்கை
- திருக்குறளும் தீனுல் இஸ்லாமும்
ஆய்வு நிகழ்த்தியவர்: பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர், முதுகலை தமிழ்த்துறைத் தலைவர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, காரைக்கால்
- இஸ்லாம் காட்டும் சீரிய நெறி
ஆய்வு நிகழ்த்தியவர்: சா. சையத் முஹம்மது, தலைமையாசிரியர், கிருஸ்ணகிரி
- ஈரோடு தமிழன்பன் பார்வையில் இஸ்லாம்
ஆய்வு நிகழ்த்தியவர்: பா.மொஹிதீன் பாசா, சென்னை
- என்னைக் கவர்ந்த இஸ்லாம்
ஆய்வு நிகழ்த்தியவர்: சொல்லின் செல்வர் இல .க. கபாஸ் சந்திரபோஸ் சிவகங்கை
ஆய்வரங்கம் 05
தொகுமாப்பிள்ளை லெப்பை ஆலிம் அரங்கம் எஸ். ஏ. சுலைமான் கட்டிடம், எல். கே. மேனிலைப்பள்ளி மண்டபத்தில் சூலை 9 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு அறிஞர் அண்ணா அரச கலைக்கல்லூரி காரைக்கால், பேராசிரியர் சா. நசீமா பானு, மேனாள் முதுகலைத் தமிழ்த்துறை தலைமை தாங்கினார்.
தலைப்பு: பண்பாடு சமூகம்
- அரவாணிகள் பிண்ணனியில் இஸ்லாம்
ஆய்வு நிகழ்த்தியவர்: கி. அய்யப்பன், முனைவர் பட்ட ஆய்வாளர் மாநிலக் கல்லூரி, சென்னை
- இஸ்லாமும், முஸ்லிம் அல்லாதவர்களும்
ஆய்வு நிகழ்த்தியவர்: பேரா. அ. கமாலுதீன், முதல்வர், சுல்தானா அப்துல்லா ராவுத்தர் கல்லூரி, கூத்தாநல்லூர்
- இஸ்லாத்தில் வாழ்வியல் சிந்தனைகள்
ஆய்வு நிகழ்த்தியவர்: வே.செந்தில் ஆறமுகம், ஆரல்வாய் மொழி
- இஸ்லாமியப் பண்பாட்டில் பெண்களின் வாழ்வியல் நிலைகள்
ஆய்வு நிகழ்த்தியவர்: த. தங்கம், முனைவர் பட்ட ஆய்வாளர், தெ. தி. இந்துக்கல்லூரி நாகர்கோவில்
- புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் வாழ்வியலும் பண்பாடும்
ஆய்வு நிகழ்த்தியவர்: ஏ. தாஹிரா தஸ்வீர், இலங்கை.
- பெண்கள் தைக்கா
ஆய்வு நிகழ்த்தியவர்: கே. எஸ். ஏ. பாத்திமா கலீஃபா, காயல்பட்டினம்
- வேண்டாம் வரதட்சணை! வேண்டும் சீதனம்!
ஆய்வு நிகழ்த்தியவர்: அல்ஹாஜ் எம். எஸ். எம். புகாரி பாகவி, மஹ்லரி
- காரைக்கால் மரைக்காயர்களின் வேட்டை முறைகளும் பழக்கவழக்கங்களும்
ஆய்வு நிகழ்த்தியவர்: மு. இ. முகம்மது ஹஸன் மரைக்காயர், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, காரைக்கால்
- இலங்கையில் தமிழ் முஸ்லிம் இன ஒருமைப்பாட்டைத் மட்டி எழுப்புவதில் தமிழ் மொழியின் பங்கு
ஆய்வு நிகழ்த்தியவர்: முஃபஸ்ஸல் அபூபக்கர், தத்துவம், உளவியல் துறை விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை
- இஸ்லாமியப் பண்பாடு விருந்தோம்பல்
ஆய்வு நிகழ்த்தியவர்: ஹாஜி அ. ஹனீபா தலைமையாசிரியர் (ஓய்வு) கோட்டாப்பாளையம், திருச்சி மாவட்டம்
- தமிழ்நாடு உருது முஸ்லிம்களின் திருமணச் சடங்கு முறை
ஆய்வு நிகழ்த்தியவர்: எம்.எஸ். அமானுல்லா சென்னை
ஆய்வரங்கம் 06
தொகுவிளக்கு முஹம்மது முஹியதீன் லெப்பை புலவர் அரங்கம் எஸ். ஏ. சுலைமான் கட்டிடம், எல். கே. மேனிலைப்பள்ளி மண்டபத்தில் சூலை 9, 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக, தமிழியல் துறைத் தலைவர் முனைவர், க.அழகேசன் தலைமை தாங்கினார்.
தலைப்பு: சிற்றிலக்கியம்
- இஸ்லாமிய இலக்கியப் படைப்புலகில் மரபும், புதுமையும்
ஆய்வு நிகழ்த்தியவர்: வே.எழிலரசு, சென்னை.
- ஞானியர் தாயகம் அபுல்ஹசன் சாதுலி நாயகம் சிற்றிலக்கியத் திறன்
ஆய்வு நிகழ்த்தியவர்: ஏ. எஸ் .எம். காஸா அதிராம்பட்டினம்
- இஸ்லாமிய சிற்றிலக்கியம்
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் சு. காளிமுத்து தமிழ் விரிவுரையாளர் பூம்புகார் கல்லூரி, மேலையூர்.
- நவீனத்துவ நோக்கில் அறிஞர் ஆற்றுப்படை
ஆய்வு நிகழ்த்தியவர்: கு.சுந்தரமூர்த்தி தமிழித்துறை உதவிப் பேராசிரியர் புதுக்கல்லூரி, சென்னை
- அதிரை அகமதுவின் பெண்மணி மாலை
ஆய்வு நிகழ்த்தியவர்: மா. ரசல் ஜெயபதி உதவிப் பேராசிரியர் தூய தாமஸ் கலை அறிவியல் கல்லூரி சென்னை
- குணங்குடி மஸ்தாவின் நிராமைய கண்ணியில் நிலையாமை
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் எம். லோகநாயகி, சென்னை
- புலவர் நாயகத்தின் மடல்கள்
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் மு. இ. அகமது மரைக்காயர் தமிழ்த்துறை புதுக்கல்லூரி, சென்னை
- காயிதே மில்லத் பிள்ளைத் தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகள்
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் ந. வியாசராயர் தமிழ்த்துணை பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி காரைக்கால்
ஆய்வரங்கம் 07
தொகுபனீ அஹமது மரைக்காயர் அரங்கம் எஸ். ஏ. சுலைமான் கட்டிடம், எல். கே. மேனிலைப்பள்ளி மண்டபத்தில் சூலை 9 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக, தமிழியல்த்துறைத் தலைவர், கலாநிதி துரை மனோகரன் தலைமை தாங்கினார்.
தலைப்பு: கவிதை
- அஸ்லம் பாசாவின் மனசப் பூக்கள் - ஹைக்கூ கவிதைகளில் வெளிப்பாட்டு உத்தி
ஆய்வு நிகழ்த்தியவர்: த. ஆதித்தன் உதவிப் பேராசிரியர், தூய தாமஸ் கலை அறிவியல் கல்லூரி, சென்னை
- அதிரை அருட்கவியின் உலகியல் பார்வை
ஆய்வு நிகழ்த்தியவர்: அரிமா. சை. பிச்சை மொகிதீன் திருச்சி
- உணர்வுப் பாவலர் ஹசேன் கவிதைகளில் சமுதாய அவலமும் தீர்வும்
ஆய்வு நிகழ்த்தியவர்: ஸ்ரீ பிரேம் குமார் தூய தமாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை
- இறையருட்கவிமணியின் நாயகமே
ஆய்வு நிகழ்த்தியவர்: ஹாஜி எஸ்.கே.எம். ஹாஜா முஹைதீன், மேலாளர் இமாம் சாபி மெட்ரிக் மேனிப்பள்ளி, அதிராம்பட்டினம்.
- அறிந்தோர்க்கு அபியின் கவிதைகள்
ஆய்வு நிகழ்த்தியவர்: பேராசிரியர் அ. சவ்தா உம்மாள் அ.அ.அ. கலைக்கல்லூரி, காரைக்கால்
- மேத்தாவின் பிள்ளைத் தமிழ்
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர்.அ. அறிவுநம்பி சுப்பிரமணிய பாரதியார் தமிழியல் புலம், புதுவை
- நபிகள் நாயகம் அன்பின் தாயகம்
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் ச.மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி
- அப்துல் காதர் உணர்த்தும் தொழிலாளர் குறித்த சிந்தனைகள்
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர். க.அழகேசன், தமிழியல் துறைத் தலைவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
- கவிஞர் ஈரோடு தமிழன்பனின் இடுகுறிப்பெயரில்லை இஸ்லாம்
ஆய்வு நிகழ்த்தியவர்: பேராசிரியர் செ.சையது அபுதாஹிர் புதுக்கல்லூரி, சென்னை
- அருவாசகம் ஆயிரத்தில் வாழ்வியல் கருத்துக்கள்
ஆய்வு நிகழ்த்தியவர்: பேராசிரியர் பா. உசேன்கான் புதுக்கல்லூரி சென்னை
ஆய்வரங்கம் 08
தொகுஅ. க. முஹம்மது அப்துல் காதர் அரங்கம் எஸ். ஏ. சுலைமான் கட்டிடம், எல். கே. மேனிலைப்பள்ளி மண்டபத்தில் சூலை 9 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் துணைத்தலைவர் அதிரை அருட்கவி மு. முஹம்மது தாஹா தலைமை தாங்கினார்.
தலைமை: வாழ்க்கை வரலாறு
- சிங்கப்பூரின் நல்லிணக்க நாயகர் ஹாஜி எம். கே. எம். ஜெப்பார்
ஆய்வு நிகழ்த்தியவர்: எம். இலியாஸ் சிங்கப்பூர்
- நல்லூர்ச் செல்வன் சிராஜ் அப்துல் ஹை.
ஆய்வு நிகழ்த்தியவர்: சேயன் இபுராஹிம் உதவி கண்காணிப்பாளர் (ஓய்வு) தபால் தந்தித் துறை சென்னை
- செய்குது முஸ்தபா நாயகம்
ஆய்வு நிகழ்த்தியவர்: காத்தான்குடி மௌலவி பௌஸ் இலங்கை
- பூவாறும் கோட்டாறும்
ஆய்வு நிகழ்த்தியவர்: கோட்டாறு அகமது கபீர், கோட்டாறு
- தக்வாவின் தென்றல் அல்லாமா அபுஸ்ஸீஊது அஹ்மது
ஆய்வு நிகழ்த்தியவர்: தளபதி ஏ.சபிகுர் ரஹ்மான், லால்பேட்டை
- தஞ்சை மண் தந்த தனிப்பெருங்கவிஞர் நபிநேசன்
ஆய்வு நிகழ்த்தியவர்: எம்.நஜ்மா முஹ்யத்தீன் முஅஸ்கரியா, எரல்
- காசிம் புலவரின் இலக்கியக் கண்ணோட்டம்
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் அ.சே.சேக்சிந்தா சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி
- சதக்கத்துல்லாஹ் அப்பாவின் வாழ்வும் பணியும்
ஆய்வு நிகழ்த்தியவர்: அ.மு. அயூப்கான் உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி
- கண்ணகுமது மகுதூ முகம்மதுப் புலவரின் இலக்கியப் பங்களிப்பு
ஆய்வு நிகழ்த்தியவர்: பேராசிரியர் முரளி அரூபன், புதுக்கல்லூரி, சென்னை
ஆய்வரங்கம் 09
தொகுஎல். கே. லெப்பை தம்பி அரங்கம் எஸ். ஏ. சுலைமான் கட்டிடம், எல். கே. மேனிலைப்பள்ளி மண்டபத்தில் சூலை 9 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி காரைக்கால் பேராசிரியர் இ. லியாக்கத் அலி (வேதியியல் துறைத் தலைவர்) தலைமை தாங்கினார்.
- தலைப்பு: அறிவியல் கல்வி
- மார்க்கக் கல்வியும், உலகக் கல்வியும்
ஆய்வு நிகழ்த்தியவர்: ஏ. ஸி. எம். அஸ்ஹர், இலங்கை
- பேசாமல் பேசும் மொழிகள்
ஆய்வு நிகழ்த்தியவர்: ரஹ்மத் ராஜகுமாரன் மேலப்பாளையம்
- சமச்சீர் கல்வி
ஆய்வு நிகழ்த்தியவர்: எம்.அப்துல் ஹாதி, உளுந்தூர்பேட்டை
- இஸ்லாமியத் தமிழாக மாறுவதெப்போ?
ஆய்வு நிகழ்த்தியவர்: கலாபூசணம் எஸ். ஐ. நாகூர் கனி, இலங்கை
- இஸ்லாமிய - தொழுகை மருத்துவம்
ஆய்வு நிகழ்த்தியவர்: டாக்டர் எம். ஏ. ஹாருன் யுனானி மருத்துவர் மயிலாடுதுறை
- இஸ்லாமும் அறிவியலும் - சூரிய கிரகணம் சந்திரகிரகணம்
ஆய்வு நிகழ்த்தியவர்: பேராசிரியர் இ.லியாக்கத் அலி வேதியல் துறைத் தலைவர், அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி, காரைக்கால்
- சாயபு மரைக்காயரின் அறிவியல் அறிஞர்கள்
ஆய்வு நிகழ்த்தியவர்: ஏ. எல். ஜஹபர் சாதிக் மரைக்காயர் கணினி பயிற்றுனர், வ.உ.சி. மேனிப்பள்ளி, காரைக்கால்
ஆய்வரங்கம் 10
தொகுஎம். கே. டி. முஹம்மது அபூபக்கர் அரங்கம் எஸ். ஏ. சுலைமான் கட்டிடம், எல். கே. மேனிலைப்பள்ளி மண்டபத்தில் சூலை 9 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு புதுச்சேரி புதுவைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பேராசிரியர், முனைவர் அ. அறிவு நம்பி தலைமை தாங்கினார்.
- தலைப்பு: இக்கால இலக்கியங்கள்
- ஜெய்யுன்னிஸாவின் சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்
ஆய்வு நிகழ்த்தியவர்: ஓ.மு.சே. அமீர்ஹம்ஸா பீவி தமிழ்த்துறைத் தலைவர், நீதிபதி பசீர் அஹமது செய்யது பெண்கள் கல்லூரி, சென்னை
- பெற்ற மனம் சிறுகதையில் ஜின்னா சர்புதீன் சஞ்சரிக்கும் உலகம்
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் பொன். சண்முகம் தமிழ்த்துறைத் தலைவர், தூய தாமஸ் கல்லூரி, சென்னை
- இலங்கையின் முதல் தமிழ் நாவல் அசன்பே சரித்திரம் ஓர் ஆய்வு
ஆய்வு நிகழ்த்தியவர்: கலாநிதி துறை மனோகரன் தமிழ்த்துறைத் தலைவர் பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை
- சாயபு மரைக்காயரின் குழந்தை இலக்கிய நயங்கள்
ஆய்வு நிகழ்த்தியவர்: வீ சதீஸ்குமார், தமிழ்த்துறைத் தலைவர், மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரி, பட்டுக்கோட்டை
- இஸ்லாமியத் தமிழ் நாடகங்களில் விழுமியங்கள்
ஆய்வு நிகழ்த்தியவர்: த. விஜயகுமார், காஞ்சிபுரம்
- 'தாழை மதியவனின் பூமழைப் பொழியும் சிறுகதைத் தொகுப்பில் பெண்கள் நிலை
ஆய்வு நிகழ்த்தியவர்: பேராசிரியர் கி. அசோகன் புதுக்கல்லூரி, சென்னை
- மரபு மரத்தில் நவீன விதைகள்
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி புதுக்கல்லூரி, சென்னை
- பர்வீன்பானு சிறுகதைகள் ஓர் பார்வை
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் ஹ. மு. நத்தர்ஸா தமிழ்த்துறைத் தலைவர் புதுக்கல்லூரி, சென்னை
- ஊரடங்கு உத்தரவு புதினம்வழி அறியலாகும் சமூகவியல் கோட்பாடுகள்
ஆய்வு நிகழ்த்தியவர்: ஹா. ஹிதாயத்துல்லா புதுக்கல்லூரி, சென்னை
ஆய்வரங்கம் 11
தொகுவி. எம். எஸ். லெப்பை அரங்கம் எஸ். ஏ. சுலைமான் கட்டிடம், எல். கே. மேனிலைப்பள்ளி மண்டபத்தில் சூலை 9 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு புதுச்சேரி காஞ்சி மாமுனிவர், பட்டமேற்படிப்பு மைய, தமிழ்ப் பேராசிரியர், முனைவர் நா. இளங்கோ தலைமை தாங்கினார்.
- தலைப்பு: நாட்டுப்புறவியல்
- குத்தனம் - மன்னார் பிரதேச கோலாலட்டக்கலை
ஆய்வு நிகழ்த்தியவர்: கலாபூசணம் அல்ஹாஜ் எம். ஐ. எம். அப்துல் லத்தீப், இலங்கை
- இலங்கை முஸ்லிம் புலவர்களின் வாய்மொழிப் பாடல் பாரம்பரியம்
ஆய்வு நிகழ்த்தியவர்: பேராசிரியர் செ. யோகராஜா மொழித்துறை, கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை
- கிண்ணியா நாட்டார் பாடல்களின் இலக்கியப் பங்களிப்பு
ஆய்வு நிகழ்த்தியவர்: கவிஞர் ஐ. ஏ. ஹசன்ஜி, இலங்கை
- அடிப்படைக் கூறுகளை ஆளப்படுத்தும் தன்னார்வப் பாடல்கள்
ஆய்வு நிகழ்த்தியவர்: பாவலர் சாந்தி முஹியத்தீன், இலங்கை
- தென்கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டார் இயலில் நாட்டார் பாடல்கள்
ஆய்வு நிகழ்த்தியவர்: மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத். இலங்கை
- பொலநறுவை மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் மட்டும் வழங்கிவரும் பழமொழிகள் ஓர் அறிமுகம்
ஆய்வு நிகழ்த்தியவர்: எஸ். வை. ஸ்ரீதர், இலங்கை
- தோப்பிலார் படைப்புகளில் நாட்டுப்புறக் கூறுகள்
ஆய்வு நிகழ்த்தியவர்: முனைவர் கலிலூர் ரஹ்மான், தமிழ்த்துறைத் தலைவர், காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்
பட்டிமன்றம்
தொகுஅறிஞர் எம். ஆர். எம். அப்துர் ரஹீம் அரங்கம் மாநாட்டில் சூன் 9 2011ல் ஐக்கிய விளையாட்டு சங்கத் திடலில் பட்டிமன்றம் நடைபெற்றது. இப்பட்டிமன்றத்திற்கு பேராசிரியர் தி. மு. அப்துல் காதல் தலைமை தாங்கினார்.
பட்டிமன்ற தலைப்பு - இன்றைய சூழலில் இஸ்லாமியரின் நிலை வாழ்த்தும் படியா வருந்தும் படியா?
மாநாட்டு சிறப்பு மலர் வெளியீடு
தொகுஹாபிழ் கே. எம். செய்யது அஹ்மது அரங்கம். மாநாட்டு சிறப்பு மலர், ஆய்வுக்கோவை, இலக்கிய இணையம், கவிதைத் தொகுப்பு - ஊடகம் ஆகிய நூல்கள் சூன் 9 ஐக்கிய விளையாட்டு சங்கத் விசேட அரங்கில் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வுக்கு எஸ். அக்பர்சா தலைமை தாங்கினார்.
நூல் அறிமுகத்தை பேராசிரியர் ஹா. மு. நத்தர்சாவும், நூல் வெளியீட்டு சிறப்புரையை தமிழக இந்து அறநிலைத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ். பி. சண்முகநாதன் அவர்களும் நிகழ்த்தினார். வாழ்த்துறை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஆ. செல்வராஜன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
மகளிர் அரங்கம்
தொகுசுல்தான் ஜமாலுதீன் நுழைவு வாயில் அறிஞர் முஹம்மது கல்ஜி அரங்க மண்டபத்தில் ஆகத்து 10, 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு பேராசிரியர் சா. நசீமா பானு தலைமை தாங்கினார். இவ்வரங்கில் சென்னை ஜட்சிஸ் பசீர் அஹமது மகளிர் கல்லூரி முனைவர் பர்வீன் சுல்தானா, காரைக்கால், அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரிப் பேராசிரியர் சவ்தா உஸ்மான், இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பௌசியா, இலங்கை ஊடகத்துறையைச் சேர்ந்த புர்கான் பீவி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
கருத்தரங்கம்
தொகுமுத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரங்கம் ஐக்கிய விளையாட்டுச் சங்க மண்டபத்தில் ஆகத்து 10 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் (முன்னாள் துணைவேந்தர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்) தலைமை தாங்கினார்.
தலைப்பு: இனிய வாழ்வுக்கு இஸ்லாமிய நெறிகள்
கருத்தரங்கில் பின்வருவோர் கருத்துரைகளை வழங்கினர்.
- ஆன்மீகம்: முனைவர் அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன்
- அரசியல்: டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது (துணைத் தலைவர் - இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை)
- சகோதரத்துவம்: நாவுக்கரசர் திரு. நாஞ்சில் சம்பத் (கொள்கை விளக்க அணிச் செயலாளர் - ம.தி.மு.க.)
- குடும்பம்: பேராசிரியர் முனைவர் சே.மு.முகம்மதலி (பொதுச் செயலாளர் - முஸ்லிம் தொண்டு இயக்கம்)
- சமத்துவம்: முனைவர் ராஜகோபால்
- நன்றியுரை: ஹாஜி ஏ.எஸ். ஜமால் முஹம்மது (துணைத் தலைவர் ஹாங்காங் தமிழ்ச் சங்கம்)
இஸ்லாமிய பாடல் அரங்கம்
தொகுசங்கநாதச் செம்மணி ஏ. ஆர். சேக். முகம்மது அரங்கம் இவ்வரங்கம் அப்துல் ரஜாக் தலைமையில் நடைபெற்றது. முகவை எஸ். ஏ. சினி முகம்மது குழுவினரின் இஸ்லாமிய பாடல்கள் இடம்பெற்றன.
நிறைவுவிழா
தொகுநிறைவு விழா அல்லாமா ஹபீப் முகம்மது லெப்பை ஆலிம் அரங்க மண்டபத்தில் சூலை 10 2011 இல் நடைபெற்றது. இவ்வரங்கிற்கு ஹாஜி வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.