உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை
தொகு- கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழகுகிறார்கள்.
- கி. மு. 4,000 - எகிப்தியர்கள் Wine (பழ ரச பானம் ?) செய்வதில் நிபுணத்துவம் அடைகிறார்கள்.
- கி.மு. 2,000 - எகிப்தியர்களும் சுமேரியர்களும் வெண்ணை செய்வதிலும் Brewing-லும் நிபுணத்துவம் அடைகிறார்கள்.
- கி. மு. 1,800 - Yeast-களைக் கொண்டு Wine, Beer, Bread செய்வதில் முதன்முதலாக உயிரித் தொழில்நுட்பக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டன.மது பானம்,Baking செய்வதில் பயன்பட்ட Saccharomyces வகை Yeast-கள் வணிக முக்கியத்துவம் கொண்டிருந்தன.
- கி. மு. 500 - சீனாவில்,moldy soybean curd நோய் உண்டாக்கும் கிருமிகளைக் கொல்ல பயன்பட்டது.
- கி. மு. 300 - கிரேக்கர்கள் ஒட்டுத் தாவரங்களை (grafting techniques for plant breeding) செய்யும் முறையை அறிகிறார்கள்.
கி. பி. 1ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை
தொகு- கி. பி. 100 AD - சீனர்கள், தூளாக்கப்பட்ட chrysanthemum-களிலிருந்து முதல் பூச்சிக்கொல்லியைக் கண்டுபிடிக்கின்றனர்.
- கி. பி. 1663 - ராபர்ட் ஹூக்கின் திசுள் (Cell) கண்டுபிடிப்பு.
- 1675 - ஆன்டன் வான் லீவன்ஹூக்கின் பாக்டீரியா கண்டுபிடிப்பு.
- 1700கள் - பல Hybrid வகை தாவரங்களை ஆய்வாளர்கள் கண்டறிகிறார்கள்.
- 1830 - புரதங்கள் கண்டுபிடிப்பு.
- 1833 - முதல் enzyme கண்டுபிடிப்பு.
- 1835 - எல்லா உயிரினங்களும் திசுள்களால் ஆனவை என்ற Matthias Scheiden மற்றும் Theodor Schwann கோட்பாடு வெளியீடு;ஒரு திசுளிலிருந்து தான் இன்னொரு திசுள் உருவாக முடியும் என்று Viichow அறிவிக்கிறார்.
- 1859 - சார்லஸ் டார்வினின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "On the Origin of Species" புத்தகம் வெளியீடு.
- 1861 - Louis Pasteur பால் பதப்படுத்தும் முறையை கண்டறிகிறார்.
- 1865 - ஜான் கிரிகோர் மெண்டல்,Law of heridity-ஐக் கண்டுபிடிக்கிறார்.
- 1870-1890 - பல வகை கலப்பினத் தாவரங்கள் உருவாக்கம். விவசாயிகள், நைட்ரஜனேற்ற பாக்டீரியாக்களை பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.
கி.பி.19ஆம் நூற்றாண்டு முதல்..
தொகு- 1919 - 'Biotechnology’ என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்படுகிறது.
- 1928 - சர் அலெக்ஸாண்டர் ஃளெமிங்கின் பென்சிலின் (Antibiotic) கண்டுபிடிப்பு.
- 1941 - Danish நுண்ணுயிரியலாளர் ஏ. ஜஸ்டின் "Genetic engineering” (மரபணுப்பொறியியல்) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார்.
- 1942 - பென்சிலின் உற்பத்தி.
- 1953 - ஜேம்ஸ் வாட்சனும் ஃரான்சிஸ் க்ரிக்கும் முதன்முதலில் DNAவின் Double helix வடிவத்தை விவரிக்கிறார்கள்.
- 1958 - முதன்முதலில், சோதனைக்குழாயில் DNA உருவாக்கப்பட்டது..
- 1968 - 20 அமினோ அமிலங்களை உருவாக்கும் மரபியல் குறியீடுகளை ( genetic codes )கண்டறிந்ததற்காக Marshall W. Nirenbergம் ஹர் கோபிந்த் குரானாவும் நோபல் பரிசு பெறுகிறார்கள்.
- 1970 - முதல் restriction enzyme-ஐ அமெரிக்க நுண்ணுயிரியலாளர் டேனியல் நேதன்ஸ் ( Daniel Nathans ) கண்டுபிடித்தார்.restriction enzyme-கள் மரபியல் பண்புகளைத் தரும் வேதிப்பொருட்களை ( genetic material ) பல துண்டுகளாக வெட்ட உதவுவதன் மூலம் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ஏதுவாக இருக்கிறது.
- 1971 - முதன்முதலில் ஒரு முழு ஜீன் ( Gene ) சோதனைச்சாலையில் உருவாக்கப்படுகிறது.
- 1972 - DNA துண்டுகளை ஒட்ட உதவும் DNA லைகேஸ் ( DNA ligase ) முதன்முதலில் பயன்படுத்தப்படுகிறது.
முதன்முதலில், இரண்டு வெவ்வேறு வைரஸ்களின் DNA துண்டுகளை இணைத்து recombinant molecule செயற்கை முறையில் உருவாக்கப்படுகிறது.
- 1973 - Stanley Cohen-ம் Herbert Boyer-ம் சேர்ந்து recombinant DNA தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தனர்.இந்நிகழ்வு நவீன உயிரித் தொழில்நுட்பத்திற்கு வித்திட்டதாக கருதப்படுகின்றது.
- 1976 - ஒரு குறிப்பிட்ட ஜீனை உருவாக்க எந்தெந்த கார ஜோடிகள் ( Base pairs ) சேர்ந்து உருவாக்குகின்றன என்று கண்டறியப்படுகின்றது.
- 1977 - மிக நீளமான DNA துண்டுகளையும் வேகமாக Sequence செய்வதற்கான செய்முறைகள் கண்டறியப்படுகின்றன.
- 1978 - Recombinant மனித இன்சுலின் ( Insulin ) முதன்முதலில் உருவாக்கப்படுகிறது.
- 1980 - முதல் செயற்கை recombinant DNA மூலக்கூறினை உருவாக்கியதற்காக Paul Berg, Walter Gilbert, Fredrick Sanger ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 1981 - முதல் transgenic விலங்கு 'the golden carp', சீன விஞ்ஞானிகளால் படி எடுக்கப்படுகிறது ( Cloned ).
- 1982 - கால்நடைகளுக்கான முதல் recombinant DNA தடுப்பு மருந்து உருவாக்கம்.
Kary Mullis,சிறிய DNA துண்டுகளை விரைவில் பெருக்கம் செய்ய உதவும் 'பாலிமரேஸ் சங்கிலித்தொடர் வினையை' ( polymerase chain reaction (PCR)) கண்டுபிடிக்கின்றனர்.
- 1990 - உலகின் முதல் 'மனித மரபு ரேகை திட்டம்' ( Human genome project ) தொடங்குகிறது.
- 1997 - டாலி - படியெடுக்கப்பட்ட முதல் பாலூட்டி - பிறப்பு.
மனித மரபு ரேகை மற்றும் மனித உரிமைகள் மீதான அனைத்துலக தீர்மானத்தை யுனெசுகோ அறிவிக்கிறது.
- 1998 - கிட்டத்தட்ட 30,000 ஜீன்களின் இருப்பிடத்தை வரையறுக்கும் முதல் 'மாதிரி மனித மரபு ரேகை' அறிவிப்பு. ( First draft of HUman Genome )
- 2000 - அமெரிக்க விஞ்ஞானிகள் Craig Venter மற்றும் Francis Collins முதல் முழுமையான மனித மரபு ரேகையை உலகுக்கு அறிவிக்கிறார்கள்.
DNAவின் double helix வடிவத்தை வாட்சனும் க்ரிக்கும் கண்டுபிடித்து 50 ஆண்டுகள் நிறைவு.