ஈரானில் பெண்கள்
ஈரானில் பெண்கள் (women in Iran) வரலாறு முழுவதும் , ஈரானியப் பெண்கள் ஈரானிய சமுதாயத்திற்கு ஏராளமான பாத்திரங்களை வகித்துள்ளனர். மேலும் பல வழிகளில் பங்களித்துள்ளனர். வரலாற்று ரீதியாக, பாரம்பரியமே பெண்களை தங்கள் வீடுகளில் மட்டுப்படுத்தியிருக்கலாம். இதனால் அவர்கள் வீட்டை நிர்வகிக்கவும் குழந்தைகளை வளர்க்கவும் முடிந்தது. பகலவி காலத்தில், பெண்களைப் பிரிப்பதில் கடுமையான மாற்றம் ஏற்பட்டது: முக்காடு தடை, வாக்களிக்கும் உரிமை, கல்வி உரிமை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான சம்பளம், பொது பதவி வகிக்கும் உரிமை போன்றவை. ஈரானியப் புரட்சியில் பெண்கள் தீவிரமாக பங்கேற்றனர். 1979இல் இசுலாமியப் புரட்சிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஈரானின் அரசியலமைப்பு, இசுலாமியச் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் சட்டக் குறியீட்டைக் கட்டாயப்படுத்தும் அதே வேளையில், பிரிவு 20இன், [2] கீழ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவத்தை அறிவிக்கிறது. சட்டத்தின் கூற்றுப்படி, ஒரு ஆண்களுக்கென கிடைக்கும் உரிமையில் பாதியை பெண்கள் பெறுகிறார்கள். ஒரு பெண்ணின் மரணத்திற்கான இழப்பீடும் பாதிதான் கிடைக்கிறது. இசுலாமியச் சட்டம் இன்னும் ஆண்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. ஆனால் அரசியலமைப்பின் 21வது பிரிவும், பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்களும் பெண்களுக்கு சில நன்மைகளைத் தருகின்றன. பெண்கள் வாகனம் ஓட்டவும், அலுவலகங்களில் பணிபுரியவும், பல்கலைக்கழகத்தில் சேரவும் அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுவெளியில் முக்காடு அணியாமல் இருப்பது சட்டத்தால் தண்டிக்கப்படலாம். [3] மேலும், பொதுவெளியில் இருக்கும்போது, முகம் மற்றும் கைகளைத் தவிர அனைத்துத் தோலையும் மறைக்க வேண்டும். [4]
கெமார் இசையமைக்கும் அரசவை இசைக்கலைஞர், கஜார் ஈரான், 1825. | |
பாலின சமனிலிக் குறியீடு | |
---|---|
மதிப்பு | 0.496 (2012) |
தரவரிசை | 107th |
தாய் இறப்புவீதம் (100,000க்கு) | 21 (2010) |
நாடாளுமன்றத்தில் பெண்கள் | 6% (2016) |
உயர்நிலைக் கல்வி முடித்த பெண் 25 அகவையினர் | 62.1% (2010) |
பெண் தொழிலாளர்கள் | 49% (2011) |
உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு[1] | |
மதிப்பு | 0.589 (2018) |
தரவரிசை | 142nd out of 136 |
வரலாறு
தொகுபண்டைய ஈரான்
தொகுதென்கிழக்கு ஈரானின் சிசுதான்-பலுச்சிசுதான் மாகாணத்தில் வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றமான ஷாஹர்-இ சுக்தே ("எரிந்த நகரம்") என்ற இடத்தில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிமு 3ஆம் ஆயிரமாண்டு முதல் கிமு 4ஆம் ஆயிரமாண்டு வரை இப்பகுதியில் பெண்கள் உயர் சமூக தகுதிநிலையைக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வந்துள்ளது. அங்குள்ள கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், 90% பெண்களைச் சார்ந்தே உள்ளன. [5] மக்கள் தொகையில் 60% க்கும் அதிகமானவர்கள். [6] இந்த பொருட்கள் - பொருளாதார மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் குறிக்கும் வர்த்தக மற்றும் அரசாங்கத்தின் கருவிகள் - இந்த பெண்கள் தங்கள் வரலாற்றுக்கு முந்தைய சமூகத்தில் ஒரு சக்திவாய்ந்த குழுவாக இருந்ததை வெளிப்படுத்தின.
"அரச குடும்பத்தினர் அல்லாதவர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்கள் அவர்கள் பணிபுரிந்த குறிப்பிட்ட பணிக்குழு அல்லது பட்டறைகளில் அவர்களின் தரவரிசை மூலம் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள் பெற்ற உணவுப் பொருட்களும் திறன் மற்றும் பணியிடத்தில் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பின் அளவை அடிப்படையாகக் கொண்டவை. தொழில்கள் பாலினத்தால் வகுக்கப்பட்டு உணவுப் பொருட்களின் அளவிற்கு ஏற்ப பட்டியலிடப்படுகின்றன. சில தொழில்கள் இரு பாலினத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகவும், மற்றவர்கள் ஆண் அல்லது பெண் தொழிலாளர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாகவும் பதிவுகள் குறிப்பிடுகின்றன. கலப்பு பட்டறைகளில் ஆண் மற்றும் பெண் மேற்பார்வையாளர்கள் இரு பாலினருக்கும் இடையிலான உணவுப் பொருட்களின் எண்ணிக்கையில் சிறிய வித்தியாசத்துடன் அவர்கள் பெற்ற உயர் உணவுப் பொருட்களாக தெளிவாகத் தெரிகிறது. ஆண்களின் அதே பிரிவில் பட்டியலிடப்பட்ட பெண்கள் குறைவான உணவுப் பொருட்களையேப் பெற்ற சந்தர்ப்பங்களும் உள்ளன. பெண் மேலாளர்கள் வெவ்வேறு தலைப்புகளைக் கொண்டுள்ளனர். இது அவர்களின் திறமை மற்றும் தரத்தை பிரதிபலிக்கிறது. மிக உயர்ந்த பெண் தொழிலாளர்கள் அராஷ்ஷரா (சிறந்த தலைவர்) என்று அழைக்கப்படுகிறார்கள். [7] கர்ப்பிணிப் பெண்களும் மற்றவர்களை விட அதிக உணவுப் பொருட்களைப் பெற்றனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் கூடிய பெண்களுக்கும் ஒரு மாதத்திற்கு கூடுதல் உணவுப் பொருட்கள் கிடைத்தது.
ஒரு சில வல்லுநர்கள், இசுலாமியத்திற்கு பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், பெண்களின் கற்புத்தன்மையைப் பாதுகாக்க மூடிமறைக்கும் வழக்கத்தை பேரரசர் சைரஸ் நிறுவினார் எனக் கூறுகின்றனர் . அவர்களின் கோட்பாட்டின் படி, முக்காடு அகாமனிசியர்களிடமிருந்து செலூக்கியர்களுக்குச் சென்றது. அவர்கள் இதனை பைசாந்தியர்களிடம்ஒப்படைத்தனர் . பின்னர் வந்த அரபு வெற்றியாளர்கள் அதை ஹிஜாபாக மாற்றி, முஸ்லிம் உலகின் பரந்த பகுதிகளுக்கு அனுப்பினர்.
இசுலாமிய காலங்கள்
தொகுகஜார் காலத்தில் பெண்கள் தொழிலாளர்களின் பங்கைக் கொண்டிருந்தனர். இது பொருளாதாரத்தில் முக்கியமானதாக இருந்தது. அவர்களின் பணி எப்போதும் குடும்பம், வணிக உரிமையாளர்கள் மற்றும் அரசுக்கு பயனளித்தது. கிராமப்புற மற்றும் கீழ் வர்க்க பெண்கள் பெரும்பாலும் கம்பள நெசவு, பூத்தையல் மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டனர்: ஆடை, துணி, வெண்ணெய், பழங்கள் மற்றும் தேநீர் போன்றவையும் அடங்கும். அவர்கள் பட்டு மற்றும் பருத்தி உற்பத்தியிலும், பிற கைவினைப்பொருட்கள் தயாரிப்பதிலும் பணியாற்றினர். சவக்கிடங்குகள், பொது குளியல் அறைகள் மற்றும் பணக்கார வீடுகளில் பணிப்பெண்களாகவும், செவிலியர்களாகவும், ஆயாக்களாகவும் பெண்கள் பணியாற்றினர். [8] அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பெண்கள் பொழுதுபோக்கு கலைஞராகவும், நடனக் கலைஞர்களகவும் அல்லது பாலியல்தொழிலாளியாகவும் பணியாற்றினர். பெண்களுக்கு பல வேலை வாய்ப்புகள் திறந்திருந்தாலும் அவர்களின் ஊதியம் குறைவாக இருந்தது. இந்த காலகட்டத்தில் ஜவுளி வேலை செய்யும் பெண்களுக்கு ஆண்கள் பெறும் ஊதியத்தில் சராசரியாக மூன்றில் ஒரு பங்கையேப் பெற்றனர். [9] பெண்களுக்கு கூலி சம்பாதிக்கும் திறன் வழங்கப்பட்டாலும், அவர்களுக்கு இன்னும் பல உரிமைகள் இல்லை என்றாலும், கிராமப்புற சிறுமிகளை அவர்களது குடும்பத் தலைவரால் விற்க முடிந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Global Gender Gap Report 2018" (PDF). World Economic Forum. pp. 10–11.
- ↑ "Iran's Constitution" (PDF). Archived from the original (PDF) on 2022-02-02. பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
- ↑ "Iran: Dozens of women ill-treated and at risk of long jail terms for peacefully protesting compulsory veiling".
- ↑ "Iran jails woman for removing headscarf in public". 8 March 2018. பார்க்கப்பட்ட நாள் 16 February 2021.
- ↑ CHN Press. "Women Held Power In Burnt City". பார்க்கப்பட்ட நாள் April 11, 2007.
- ↑ CHN Press. "Female population predominant in 5000-year-old Burnt City". பார்க்கப்பட்ட நாள் April 11, 2007.
- ↑ Price, Massoume. "Women's Lives in Ancient Persia". பார்க்கப்பட்ட நாள் January 16, 2007.Price, Massoume. "Women's Lives in Ancient Persia". Retrieved January 16, 2007.
- ↑ Paidar, Women and the Political Process, 41; Bamdad, From Darkness into Light, 14.
- ↑ Foran, John. Fragile Resistance: Social Transformation in Iran from 1500 to the Revolution. Westview Press, 1993., pp. 382
women and politics in Iran: Veiling, Unveiling, and Reveiling. Hamideh Sedghi, “Women and Politics in Iran”, New York: published 2007
^Higher Education of women in Iran: Progress or Problem Heshmat Sadat Moinifar. “Higher Education of Women in Iran: Progress or Problem?”. International Journal of Women's Research,1,1,2012, 43-60
மேலும் படிக்க
தொகு- Persian Women & Their Ways Clara Colliver Rice. 1923. Seeley, Service & Co.
- Voices from Iran: The Changing Lives of Iranian Women. Mahnaz Kousha. Syracuse University Press. 2002.
- Veils and Words: The Emerging Voices of Iranian Women Writers. Farzaneh Milani. Published 1992 by I.B.Tauris
- Piyrnia, Mansoureh. Salar Zanana Iran. 1995. Maryland: Mehran Iran Publishing.
- Brosius, Maria. Women in Ancient Persia, 559–331 B.C. Oxford Classical Monographs. Oxford University Press (UK), 1998.
- Farman Farmaian, Sattareh. 1992. Daughter of Persia: A Woman's Journey from Her Father's Harem Through the Islamic Revolution. New York: Three Rivers Press.
- Najmeh Khalili Mahani, Women of Iranian Popular Cinema: Projection of Progress, Offscreen, Vol. 10, Issue 7, July 31, 2006, [1].
வெளி இணைப்புகள்
தொகு- IranDokht' – A comprehensive portal and magazine
- Iran Electoral Archive – Women in Politics பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Iranian Women Resources
- Qajar Women Archive, a digital archive of primary-source materials related to the lives of women during the Qajar era (1786 - 1925) in Iran. The Harvard University Library (HUL) central infrastructure accommodates and catalogs the archive.
- WOMEN’S EDUCATION IN THE QAJAR PERIOD, Encyclopædia Iranica
- WOMEN’S EDUCATION IN THE PAHLAVI PERIOD AND AFTER, Encyclopædia Iranica
- Women of IRAN' பரணிடப்பட்டது 2010-05-07 at the வந்தவழி இயந்திரம், Social Documentary photos of Behrouz Reshad
- History of Iranian Photography. Women as Photography Model: Qajar Period, photographs provided by Bahman Jalali, Iranian Artists' site, Kargah
- காணொளிகள்
- Role and status of women in the Iranian society பரணிடப்பட்டது 2012-03-16 at the வந்தவழி இயந்திரம் – PressTV (2012)
- Women and Islamic Awakening பரணிடப்பட்டது 2012-07-18 at the வந்தவழி இயந்திரம் – PressTV (2012)