உதய்பூர், மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தின் ஒரு வரலாற்று நகரம்

உதய்பூர் (Udaipur) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கஞ்ச் பாசோடாவிற்கு அருகிலுள்ள ஒரு நகரமாகும். இது நன்கு பாதுகாக்கப்பட்ட சிவன் கோவிலின் தளமாக உள்ளது. இதனை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாகக் பாதுகாக்கிறது.

உதய்பூர்
நகரம்
உதய்பூர் is located in மத்தியப் பிரதேசம்
உதய்பூர்
உதய்பூர்
மத்தியப் பிரதேசத்தில் உதய்பூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°54′01″N 78°03′24″E / 23.900177°N 78.056655°E / 23.900177; 78.056655
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்விதிசா
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்464221
தொலைபேசி இணைப்பு எண்91-7594
வாகனப் பதிவுமபி-40

வரலாறு தொகு

உதய்பூரின் வரலாறு குறைந்தது ஒன்பதாம் நூற்றாண்டை எட்டுகிறது. ஆனால் அது பரமார மன்னன் உதயாதித்தனின் (சுமார் பொ.ச.1060-87) காலத்தில் பிரபலமடைந்தது. மேலும் அதன் தற்போதைய பெயரைப் பெற்றதாகவும் தெரிகிறது. [1] நகரம், 14 முதல் 16ஆம் நூற்றாண்டுகளில் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும் வடக்கு-தெற்கு வர்த்தக பாதையில் ஒரு முக்கிய நகரமாகவும் இருந்துள்ளது.

நிலவியல் தொகு

உதய்பூர் 23°54'2"N 78°3'29"E இல் அமைந்துள்ளது.

போக்குவரத்து தொகு

போபாலின் தொடர்வண்டி சந்திப்பில் இருந்து ஜான்சி வழியாக உதய்பூர் கஞ்ச் பாசோடா தொடர் வண்டி நிலையம் மூலமும், தில்லியிலிருந்து 604 கிமீ தூர பேருந்து சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

நினைவுச்சின்னங்கள் தொகு

 
மத்தியப் பிரதேசத்தின் உதய்பூரில் உள்ள சிவன் கோயில், மேற்கு பக்கக் காட்சி

உதய்பூரின் நினைவுச்சின்னங்கள் முதலில் எம்பி கார்டே என்பவரால் ஆய்வு செய்யப்பட்டு குவாலியர் மாநிலத்தின் தொல்லியல் துறையின் அறிக்கைகளில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கைகளில் உள்ள தரவு 1952இல் தயாரிக்கப்பட்ட பட்டியலில் தொகுக்கப்பட்டது. [2]

சிவன் கோவில் தொகு

 
சிவன் கோவில், உதய்பூர், மத்திய பிரதேசம்

உதய்பூரில் உள்ள மிக முக்கியமான கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று நீலகண்டேசுவரர் என்று அழைக்கப்படுகிறது. இது பதினோராம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கட்டப்பட்ட பரமார அரசர்களின் எஞ்சியிருக்கும் ஒரே அரச ஆலயமாகும். கிழக்குத் தாழ்வாரத்தில் உள்ள கல்வெட்டு விக்ரம் நாட்காட்டி 1137 அல்லது பொ.ச.1080-81இல் கோயில் கட்டப்பட்டதை பதிவு செய்கிறது. [3] கட்டிடக்கலை ரீதியாக, கோயில் கோபுரம் பூமிஜா அல்லது 'பூமியில் பிறந்தது' என்று அழைக்கப்படும் ஒரு பாணியைச் சேர்ந்தது. இது மால்வா பிராந்தியத்தில் தோன்றிய கோயில் கட்டிட முறையாகும். [4]

கோவிலின் சிக்கலான சைவ உருவப்படம் தோரியா தீக்சித் என்பவரால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[5]

கோவிலின் நுழைவு மண்டபத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன.[6] இன்னும் முறையான முறையில் ஆய்வு செய்யப்படவில்லை. இவை பரமாரர்களின் காலத்திலிருந்து ஒரு தொடர்ச்சியான வரிசையை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு கல்வெட்டு 1338இல் உதாலேசுவர கடவுளின் திருவிழாவைப் பற்றி குறிப்பிடுகிறது. அதே ஆண்டு துக்ளக் கல்வெட்டில் கோயில் வளாகத்தில் பள்ளிவாசலொன்று கட்டப்பட்டதைப் பதிவு செய்கிறது. [7]

துக்ளக் ஷாஹி பள்ளிவாசல் தொகு

 
பொ.ச.737, 739 தேதியிட்ட முகம்மது பின் துக்ளக்கின் காலத்தைச் சேர்ந்த பள்ளிவாசலில் காணப்படும் இரு கல்வெட்டுகளில் ஒன்று (அதாவது பொ.ச. 1336-37, 1338-39).

கோவிலுக்கு நேர் பக்கத்தில் முகமது இப்னு துக்ளக்கின் ஆட்சியின் போது கட்டப்பட்ட ஒரு சிறிய பள்ளிவாசல் உள்ளது. இரு கல்வெட்டுகள் இசுலாமிய நாட்காட்டி 737 , 739 (அதாவது பொ.ச.1336-37, 1338-39 ) இந்த கட்டமைப்பின் கட்டிடத்தை பதிவு செய்கின்றன. [8]

இஸ்லாம் ஷா சூரி பள்ளிவாசல் தொகு

சிவன் கோவிலின் தெற்கே சிறிது தூரத்தில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. 1549இல் சூர் வம்சத்தின் இஸ்லாம் ஷா காலத்தில் கட்டப்பட்டதற்கான கல்வெட்டு உள்ளது. கல்வெட்டு நேரடியாக மிஹ்ராபின் மீது வைக்கப்பட்டுள்ளது.[9] சூர் ஆட்சியாளர்களின் காலத்தில் தக்காணத்திற்கு வடக்கு-தெற்கு பாதையில் உதய்பூரின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. அதன் முக்கியத்துவம் மற்றும் தனித்துவம் இருந்தபோதிலும், அதிகாரிகள் நினைவுச்சின்னத்தை இடிந்து விழும்படி கவனிக்காமல் விட்டுவிட்டனர்.

சான்றுகள் தொகு

  1. Arvind K. Singh, "Interpreting the History of the Paramāras," Journal of the Royal Asiatic Society 3, 22, 1 (2012), pp. 13–28. Online version: http://journals.cambridge.org/action/displayJournal?jid=JRA
  2. D. R. Patil, The Descriptive and Classified List of Archaeological Monuments in Madhya Bharat (Gwalior: Dept. of Archaeology, Madhya Bharat Government, 1952).
  3. "Foundation record of the Udayesvara temple". SIDDHAM: the Asia Inscriptions Database. Archived from the original on 19 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 19 Feb 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Krishna Deva, "Bhumija Temples," in Studies in Indian Temple Architecture, ed. P. Chandra (Delhi: AIIS, 1975): 90-113; Adam Hardy, Theory and Practice of Temple Architecture in Medieval India: Bhoja's Samarānganasūtradhāra and the Bhojpur Line Drawings, with translations by Mattia Salvini (New Delhi: IGNCA, 2015)
  5. Doria Tichit, "Le programme iconographique du temple d’Udayeśvara à Udayapur, Madhya Pradesh, XIe siècle," Arts asiatiques 67, no. 1 (2012): 3-18. Available online: http://www.persee.fr/doc/arasi_0004-3958_2012_num_67_1_1770.
  6. The records are listed in Annual Report on Indian Epigraphy (1961-62), section C, nos. 1611-1677.
  7. Annual Report on Indian Epigraphy (1961-62), section C, no. 1625.
  8. A. Cunningham, Archaeological Survey of India Reports, vol. 10, p. 68; D. R. Patil, The Descriptive and Classified List of Archaeological Monuments in Madhya Bharat (Gwalior: Dept. of Archaeology, Madhya Bharat Government, 1952): no. 1692; Indian Archaeology: A Review (1983-84), p. 56.
  9. "Udaypur उदयपुर (Madhya Pradesh). Arabic and Persian inscription (INAP00005)". SIDDHAM: the Asia Inscriptions Database. பார்க்கப்பட்ட நாள் 18 Feb 2020.