மே நாள்
மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி (மே 1) உலக அளவில் கொண்டாடப்படுவதாகும்.[1]
சர்வதேச தொழிலாளர்கள் தினம் | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | சர்வதேச தொழிலாளர்கள் தினம் |
பிற பெயர்(கள்) | மே தினம் |
கடைப்பிடிப்போர் | சோசலிசம் மற்றும் தொழிற்சங்கங்கள் |
கொண்டாட்டங்கள் | ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் |
நாள் | மே 1 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
தொடர்புடையன | மே நாள், தொழிலாளர் தினம் |
மே தின வரலாறு
தொகுதொழிலாளர் போராட்டம்
தொகு18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும்.
பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
தொகு1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்
தொகுஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
ரஷ்யாவில் மே தினம்
தொகுசார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில்
தொகுஅமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
சிக்காகோ பேரெழுச்சி
தொகுமே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. [2]
அமெரிக்காவின் கறுப்பு தினம்
தொகுநவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அனைத்து நாடுகளிலும் மே தினம்
தொகு1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது.
இந்தியாவில் மே தினம்
தொகுஇந்தியாவில் சென்னை மாநகரில் 1923-ஆம் ஆண்டில் மெரீனா கடற்கரை மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில், இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. [3]திருவான்மியூர் கூட்டத்தில், சுப்பிரமணிய சிவா மற்றும் எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையில் இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது.[4]
மே தினச் நினைவுச் சின்னங்கள்
தொகு- fearless girl statue,america அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- spirit of solidarity statue, america அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- haymarket tragety statue, amarica அமெரிக்க ஐக்கிய நாடுகள்
உசாத்துணை
தொகு- ↑ Rothman, Lily (1 May 2017). "The Bloody Story of How May Day Became a Holiday for Workers". Time (Time Magazine). http://time.com/3836834/may-day-labor-history/. பார்த்த நாள்: 2 May 2017.
- ↑ Foner, Philip S. (1986). மேதினம்: A Short History of the International Workers' Holiday, 1886–1986. New York: International Publishers. pp. 41–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7178-0624-3.
- ↑ "உழைப்பாளர் தினம் உருவான வரலாறு – சிறப்பு தொகுப்பு". சத்தியம் தொலைக்காட்சி. 01 மே 2019 இம் மூலத்தில் இருந்து 2020-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201021063604/https://www.sathiyam.tv/labours-day-special-story-in-sathiyam-tv/.
- ↑ மே தினம் - இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் கொண்டாடப்பட்டது எப்படி? இதில் சிங்காரவேலர் பங்கு என்ன?
வெளி இணைப்புகள்
தொகு
- Annual listing of May Day events around the world
- May Day classroom resources பரணிடப்பட்டது 2013-01-03 at Archive.today
- May Day in Cuba, a Retrospective Photos by Bill Hackwell, Havana Times Apr 27 2009
- Pretanic World பரணிடப்பட்டது 2006-11-13 at the வந்தவழி இயந்திரம் Holiday Traditions from England, Scotland, Wales and Ireland that may pre-date the Christian Era
- "Children Maypole Dancing - Archive Footage" பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்
- English Heathenism - Roots of May Day in English heathenism.
- May Day history at The Holiday Spot
- Mayday in Berlin
- The history of May Day - Radio France Internationale in English
- Round-up of 2009 May Day marches - Radio France Internationale in English
- Website with information on modern Hawaiian Lei Day celebration with information on the lei as a traditional Hawaiian cultural art பரணிடப்பட்டது 2012-12-08 at Archive.today
- Website on modern Lei Day and May Day celebrations in Hawai`i
- ‘Fearless Girl’ Statue to Stay in Financial District (for Now) ‘
- The Haymarket Square Riot and Aftermath
- The Spirit of Solidarity, which was dedicated in 2007
- Emma Miller – Mother of the Australian Labor Party
- Triumph of Labour
- Physical Labour Stock Photos and Images