ஈராவ் மலை
ஈராவ் மலை (மலாய்: Gunung Irau; ஆங்கிலம்: Mount Irau) என்பது மலேசியாவின் பகாங்; பேராக் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். அதன் தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு புகழ்பெற்றது.
ஈராவ் மலை Mount Irau பேராக் | |
---|---|
தித்திவாங்சா மலைத்தொடர் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,110 m (6,920 அடி)[1] |
புடைப்பு | 668 m (2,192 அடி)[1] |
பட்டியல்கள் | ரீபு மலைகள் |
ஆள்கூறு | 4°31′46″N 101°21′57″E / 4.52944°N 101.36583°E[1] |
புவியியல் | |
நாடு | மலேசியா |
மூலத் தொடர் | தித்திவாங்சா மலைத்தொடர் |
இந்த மலை தீபகற்ப மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரில் உள்ளது. தித்திவாங்சா மலைத்தொடர் தீபகற்ப மலேசியாவின் முதுகெலும்பாக விளங்குகின்றது. தித்திவாங்சா மலைத்தொடரின் வடபகுதி தென் தாய்லாந்தில் தொடங்குகின்றது.[2]
அதனைச் சங்காலாகிரி தொடர் (ஆங்கிலம்: Sankalakhiri Range; தாய்லாந்து மொழி: ทิวเขาสันกาลาคีรี) என்றும் அழைக்கிறார்கள். இந்தத் தொடர் தீபகற்ப மலேசியாவை இரண்டாகப் பிரிக்கின்றது. வடக்கில் இருந்து தென் கோடி வரையில் இதன் நீளம் 480 கி.மீ. ஆகும்.[3][4]
பொது
தொகுபேராக் மாநிலத்தின் கம்பார் மாவட்டம் மற்றும் பகாங் மாநிலத்தின் கேமரன் மலை மாவட்டம்; ஆகிய மாவட்டங்களுக்கு இடையே ஓர் இயற்கையான எல்லையாக இந்த மலை அமைகிறது.
ஈராவ் மலையின் மலை முகடு 2,110 மீ (6,920 அடி) ஆகும். இது கேமரன் மலைப் பகுதியில் மிக உயர்ந்த மலையாகவும், மலேசியாவின் 15-ஆவது உயரமான மலையாகவும் உள்ளது.
ஈரமான பயணப்பாதை
தொகுகுளிர், மூடுபனி; மற்றும் பாசி படர்ந்த காடுகள்தான் ஈராவ் மலையின் தனிச்சிறப்பு. மலையின் அடிவாரத்தில் இருந்து முகட்டு அடிவாரத்தை அடைய சுமார் மூன்று மணி நேரம் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் மலை உச்சியை அடைய மேலும் 3-4 மணி நேரம் ஆகும்.[5]
பயணப் பாதை ஈரமானது; வழுக்கலானது. மலையுச்சிக்குச் செல்லும் பாதை பெரும்பாலும் பெரிய மரத்தின் வேர்கள் மற்றும் கிளைகளால் தடுக்கப்படுகிறது. சில செங்குத்தான பகுதிகளும் உள்ளன. மேலே ஏறுவதற்கு கயிறுகள் அல்லது ஏணிகள் தேவைப்படும்.[6]
காட்சியகம்
தொகு-
ஈராவ் மேகக் காடு 1
-
ஈராவ் மேகக் காடு 2
-
மலைஉச்சியில் பகாங்-பேராக் மாநில எல்லை குறிப்பான்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Southeast Asia: Cambodia, Laos, Thailand, Vietnam and Peninsular Malaysia". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
- ↑ Titiwangsa mountain range (Banjaran Titiwangsa in Malay). It extends from Phuket, Thailand and ends in Negeri Sembilan, southwest of Peninsula.
- ↑ Avijit Gupta, The Physical Geography of Southeast Asia, Oxford University Press, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-924802-5
- ↑ The Titiwangsa Mountains are part of the Tenasserim Hills system, and form the backbone of the Peninsula. They form the southernmost section of the central cordillera which runs from Tibet through the Kra Isthmus (the Peninsula's narrowest point) into the Malay peninsula.
- ↑ "Hiking Mount Irau Mossy Forest in Cameron Highlands: A Trip to Nature's Magical Wonderland". Ummi Around Malaysia. 16 December 2023. பார்க்கப்பட்ட நாள் 1 September 2024.
- ↑ "Climb the Highest Mountain in the Cameron Highlands and Explore Mount Irau's Enchanted Mossy Forest". summits.com, helping you climb mountains (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 September 2024.