எம். கிருஷ்ணன் நாயர் (இயக்குநர்)

திரைப்பட இயக்குநர்

எம். கிருஷ்ணன் நாயர் (2 நவம்பர் 1926 – 10 மே 2001) என்பவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களை இயக்கி இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். [1] [2] இவர் 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். அதில் ம. கோ. இராமச்சந்திரன் நடித்த நான்கு படங்கள் உட்பட 18 தமிழ்ப் படங்களும், என். டி. ராமராவ், கிருட்டிணா போன்ற உச்ச நட்சத்திரங்கள் நடித்த இரண்டு தெலுங்கு திரைப்படங்களும் அடங்கும். [3] ஹரிஹரன், கே. மது, எஸ். பி. முத்துராமன், பாரதிராஜா, ஜோஷி உள்ளிட்ட பிரபல திரைப்பட படைப்பாளிகளிடம் உதவி இயக்குநராக பயிற்சி பெற்றுள்ளார்.

எம். கிருஷ்ணன் நாயர்
பிறப்பு2 நவம்பர் 1926
இறப்பு10 மே 2001(2001-05-10) (அகவை 74)
திருவனந்தபுரம், கேரளம்
பணிதிரைப்பட இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
எஸ். சுலோச்சனா தேவி
பிள்ளைகள்கே. ஜெயக்குமார்
அரிகுமார் லால்
சிறீகுமார் கிருஷ்ணன் நாயர் உள்ளிட்ட மூவர்

மலையாளத் திரையுலகிற்கு அளித்த பங்களிப்பிற்காக கேரள அரசின் உயரிய விருதான ஜேசி டேனியல் விருது அவருக்கு 2000 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் கே. சுலோச்சனா தேவியை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உண்டு. இவரது மூத்த மகன் கே. ஜெயக்குமார் கவிஞர், பாடலாசிரியர், ஒரு முன்னாள் அதிகாரி ஆவார், அவர் தற்போது மலையாள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றுகிறார். இவரது இரண்டாவது மகன் ஹரிகுமார், இவரது இளைய மகன் ஸ்ரீகுமார் கிருஷ்ணன் நாயர் இந்தியாவின் முதல் லைவ்-ஆக்ஷன்/அனிமேஷன் ஹைப்ரிட் திரைப்படமான ஓ' ஃபேபியை இயக்கியதற்காக மிகவும் பிரபலமாக அறியப்படும் திரைப்பட இயக்குனர் ஆவார். [4]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

தொகு
  • 1987 கலாம் மாரி கதா மாரி
  • 1985 புழையொழுக்கும் வாழி
  • 1984 மணிதாலி
  • 1983 மணியாற
  • 1983 பாலம்
  • 1982 மயிலஞ்சி
  • 1982 ஒரு குஞ்ஞு ஜானிக்குன்னு
  • 1980 டிவிக் விஜயம்
  • 1980 ரஜனிகாந்தி
  • 1979 அஜ்நாத தீரங்கள்
  • 1979 கல்லியங்கட்டு நீலி
  • 1979 ஒரு ராகம் பல தாளம்
  • 1978 அசோக வனம்
  • 1978 அவள் கண்ட லோகம்
  • 1978 இதனெண்டே வாழி
  • 1978 ரவுடி ராமு
  • 1978 உரக்கம் வராத இரவுகள்
  • 1977 மதுர ஸ்வபானம்
  • 1977 சாந்த ஒரு தேவதா
  • 1977 தாளப்பொலி
  • 1977 யாதீம்
  • 1976 அம்மா
  • 1976 நீலா புடவை
  • 1976 ஊருக்கு உழைப்பவன் (தமிழ்)
  • 1974 சுப்ரபாதம்
  • 1973 பத்ரதீபம்
  • 1973 தோட்டவாடி
  • 1973 யாமினி
  • 1973 தலைப் பிரசவம் (தமிழ்)
  • 1972 மந்திரகோடி
  • 1972 நான் ஏன் பிறந்தேன் (தமிழ்)
  • 1972 அன்னமிட்ட கை (தமிழ்)
  • 1971 ரிக்சாக்காரன் (தமிழ்)
  • 1971 அக்னிமரிகம்
  • 1971 தபஸ்வினி
  • 1970 பீகார நிமிஷங்கள்
  • 1970 சிட்டி செல்லேலு (தெலுங்கு)
  • 1970 டிடெக்டிவ் 909
  • 1970 பழுங்குபத்திரம்
  • 1970 சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா
  • 1970 தாரா
  • 1970 விவாகித
  • 1969 அனாச்சதனம்
  • 1969 மன்னிப்பு (தமிழ்)
  • 1969 ஜ்வாலா
  • 1969 மகனே நீ வாழ்க (தமிழ்)
  • 1969 படிச்சா கள்ளன்
  • 1968 சர்கார் எக்ஸ்பிரஸ் (தெலுங்கு)
  • 1968 அக்னி பரீக்ஷா
  • 1968 அஞ்சு சுந்தரிகள்
  • 1968 இன்ஸ்பெக்டர்
  • 1968 கடல்
  • 1968 கார்த்திகை
  • 1968 பாடுன்ன புழா
  • 1968 முத்துச் சிப்பி (தமிழ்)
  • 1967 அக்னிபுத்ரி
  • 1967 கொச்சி எக்ஸ்பிரஸ்
  • 1967 கலெக்டர் மாலதி
  • 1967 கானத வேஷங்கள்
  • 1967 கதீஜா
  • 1967 குடும்பம் (தமிழ்)
  • 1966 கலிதோழன்
  • 1966 கல்யாண ராத்திரியில்
  • 1966 கனக சிலங்கா
  • 1966 குஸ்ருதி குட்டன்
  • 1966 பிஞ்சு ஹிருதயம்
  • 1965 கடத்துகாரன்
  • 1965 காத்திருன்னா நிக்காஹ்
  • 1965 கட்டு துளசி
  • 1965 காவ்யா மேளா
  • 1964 பார்தவு
  • 1964 கருத்த காய்
  • 1964 குட்டி குப்பாயம்
  • 1963 காட்டு மைனா
  • 1962 வியர்பிண்டே விலா
  • 1960 ஆளுக்கொரு வீடு (தமிழ்)
  • 1955 அனியாத்தி
  • 1955 சி.ஐ.டி

மேற்கோள்கள்

தொகு
  1. World Filmography: 1967. பார்க்கப்பட்ட நாள் 27 November 2011.
  2. Indian films. பார்க்கப்பட்ட நாள் 27 November 2011.
  3. "Director M. Krishnan Nair at "Imprints on Indian Film Screen"". 11 August 2012. பார்க்கப்பட்ட நாள் 17 December 2012.
  4. "Krishnan Nair Smrithi Sandhya". Yentha. 27 May 2011. Archived from the original on 12 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 10 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு