உருபீடியம் பெர்மாங்கனேட்டு

வேதிச் சேர்மம்

உருபீபிடியம் பெர்மாங்கனேட்டு (Rubidium permanganate) என்பது உருபீடியத்தின் பெர்மாங்கனேட்டு உப்பு ஆகும். இது RbMnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.

உருபீடியம் பெர்மாங்கனேட்டு
இனங்காட்டிகள்
13465-49-1
ChemSpider 13389592
InChI
  • InChI=1S/Mn.4O.Rb/q;;;;-1;+1
    Key: UJCOPKFKNRFWHO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23674440
  • [Rb+].[O-][Mn](=O)(=O)=O
பண்புகள்
RbMnO4
வாய்ப்பாட்டு எடை 204.404
தோற்றம் ஊதா படிகங்கள்[1]
அடர்த்தி 3.325 கி·செ.மீ−3[2]
உருகுநிலை 295 °செல்சியசு (சிதையும்)[2]
10.6 கி·லி−1 (19 °செல்சியசு)[3]
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய் சதுரம்
புறவெளித் தொகுதி Pnma (Nr. 62)
Lattice constant a = 954.11 பைகோமீட்டர், b = 573.926 பைகோமீட்டர், c = 763.63 பைகோமீட்டர்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் உருபீடியம் பெர்குளோரேட்டு<br /உருபீடியம் பெரயோடேட்டு
உருபீடியம் பெர்டெக்னிடேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் பெர்மாங்கனேட்டு
சோடியம் பெர்மாங்கனேட்டு
பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு
அமோனியம் பெர்மாங்கனேட்டு
சீசியம் பெர்மாங்கனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு மற்றும் உருபீபிடியம் குளோரைடு ஆகியவை ஒன்றாகச் சேற்ந்து வினை புரிவதால் உருபீபிடியம் பெர்மாங்கனேட்டு உருவாகிறது.:[4][5]

RbCl + KMnO4 -> KCl + RbMnO4

இயற்பியல் பண்புகள்

தொகு

7 °செல்சியசு வெப்பநிலையில் உருபீபிடியம் பெர்மாங்கனேட்டு நீரில் 6.03 கி/லி கரைதிறன் கொண்டு கரைகிறது.[3] 19 °செல்சியசு வெப்பநிலையில் 10.6 கி/லி என்ற கரைதிறனும்[2] , 60 °செல்சியசு வெப்பநிலையில் 46.8 கி/லி என்ற கரைதிறனையும் இது கொண்டுள்ளது.[6] சீசியம் பெர்மாங்கனேட்டு, அம்மோனியம் பெர்மாங்கனேட்டு மற்றும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு போல இதன் படிக அமைப்பும் செஞ்சாய் சதுரப் படிக அமைப்பு ஆகும்.[1]

வேதியியல் பண்புகள்

தொகு

பொட்டாசியம் பெர்மாங்கனேட்டைப் போலவே, உருபீடியம் பெர்மாங்கனேட்டும் இரண்டு-படி நிலைகளில் சிதைவடைந்து உருபீடியம் மாங்கனேட் இடைநிலைகளை உருவாக்குகிறது. மாங்கனீசு டை ஆக்சைடு, உருபீடியம் ஆக்சைடு மற்றும் ஆக்சிசனாக உடைகிறது.[4] சிதைவு வெப்பநிலை 200 முதல் 300 °செல்சியசு வெப்பநிலை வரை உள்ளது.[7] வெளியேறும் ஆக்சிசன் இத்தயாரிப்பில் 8% நிறை இழப்பை ஏற்படுத்துகிறது.[7]

10RbMnO4 → 3Rb2MnO4 + 7MnO2 + 2Rb2O + 6O2
2Rb2MnO4 → 2MnO2 + 2Rb2O + O2

ஒட்டுமொத்த வினை:

4RbMnO4 → 4MnO2 + 2Rb2O + 3O2

பயன்கள்

தொகு

தரப் பகுப்பாய்வில், பெர்குளோரேட்டு அயனிகளைக் கண்டறிய உருபீடியம் பெர்மாங்கனேட்டு ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. ரூபிடியம் நைட்ரேட்டு மற்றும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு ஆகியவற்றிலிருந்து ஓர் இடைநிலையாக உற்பத்தி செய்யப்படுகிறது. RbClO4·RbMnO4 கலப்பு படிகமாக இருக்கும் பெர்குளோரேட்டு அயனிகளுடன் வீழ்படிகிறது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 R. Hoppe, D. Fischer, J. Schneider (1999), "Zur Kenntnis von Oxyden A[MO4]: Über LiMnO4, KMnO4, RbMnO4, CsMnO4 sowie RbIO4 und CsIO4. (– Was heißt eigentlich "Die Kristallstruktur von …"? –)", Zeitschrift für anorganische und allgemeine Chemie, vol. 625, no. 7, pp. 1521–3749, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/(SICI)1521-3749(199907)625:7<1135::AID-ZAAC1135>3.0.CO;2-L{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. 2.0 2.1 2.2 Dale L. Perry, Sidney L. Phillips: Handbook of inorganic compounds. CRC Press, 1995, ISBN 978-0-8493-8671-8, S. 336 ([1], p. 336, கூகுள் புத்தகங்களில்).
  3. 3.0 3.1 Aterton Seidell (1940), [Volltext Solubilities of Organic Compounds], vol. 1, p. 1438 {{citation}}: Check |url= value (help)
  4. 4.0 4.1 Michael W. Beck, Michael E. Brown (1983), "Thermal analysis of antimony/potassium permanganate pyrotechnic compositions" (PDF), Thermochimica Acta, vol. 65, no. 2–3, pp. 197–212, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/0040-6031(83)80022-7, archived from the original (PDF) on 2013-10-29
  5. P. J. Herley, E. G. Prout (1960), "The Thermal Decomposition of Rubidium Permanganate", The Journal of Physical Chemistry, vol. 64, no. 5, pp. 675–677, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/j100834a503
  6. Austin M. Patterson (1906), "Solubilities of Permanganates of the Alkali Metals", Journal of the American Chemical Society, vol. 28, no. 12, pp. 1734–1736, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/ja01978a009
  7. 7.0 7.1 Z. Gontarz, B. Pisarska (September 1990), "Thermal decomposition stages of potassium, rubidium and caesium permanganates", Journal of Thermal Analysis and Calorimetry, vol. 36, no. 6, pp. 2113–2117, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/BF01914135, S2CID 95763664
  8. E. Gerdes (2001), [[2], p. 139, கூகுள் புத்தகங்களில் Qualitative anorganische Analyse] (Ein Begleiter für Theorie und Praxis) (2 ed.), Springer, p. 139, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-67875-5 {{citation}}: Check |url= value (help)