எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம்

எகிப்தின் இருபத்தொன்றாம் வம்சம் (Twenty-first Dynasty of Egypt orDynasty XXI, 21st Dynasty or Dynasty 21) மூன்றாம் இடைநிலைக் காலத்தின் துவக்கத்தில்[1] பண்டைய எகிப்தை ஆண்ட முதல் வம்சம் ஆகும். [2] இவ்வம்சத்தினர் கீழ் எகிப்தை கிமு 1069 முதல் கிமு 945 முடிய 124 ஆண்டுகள் ஆண்டனர்.[3] இவ்வம்சத்தினரின் தலைநகரமாக கீழ் எகிப்தின் தனீஸ் நகரம் இருந்தது.

கிமு 1069–கிமு 945
தலைநகரம்தனீஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
• தொடக்கம்
கிமு 1069
• முடிவு
கிமு 945
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் இருபதாம் வம்சம்]]
[[எகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்]]

வரலாறு தொகு

 
பார்வோன் முதலாம் சுசென்னெசின் தங்கத்திலான மரண முகமூடி

புது எகிப்திய இராச்சியத்தின் முடிவில் தோன்றிய எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து தீபை நகரத்தின் அமூன் கோயில் தலைமைப் பூசாரிகள் எகிப்து இராச்சியத்தை கைப்பற்றினர். தீபை நகரத்தின் அமூன் கோயிலின் தலைமைப் பூசாரி இரண்டாம் சுசென்னெஸ் தன்னை கீழ் எகிப்தின் (வடக்கு எகிப்து) தனீஸ் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு எகிப்தின் இருபத்தி ஒன்றாம் வம்ச பார்வோனாக முடிசூட்டிக் கொண்டார்.[4] மேல் எகிப்து (தெற்கு எகிப்து) மற்றும் மத்திய எகிப்து பிரதேசங்களை தீபை நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு பிற எகிப்திய தலைமைப் பூஜாரிகள் ஆண்டனர்.

21-ஆம் வம்ச பார்வோன்கள் தொகு

பார்வோன் உருவம் பெயர் ஆட்சிக் காலம் கல்லறை துணைவியர் Comments
சுமெண்டஸ்   ஹெட்ஜ்கேப்பிரிரே செத்பெபென்ரே கிமு 1077 - 1051 டென்டாமூன் கீழ் எகிப்தை மட்டும் ஆண்டார்.
அமெனெனிசு   நெபர்கரே ஹெக்வாசெத் கிமு 1051 - 1047
முதலாம் சுசென்னெஸ்   அக்கெபெர்ரி செதெபெனமூன் கிமு 1047 - 1001 தனீஸ் முத்தேத்மெத்
வியாய்
இவர் 41 அல்லது 46 ஆண்டுகள் ஆட்சி செய்தார்
அமெனிமோப்   கிமு 1001 - 992 தனீஸ்
மூத்த சோர்கோன்   அக்கெபெர்ரி செத்தேபென்ரெ கிமு 992 - 986
சியாமூன்   நெத்ஜெர்கெப்பிரே செதெபெனமூன் கிமு 986 - 967
இரண்டாம் சுசென்னெஸ்   திட்கெபெருரே செதெபென்ரே கிமு 967 - 943

பண்டைய எகிப்திய வம்சங்கள் தொகு

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. The Third Intermediate period (1075–656 BCE)
  2. Twenty First Dynasty of Egypt
  3. Kenneth A. Kitchen, The Third Intermediate Period in Egypt (1100–650 BC), 3rd edition, 1986, Warminster: Aris & Phillips Ltd, p.531
  4. Clayton, Peter A. (2006). Chronicle of the Pharaohs: The Reign-by-reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt. London, England: Thames & Hudson. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0500286289.

மேற்கோள்கள் தொகு

  • Jaroslav Černý, Studies in the Chronology of the Twenty-First Dynasty, JEA 32 (1946), 24-30

வெளி இணைப்புகள் தொகு