ம. ஆ. சுமந்திரன்
எம். ஏ. சுமந்திரன் என அழைக்கப்படும் மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் (Mathiaparanan Abraham Sumanthiran, பிறப்பு: பெப்ரவரி 9, 1964), இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞரும், சனாதிபதி சட்டத்தரணியும் ஆவார்.[1][2]
எம். ஏ. சுமந்திரன் M. A. Sumanthiran நாடாளுமன்ற உறுப்பினர், சனாதிபதி சட்டத்தரணி | |
---|---|
2013 இல் சுமந்திரன் | |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
பதவியில் ஆகத்து 2015 – மார்ச் 2020 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
பதவியில் 2010–2015 | |
தொகுதி | தேசியப் பட்டியல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் 9 பெப்ரவரி 1964 இணுவில், இலங்கை |
குடியுரிமை | இலங்கையர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
முன்னாள் கல்லூரி | சென்னைப் பல்கலைக்கழகம் மொனாஷ் பல்கலைக்கழகம் |
தொழில் | வழக்கறிஞர் |
இணையத்தளம் | www |
ஆரம்ப வாழ்க்கை
தொகுசுமந்திரன் 1964 பெப்ரவரி 9 இல்[2] இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டம், இணுவிலில் பிறந்தார்.[3][4] இவரது குடும்பம் வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை கரவெட்டியைச் சேர்ந்தவர். தாயார் குடத்தனையைச் சேர்ந்தவர்.[4] கொழும்பில் வளர்ந்த சுமந்திரன் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார்.[4][5] பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[6] பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார்.[6]
2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் இணைய மற்றும் இலத்திரனியல் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6][7]
சுமந்திரன் மெதடிய கிறித்தவர் ஆவார்.[8] இலங்கை மெதடிசத் திருச்சபையின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர்.[9][10]
சட்டப் பணி
தொகு1991 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் வழக்குரைஞராகப் பணியாற்றி வரும் சுமந்திரன் உரிமையியல் வழக்குகளில் மீயுயர், மேன்முறையீட்டு, உயர், மற்றும் மாவட்ட நீதிஅமன்றங்களில் வாதாடி வருகிறார்.[6] இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன, மற்றும் இலங்கை கடல்வள சேவைகள் ஆகியவற்றைத் தனியார் மயமாக்கல் போன்றவற்றில் இவர் வெற்றிகரமாக வாதாடியுள்ளார்.[6] அடிப்படை மனித உரிமை மீறல்கள், நாடாளுமன்ற சட்டமூலங்களுக்கான சட்டமீளாய்வு போன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார்.[6] கொழும்பில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றங்களை இவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.[6][11]
அரசியலில்
தொகுசுமந்திரன் இலங்கை நாடாளுமன்றத்துக்காக ஏப்ரல் 2010 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[12][13][14] 2012 மே மாதத்தில் இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெளிவிவகார மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டார்.[15][16] 2014 செப்டம்பரில் தமிழரசுக் கட்சியின் இரண்டு உதவிச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[17][18][19][20] சுமந்திரன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டு 58,043 விருப்பு வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளும்ன்றம் சென்றார்.[21][22]
2017 சனவரியில் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டி இலங்கை காவல்துறையின் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரைக் கைது செய்தனர்.[23][24] 2016 திசம்பர் 12 இலும் 2017 சனவரி 13 இலும் மருதங்கேணி அருகே சொரணம்பட்டு-தாளையடி வீதியில் கொலை முயற்சி இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[25][26] விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.[23][27][28] ஐந்து சந்தேக நபர்களும் 2017 செப்டம்பரில் யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.[29] 2018 சூலையில் இவர்கள் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.[30][31][32]
2020 நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டு நாடாம்ளுமன்றம் சென்றார்.[33][34][35] யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்குகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 2020 ஆகத்து 6 இல் எண்ணப்பட்டன. இதன்போது பல்வேறு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதங்களும் கைகலப்புகளும் இடம்பெற்றன.[35] ததேகூ வேட்பாளர் சசிகலா ரவிராஜ் (நடராஜா இரவிராஜின் மனைவி) வாக்கு எண்ணப்படுதலில் சுமந்திரன் தலையிட்டதாக குற்றம் சாட்டினார்.[36][37] சுமந்திரன் இக்குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.[35][38][39] வாக்குக் கணிப்பீட்டில் கலந்து கொண்ட சுயாதீனமான தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் வாக்குகள் எண்ணப்படும் செயல்முறையை சரியாகப் புரிந்து கொள்ளாமையும், சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்பட்டமையுமே இந்த வன்முறைச் சம்பவத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியது.[40]
தேர்தல் வரலாறு
தொகுதேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2015 நாடாளுமன்றம்[41] | யாழ்ப்பாண மாவட்டம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 58,043 | தெரிவு | ||
2020 நாடாளுமன்றம்[42] | யாழ்ப்பாண மாவட்டம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 27,834 | தெரிவு |
மேற்கோள்கள்
தொகு- ↑ Behind the Rajapaksa brothers’ smiles Indian Express - August 14, 2009
- ↑ 2.0 2.1 "Directory of Members: M. A. Sumanthiran". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 23 September 2020.
- ↑ "Directory of Members: Sumanthiran, M.A." இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ 4.0 4.1 4.2 டி. பி. எஸ். ஜெயராஜ் (28 பெப்ரவரி 2015). "Tamil “Extremists” target Sampanthan and Sumanthiran of the TNA as “Traitors”". டெய்லிமிரர் இம் மூலத்தில் இருந்து 2015-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150302144128/http://www.dailymirror.lk/65031/tamil-extremists-target-sampanthan-and-sumanthiran-of-the-tna-as-traitors.
- ↑ "Members of Parliament". தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. Archived from the original on 2015-01-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-07.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 "Sri Lanka public interest lawyer in parliament". Lank Business Online. 21 ஏப்ரல் 2010 இம் மூலத்தில் இருந்து 2014-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140709025737/http://www.lankabusinessonline.com/news/sri-lanka-public-interest-lawyer-in-parliament/1425229555.
- ↑ "Post-war Sri Lanka: The Role of International Justice in Ending Military Oppression and Protecting the Rights of Tamil People". ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம். Archived from the original on 2014-12-28. பார்க்கப்பட்ட நாள் 2015-08-08.
- ↑ "Church of South India Newsletter" (PDF). Jaffna Diocese of the Church of South India. சூலை 2009. p. 2. Archived from the original (PDF) on 2009-09-12. பார்க்கப்பட்ட நாள் 2015-08-07.
- ↑ "JDCSI Welcomes New Vice President of the Methodist Church". Jaffna Diocese of the Church of South India. Archived from the original on 2014-12-22. பார்க்கப்பட்ட நாள் 2015-08-07.
- ↑ Dwight, Richard (10 சூலை 2008). "164th Anniversary celebration: History of the Methodist Church, Wellawatte". டெய்லி நியூஸ். http://archives.dailynews.lk/2008/07/10/fea22.asp.
- ↑ "SL Supreme Court issues stay order on expelling Tamils from Colombo lodges". தமிழ்நெட். 8 சூன் 2007. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22411.
- ↑ "The 29 national list members for the Seventh Parliament". டெய்லி மிரர்]]. 22 April 2010. http://www.dailymirror.lk/print/index.php/news/news/8714.html.
- ↑ "National list MPs nominated: UPFA-17, UNP-09, DNA-02, and ITAK-01". தமிழ்நெட். 21 ஏப்ரல் 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31586.
- ↑ "The full National List". சண்டே டைம்சு: p. 12. 25 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100425/News/page12.pdf.
- ↑ Radhakrishnan, R. K. (27 மே 2012). "Sampanthan re-elected leader of ITAK". தி இந்து. http://www.thehindu.com/news/international/sampanthan-reelected-leader-of-itak/article3462337.ece.
- ↑ "TNA on the verge of a split over ITAK". சிலோன் டுடே. 30 மே 2012 இம் மூலத்தில் இருந்து 2014-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222223034/http://www.ceylontoday.lk/27-7141-news-detail-tna-on-the-verge-of-a-split-over-itak.html.
- ↑ "Mavai replaces Sampanthan as ITAK leader". தமிழ் கார்டியன். 6 செப்டம்பர் 2014. http://tamilguardian.com/article.asp?articleid=12123.
- ↑ "Changes In ITAK Top Posts". Asian Mirror. 7 செப்டம்பர் 2014 இம் மூலத்தில் இருந்து 2014-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141223020133/http://www.asianmirror.lk/news/item/3299-changes-in-itak-top-posts/3299-changes-in-itak-top-posts.
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (27 சூலை 2013). "Wigneswaran, Senathirajah and the Facade of TNA Unity". டெய்லி மிரர். http://www.dailymirror.lk/32960/wigneswaransenathirajah-and-the-facade-of-tna-unity.
- ↑ Gammanpila, Udaya (4 ஆகத்து 2013). "TNA's majoritism in minority politics". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2014-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222223611/http://www.ceylontoday.lk/76-39291-news-detail-tnas-majoritism-in-minority-politics.html.
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
- ↑ "Preferential Votes". டெய்லிநியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
- ↑ 23.0 23.1 D. B. S. Jeyaraj (28 January 2017). "Overseas LTTE-backed plot to assassinate TNA MP Sumanthiran in Jaffna revealed". Daily Mirror. http://www.dailymirror.lk/article/Overseas-LTTE-backed-plot-to-assassinate-TNA-MP-Sumanthiran-in-Jaffna-revealed-122886.html. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ Srinivasan, Meera (28 January 2017). "Plot to assassinate TNA legislator uncovered". தி இந்து (Chennai, India). https://www.thehindu.com/news/international/Plot-to-assassinate-TNA-legislator-uncovered/article17105855.ece. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ D. B. S. Jeyaraj (28 January 2017). "Plot to assassinate Sumanthiran: 4 ex-LTTE cadres remanded". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/article/Plot-to-assassinate-Sumanthiran-ex-LTTE-cadres-remanded-122889.html. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ Balachandran, P. K. (29 January 2017). "Four ex-LTTE cadres held for plotting to assassinate Tamil MP Sumanthiran". தி நியூ இந்தியன் எக்சுபிரசு (Chennai, India). https://www.newindianexpress.com/world/2017/jan/29/four-ex-ltte-cadres-held-for-plotting-to-assassinate-tamil-mp-sumanthiran-1564747.html. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ Bastians, Dharisha (1 February 2017). "TID confirms Sumanthiran was target of assassination plot". Daily FT (Colombo, Sri Lanka). http://www.ft.lk/News/tid-confirms-sumanthiran-was-target-of-assassination-plot/56-595245. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ "Police Counter Terrorism Unit warns of LTTE resurgence". Sunday Times (Colombo, Sri Lanka). 12 February 2017. http://www.sundaytimes.lk/170212/columns/lack-of-direction-in-issues-related-to-defence-and-security-228102.html. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ "Attempted murder of Sumanthiran: Suspects granted bail". Daily News (Colombo, Sri Lanka). 21 September 2017. http://www.dailynews.lk/2017/09/21/law-order/128914/attempted-murder-sumanthiran-suspects-granted-bail. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ Bastians, Dharisha (31 January 2017). "TID arrests another suspect in plot to assassinate Sumanthiran". Daily FT (Colombo, Sri Lanka). http://www.ft.lk/article/594983/TID-arrests-another-suspect-in-plot-to-assassinate-Sumanthiran. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ "Assassination plot against Sumanthiran : Indictments to be served in Colombo High Court tomorrow". Sunday Observer (Colombo, Sri Lanka). 29 July 2018. https://www.sundayobserver.lk/2018/07/29/news/assassination-plot-against-sumanthiran-indictments-be-served-colombo-high-court. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ "Charge sheets filed against 5 under PTA, in the Attempted Murder case of Sumanthiran". Tamil Diplomat (London, U.K.). 30 July 2018. http://tamildiplomat.com/charge-sheets-filed-5-pta-attempted-murder-case-sumanthiran/. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 5A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
- ↑ "General Election 2020: Preferential votes of Jaffna District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094033/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-jaffna-district. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ 35.0 35.1 35.2 D. B. S. Jeyaraj (15 August 2020). "Did Sumanthiran Win In Jaffna By “Stealing” Sashikala’s Votes?". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/Did-Sumanthiran-Win-In-Jaffna-By-Stealing-Sashikalas-Votes/172-193895. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ "Claims of foul-play over preferential vote count in Jaffna after late night recount". Tamil Guardian. 6 August 2020. https://www.tamilguardian.com/content/claims-foul-play-over-preferential-vote-count-jaffna-after-late-night-recount. பார்த்த நாள்: 24 September 2020.
- ↑ "Sumanthiran alleged of exerting Colombo’s influence to tamper with preferential vote counts". தமிழ்நெட். 8 August 2020. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=39913. பார்த்த நாள்: 24 September 2020.
- ↑ "Clash at Jaffna counting centre; Row over votes for Sumanthiran and Sasikala". Sunday Times (Colombo, Sri Lanka). 9 August 2020. http://www.sundaytimes.lk/200809/columns/clash-at-jaffna-counting-centre-row-over-votes-for-sumanthiran-and-sasikala-411860.html. பார்த்த நாள்: 24 September 2020.
- ↑ "Sumanthiran’s response to allegations made concerning the TNA preferential count in Jaffna". NewsWire (Nugegoda, Sri Lanka). 7 August 2020. http://www.newswire.lk/2020/08/07/sumanthirans-response-to-allegations-made-concerning-the-tna-preferential-count-in-jaffna/. பார்த்த நாள்: 24 September 2020.
- ↑ Kuruwita, Rathindra (8 August 2020). "Bloody rumpus at Jaffna Central College blamed by CMEV on lack of understanding of counting process". தி ஐலண்டு (Colombo, Sri Lanka). https://island.lk/bloody-rumpus-at-jaffna-central-college-blamed-by-cmev-on-lack-of-understanding-of-counting-process/. பார்த்த நாள்: 24 September 2020.
- ↑ Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. பார்த்த நாள்: 23 September 2020.
- ↑ "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 23 September 2020.