உயர் துல்லிய பல்லூடக இடைமுகம்
எச்டிஎம்ஐ (HDMI, உயர்-துல்லிய பல்லூடக இடைமுகம்) சுருக்கப்படாத ஒளிதத் தரவுகளையும் சுருக்கபடாத அல்லது சுருக்கப்பட்ட ஒலித் தரவுகளையும் எடுத்துச் செல்வதற்கான தனியுரிமையுடைய இடைமுகம் ஆகும். இத்தரச்சான்றுகளை ஏற்கும் காட்சிக் கட்டுப்பாடு, கணினித் திரை, ஒளித வீழ்ப்பி, எண்ணிமத் தொலைக்காட்சி, மற்றும் எண்ணிம ஒலிக் கருவிகளிடமிருந்து இந்த தரவுகளை எடுத்துச் செல்லும்.[4] ஒளித சீர்தரங்களுக்கான எண்ணிம மாற்றீடே எச்டிஎம்ஐ ஆகும்.
வகை | எண்ணிம/ஒளித/தரவு இணைப்பி | ||
---|---|---|---|
தயாரிப்பு வரலாறு | |||
வடிவமைப்பாளர் | எச்டிஎம்ஐ நிறுவனர்கள் (7 நிறுவனங்கள்)[1] எச்டிஎம்ஐ மன்றம் (83 நிறுவனங்கள்)[2]
| ||
வடிவமைத்த நாள் | திசம்பர் 2002 | ||
தயாரிப்பாளர் | எச்டிஎம்ஐ ஏற்பவை (1,700 நிறுவனங்களுக்கும் மேலாக) | ||
Superseded | எண்ணிம ஒளித்தோற்ற இடைமுகம் (DVI), ஒளித வரைகலை அணி இணைப்பி (VGA), (SCART), சிபநீ கூறுகள் | ||
பொதுத் தரவுகள் | |||
அகலம் | 13.9 மிமீ (வகை A), 10.42 மிமீ (வகை C), 6.4 மிமீ (வகை D) | ||
உயரம் | 4.45 மிமீ (வகை A), 2.42 மிமீ (வகை C), 2.8 மிமீ (வகை D) | ||
Hot pluggable | Yes | ||
வெளிவாரி | Yes | ||
Audio signal | எல்சிபிஎம், டோல்பி டிஜிட்டல், டிட்டிஎஸ், இறுவட்டு-ஒலி, டோல்பி டிஜிட்டல் பிளஸ், டோல்பி இட்ரூஎச்டி, எம்சிபிஎம், டிஎஸ்டி, டிஎஸ்ட்டி, டோல்பி ஆத்மோசு,டிட்டிஎஸ்:எக்ஸ் | ||
Video signal | துல்லியத்தின் அளவு கிடைக்கும் அலைக்கற்றையைப் பொருத்தது | ||
Pins | வகைகள் A, C, & D (19), வகை B (29) | ||
தரவுகள் | |||
Data signal | Yes | ||
Bitrate | 48 கிகா.பி/வி வரை எச்டிஎம்ஐ 2.1இல் | ||
Protocol | மாற்றங்கள் குறைந்த வேற்றுமை குறியீடு (TMDS) | ||
Pin out | |||
எச்டிஎம்ஐ வகை A வாங்கி (பெண்) | |||
Pin 1 | TMDS Data2+ | ||
Pin 2 | TMDS Data2 Shield | ||
Pin 3 | TMDS Data2− | ||
Pin 4 | TMDS Data1+ | ||
Pin 5 | TMDS Data1 Shield | ||
Pin 6 | TMDS Data1− | ||
Pin 7 | TMDS Data0+ | ||
Pin 8 | TMDS Data0 Shield | ||
Pin 9 | TMDS Data0− | ||
Pin 10 | TMDS Clock+ | ||
Pin 11 | TMDS Clock Shield | ||
Pin 12 | TMDS Clock− | ||
Pin 13 | CEC | ||
Pin 14 |
| ||
Pin 15 | SCL (I²C serial clock for DDC) | ||
Pin 16 | SDA (I²C serial data for DDC) | ||
Pin 17 | Ground (for DDC, CEC, ARC, and HEC) | ||
Pin 18 | +5 V (min. 0.055 A)[3] | ||
Pin 19 |
|
எச்டிஎம்ஐயில் சிஈஏ-861 சீர்தரங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சீர்தரங்கள் ஒளித வடிவங்களையும் அலைவடிவங்களையும் சுருக்கிய அல்லது சுருக்காத தரவுகளின் செலுத்துகையையும் எல்சிபிஎம் ஒலி, துணைத் தரவுகள், விரிவான காட்சியமைப்பு அடையாளத் தரவுகளையும் வரையறுக்கின்றன.[5][6](p. III) சிஈஏ-861 மின்சமிக்ஞைகளை எடுத்துச் செல்லும் எச்டிஎம்ஐயும் இதே சமிக்ஞைகளை எடுத்துச் செல்லும் எண்ணிம ஒளித்தோற்ற இடைமுகத்துடன் மின்னியல்படியான ஏற்புடையது. எவ்வித சமிக்ஞை மாற்றமும் தேவையில்லை. மேலும் இந்த தரவு மாற்றத்தின்போது, அதாவது டிவிஐ-எச்டிஎம்ஐ இணைப்பின்போது, எவ்வித ஒளிதத் தர இழப்பும் ஏற்படுவதில்லை.[6](§C) பயனாளர் இலத்திரனியல் கட்டுப்பாடு (சிஈசி)]] திறனுள்ளதால் எச்டிஎம்ஐ கருவிகளால், தேவைப்படும்போது ஒன்றையொன்று கட்டுப்படுத்த முடிகின்றது. பயனாளர் ஒரே கைத் தொலைக் கட்டுப்படுத்தியைக் கொண்டு பல கருவிகளை இயக்க முடியும்.[6](§6.3)
துவக்க அறிமுகத்திற்கு பிறகு எச்டிஎம்ஐயின் பல பதிப்புகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே ஒரு கம்பிவடத்தையும் இணைப்பியையும் பயன்படுத்தி உள்ளன. மேம்பட்ட ஒளித, ஒலித் தரங்கள், திறன், துல்லியம், பெறுவதுடன் புதிய பதிப்புகள், முப்பரிமாணத் தொலைக்காட்சி, ஈதர்நெட் தரவிணைப்பு, பயனாளர் இலத்திரனியல் கட்டுப்பாட்டு விரிவாக்கங்கள் போன்ற முன்னேறிய சிறப்புக் கூறுகளுக்கு விருப்பத் தேர்வுகளை வழங்குகின்றன.
எச்டிஎம்ஐ கருவிகளின் வணிகமுறையிலானத் தயாரிப்பு 2003ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது.[7] ஐரோப்பாவில் 2005ஆம் ஆண்டு ஐரோப்பிய சீர்தர அமைப்புக்கள் உயர்-துல்லியத்திற்கு தயார் என அடையாளப்படுத்த, முன்மொழிந்த வரையறைகளில் எச்டிஎம்ஐயும் இடம் பெற்றிருந்தது. நுகர்வோர் உயர் வரையறு தொலைக்காட்சிகளில் 2004இலிருந்தும் நிகழ்படக்கருவிகள், இருமப் படமிகளில் 2006இலிலிருந்தும் பயன்படுத்தப்படுகின்றன.[8][9] சனவரி 6, 2015 நிலவரப்படி (முதல் எச்டிஎம்ஐ வரையறை வெளியானதற்கு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து), 4 பில்லியனுக்கும் கூடுதலான எச்டிஎம்ஐ கருவிகள் விற்கப்பட்டுள்ளன.[10]
வரையறுப்புகள்
தொகுஎச்டிஎம்ஐக்கான பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், சமிக்ஞைகள், மின்னியல் இடைமுகங்கள், பொறிமுறைத் தேவைகள் அனைத்திற்கும் சீர்தரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.[6](p. V) எச்டிஎம்ஐ 1.0 இல் மிக உயர்ந்த படவணு (கடிகார) துடிப்பு வீதம் 165 மெகா எர்ட்சாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது 1080p மற்றும் அகன்றதிரை மீவிரிவாக்கப்பட்ட வரைகலை அணிவரிசை (WUXGA, 1920×1200) @ 60 எர்ட்சிற்கு போதுமானவை. எச்டிஎம்ஐ 1.3 யில் இது 340 மெகா எர்ட்சாக உயர்த்தப்பட்டு, 2560×1600 திறனுள்ள வரைகலை அணிவரிசைகளை ஏற்கிறது.[11] ஒரு எச்டிஎம்ஐ இணைப்பு ஒருமுனைத் தொடர்பாக (வகை A/C/D) அல்லது இருமுனைத்-தொடர்பாக (வகை B) இருக்கலாம். ஒருமுனைத் தொடர்பில் ஒளித படவணு வீதம் 25 மெகா எர்ட்சிலிருந்து 340 மெகா எர்ட்சு வரை இருக்கும். இருமுனைத் தொடர்பில் 25 மெகா எர்ட்சிலிருந்து 680 மெகா எர்ட்சு வரை இருக்கும்.
இணைப்பிகள்
தொகுஐந்து வகையான எச்டிஎம்ஐ இணைப்பிகள் உள்ளன. வகைகள் A/B எச்டிஎம்ஐ 1.0 வரையறையில் விவரிக்கப்பட்டுள்ளன; வகை C எச்டிஎம்ஐ 1.3 வரையறையிலும், வகை D/E எச்டிஎம்ஐ 1.4 வரையறையிலும் விவரிக்கப்பட்டுள்ளன.
- வகை A
- செருகி இணைப்பி (ஆண்) வெளி அளவுகளாவன: 13.9 மிமீ × 4.45 மிமீ, வாங்கி இணைப்பி (பெண்) அளவுகள் 14 மிமீ × 4.55 மிமீ.[6](§4.1.9.2) மொத்தம் 19 ஊசிகளும், சீர்தரத் தொலைக்காட்சி, மேம்பட்ட வரையறுத் தொலைக்காட்சி, உயர் வரையறு தொலைக்காட்சி, மீயுயர் வரையறைத் தொலைக்காட்சி, மற்றும் 4K அலைக்கற்றைகளைத் தாங்கிச் செல்லும் திறனுள்ளவை.[6](§6.3)
- வகை B
- இந்த இணைப்பி 21.2 மிமீ × 4.45 மிமீ அளவுகளுடன் 29 ஊசிகளுடன் உள்ளது. இது 3,840×2,400 வரையிலான வரையறு ஒளிதங்களை கொண்டு செல்ல வல்லது. இது இருமுனை இணைப்பை ஏற்குமென்றாலும் இதுவரை எந்தக் கருவியிலும் பயன்படுத்தப்படவில்லை.[12]
- வகை C
- இது வகை Aயை விட சிறிய இணைப்பியாகும். 10.42 மிமீ × 2.42 மிமீ அளவுகளில் அதே 19 ஊசிகள் அமைப்புடன் உள்ளது.[6](§§4.1.9.4,4.1.9.6) இது கையில் எடுத்துச் செல்லக்கூடிய கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது.[4][6](§4.1.1)[13] வகை C சிறிய இணைப்பியை வகை A இணைப்பியுடன் இணைக்க வகை A-யிலிருந்து-வகை Cக்கான கம்பிவடம் தேவை.[6](§4.1.1)[13]
- வகை D
- இந்த நுண்ணிய இணைப்பி சிறிய-யுஎஸ்பி இணைப்பியளவிற்கு சுருங்கியுள்ளது.[13][14][15] இதன் அளவுகள் 5.83 மிமீ × 2.20 மிமீ[6](fig. 4–9) வகை A & C போலவே ஊசியமைப்பைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு ஊசிக்கும் வரையறுக்கப்பட்டுள்ள சமிக்ஞைகள் வெவ்வேறானவை.[16]
- வகை E
- தானி இணைப்பு அமைப்பு[17]: இவ்வித இணைப்பியில் கம்பிவடம் தானியின் நகர்வுகளால் அசையாத வண்ணம் பூட்டு உள்ளது; ஈரப்பசையும் தூசியும் உட்புகாவண்ணம் கூடும் உள்ளது.[18]
உயர் துல்லிய பல்லூடக இடைமுகம்#மாற்றுச் செய்முகம் யுஎஸ்பி-C வகை இணைப்பியை எச்டிஎம்ஐ மூலக் கருவிகளுடன் இணைக்கப் பயனாகிறது. இந்தக் கம்பிவடம் கைபேசி, மடிக்கணினி, கைக்கணினி ஆகியவற்றிலிருந்து எச்டிஎம்ஐ இணைப்பியுள்ள காட்சிக் கருவிகளுக்கு இணைக்க பயன்படுகின்றது.[19]
எச்டிஎம்ஐ பதிப்புகள்
தொகுஎச்டிஎம்ஐ பதிப்பு | 1.0–1.2a | 1.3 | 1.4 |
---|---|---|---|
உயர்ந்தபட்ச துடிப்பு வீதம் (மெகா எர்ட்சு) | 165 | 340 | 340[20] |
உயர்ந்தபட்ச டிஎம்டிஎஸ் ஒவ்வொரு அலைவரிசையிலும் வெளிப்பாடு (கிகாபிட்/விநாடி) | 1.65 | 3.40 | 3.40 |
உயர்பட்ச மொத்த டிஎம்டிஎஸ் வெளிப்பாடு (கிகாபிட்/விநாடி) | 4.95 | 10.2 | 10.2 |
உயர்பட்ச ஒளித (நிகழ்பட) வெளிப்பாடு (கி.பி./வி.) | 3.96 | 8.16 | 8.16 |
உயர்பட்ச ஒலித வெளிப்பாடு (மெ.பி/வி) | 36.86 | 36.86 | 36.86 |
உயர்பட்ச வரியுரு துல்லியம் (பிட்/படவணு) | 24 | 48 | 48 |
உயர்பட்ச துல்லியம், ஒற்றை இணைப்பில் (24 பிட்/படவணு) | 1920×1200p60 | 2560×1600p75 | 4096×2160p24 |
உயர்பட்ச துல்லியம் நிற ஆழம் 30-பிட்/படவணு | பொருத்தமில்லை | 2560×1600p60 | 4096×2160p24 |
உயர்பட்ச துல்லியம் நிற ஆழம் 36-பிட்/படவணு | பொருத்தமில்லை | 1920×1200p75 | 4096×2160p24 |
உயர்பட்ச துல்லியம் நிற ஆழம் 48-பிட்/படவணு | பொருத்தமில்லை | 1920×1200p60 | 1920×1200p60 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "HDMI Adopters and Founders". HDMI. Archived from the original on ஆகஸ்ட் 1, 2012. பார்க்கப்பட்ட நாள் April 14, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Members". HDMI Forum. பார்க்கப்பட்ட நாள் March 16, 2017.
- ↑ "HDMI :: Resources :: Knowledge Base". hdmi.org. Archived from the original on 2015-05-25. பார்க்கப்பட்ட நாள் 2018-05-16.
- ↑ 4.0 4.1 "HDMI FAQ". HDMI.org. Archived from the original on பிப்ரவரி 22, 2018. பார்க்கப்பட்ட நாள் July 9, 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ CEA-861-D, A DTV Profile for Uncompressed High Speed Digital Interfaces, §1 Scope
- ↑ 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 "High-Definition Multimedia Interface Specification 1.3a" (PDF). HDMI Licensing, LLC. November 10, 2006 இம் மூலத்தில் இருந்து மார்ச் 5, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305072940/http://www.microprocessor.org/HDMISpecification13a.pdf. பார்த்த நாள்: April 1, 2016.
- ↑ "The First HDMI Consumer Electronics Products Debut at Cedia 2003". HDMI.org. September 5, 2003 இம் மூலத்தில் இருந்து ஜூன் 1, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190601232009/https://www.hdmi.org/press/pr/pr_20030905.aspx. பார்த்த நாள்: May 1, 2008.
- ↑ Samsung (February 24, 2006). "Samsung Camera Releases New High-Performance Digimax L85 Featuring World’s First High Definition Multimedia Interface". dpreview.com. http://www.dpreview.com/news/0602/06022402samsungl85.asp. பார்த்த நாள்: July 1, 2008.
- ↑ "Canon's new feature-packed HV20 HD camcorder expands high definition camcorder capabilities and choices for consumers". Canon. January 31, 2007 இம் மூலத்தில் இருந்து மார்ச் 3, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190303120840/https://www.usa.canon.com/templatedata/pressrelease/20070131_hv20.html. பார்த்த நாள்: July 1, 2008.
- ↑ "HDMI Interface Extends Exceptional Digital Quality with Single-Cable Simplicity to Over 4 Billion Consumer Devices". HDMI Licensing, LLC. January 6, 2015 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 16, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161016130611/http://www.hdmi.org/press/press_release.aspx?prid=137. பார்த்த நாள்: August 15, 2016.
- ↑ "HDMI 1.3 doubles bandwidth, delivers billions of colors for HDTVs". hdmi.org. HDMI Licensing, LLC. June 22, 2006. Archived from the original on February 22, 2008. பார்க்கப்பட்ட நாள் June 19, 2008.
- ↑ Rodolfo La Maestra (August 22, 2006). "HDMI – A Digital Interface Solution" (PDF). HDTV Magazine இம் மூலத்தில் இருந்து ஜனவரி 6, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160106223845/http://www.hdmi.org/pdf/whitepaper/SilicaonImageHDMIWhitePaperv73(2).pdf. பார்த்த நாள்: June 23, 2008.
- ↑ 13.0 13.1 13.2 "HDMI 1.4 FAQ". HDMI.org இம் மூலத்தில் இருந்து மே 23, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100523061339/http://www.hdmi.org/manufacturer/hdmi_1_4/hdmi_1_4_faq.aspx#18. பார்த்த நாள்: November 20, 2009.
- ↑ "HDMI Licensing, LLC Announces Features of the Upcoming HDMI Specification Version 1.4". HDMI Licensing, LLC. May 28, 2009 இம் மூலத்தில் இருந்து ஜூன் 1, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090601061752/http://www.hdmi.org/press/press_release.aspx?prid=101. பார்த்த நாள்: May 28, 2009.
- ↑ "Ultra-Small HDMI Revealed: Same 19 Pins in Half the Size". Nikkei Electronics Asia. மே 8, 2009. Archived from the original on செப்டெம்பர் 11, 2011. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 20, 2009.
- ↑ Micro-HDMI (type D) pinout, archived from the original on 2016-07-16, பார்க்கப்பட்ட நாள் 2018-05-16
- ↑ "Automotive Connection System". HDMI Licensing, LLC இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120821015057/http://www.hdmi.org/manufacturer/hdmi_1_4/automotive_connection.aspx. பார்த்த நாள்: August 6, 2012.
- ↑ "Automotive Use HDMI Type E Connector "MX50/53 Series" Has Been Developed". Japan Aviation Electronics Industry, Ltd.. February 15, 2012 இம் மூலத்தில் இருந்து February 8, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130208092950/http://jae-connectors.com/en/news-201202MX50_53-en.html. பார்த்த நாள்: August 6, 2012.
- ↑ "HDMI :: Manufacturer :: HDMI Alt Mode for USB Type-C Connector". www.hdmi.org. Archived from the original on 2016-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-09-18.
- ↑ "எச்டிஎம்ஐ 1.4 FAQ". HDMI.org இம் மூலத்தில் இருந்து 2010-05-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100523061339/http://www.hdmi.org/manufacturer/hdmi_1_4/hdmi_1_4_faq.aspx#18. பார்த்த நாள்: 2009-11-20.
வெளி இணைப்புகள்
தொகு- எச்டிஎம்ஐ உரிமம் வழங்குதல், நிறு.
- Dolby Podcast Episode 60 – March 26, 2009 – Part one of a two-part discussion with Steve Venuti, President, and Jeff Park, Technology Evangelist, of HDMI Licensing.
- Dolby Podcast Episode 62 – April 23, 2009 – Part two of a two-part discussion with Steve Venuti, President, and Jeff Park, Technology Evangelist, of HDMI Licensing.