முதலாம் சுசென்னெஸ்

முதலாம் சுசென்னெஸ் (Psusennes I), எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட 21-ஆம் வம்ச மன்னர்களில் மூன்றாமவர் ஆவார்.[2] இவர் தனீஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு கீழ் எகிப்தை கிமு 1047 முதல் கிமு 1001 முடிய இறக்கும் வரை ஆட்சி செய்தார். இவர் வடக்கு எகிப்தில் உள்ள தனீஸ் நகரத்தில் அமூன், மூத்து மற்றும் கோன்சு கடவுளர்களுக்கு பெருங்கோயிலை எழுப்பினார். தற்போது அவை சிதைந்து போயிள்ளது. தனீஸ் நகரத்தில் உள்ள இவரது கல்லறையிலிருந்து இவரது மம்மியின் தங்கத்திலான மரண முகமூடியை 1940ல் தொல்லியல் அறிஞர் பியாரி மொன்டெட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[3]நைல் வடிநிலத்தில் இவரது கல்லறை இருந்ததால் கல்லறையின் பெரும்பாலான தொல்பொருட்கள் சிதைந்து போயிருந்தது.

முதலாம் சுசென்னெஸ்
பசெபகென்னியூத் I[1]
முதலாம் சுசென்னெஸ் மம்மியின் தங்கத்திலான மரண முகமூடி, 1940ல் பியாரி மொன்டெட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1047–1001, 21-ஆம் வம்சம்
முன்னவர்அமெனெம்னிசு
பின்னவர்அமெனிமோப்
துணைவி(யர்)முத்னெத்மெத், விஜய்
பிள்ளைகள்அமெனிமோப், அங்கெஃபென்முட்
தந்தைமுதலாம் பினெத்ஜெம்
தாய்ஹெனுத்தவே
இறப்புஏறத்தாழ கிமு 1001
அடக்கம்தனீஸ், வடக்கு எகிப்து
நினைவுச் சின்னங்கள்அமூன் கடவுளின் பெரிய கோயில் (தற்போது சிதைந்துள்ளது)
மன்னர் முதலாம் சுசென்னெஸ் மம்மியின் தங்கத்திலான கழுத்தணி

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Pasebakhaenniut
  2. Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd, 1994., p.178
  3. Bob Brier, Egyptian Mummies: Unravelling the Secrets of an Ancient Art, William Morrow & Company Inc., New York, 1994. p.145

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சுசென்னெஸ்&oldid=3602456" இருந்து மீள்விக்கப்பட்டது