எம். வி. தேவன்

மலையாள எழுத்தாளர்

மாடத்தில் வாசுதேவன் (ஆங்கிலம்: Madathil Vasudevan) (பிறப்பு:1928 சனவரி 15 - இறப்பு 2014 ஏப்ரல் 29) எம். வி. தேவன் எனப் பிரபலமாக அறியப்படும் இவர் ஒரு இந்திய ஓவியரும், சிற்பியும், எழுத்தாளரும், கலை விமர்சகரும் மற்றும் சொற்பொழிவாளருமாவார். அவரது கலைப் படைப்புகளைத் தவிர, பல கலாச்சார நிறுவனங்களுக்கான கட்டடக்கலை வடிவமைப்புகளுக்காகவும், கொச்சியை தளமாகக் கொண்ட கேரள கலாபீடம், கொச்சியை தளமாகக் கொண்ட கலாச்சார அமைப்பு, மலையாள கலாகிராமம், புதிய மாகேயில் உள்ள ஒரு கலை கிராமம் மற்றும் மற்றொரு கலை கிராமமான கலாகிராமம் ஆகியவற்றை நிறுவியதற்காக அவர் செய்த பங்களிப்புகளுக்காகவும் அறியப்பட்டார். கொல்லத்தில் கேரள லலிதகலா அகாதமியின் முன்னாள் தலைவரான இவர் கேரள லலிதகலா அகாதமியின் இராஜா இரவி வர்மா புரஸ்காரம், வயலார் விருது மற்றும் மாத்ரு பூமி இலக்கிய விருது உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்ற்றுள்ளார்.

சுயசரிதை தொகு

எம். வி. தேவன் 1928 சனவரி 15, அன்று தென்னிந்திய மாநிலமான கேரளாவில் தலச்சேரியில் உள்ள ஒரு சிறிய கிராமமான பன்னியன்னூரில் பிறந்தார். [1] 1946இல் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த பின்னர், ஓவியம் படிப்பதற்காக சென்னைக்குப் புறப்பட்டார். [2] சென்னையில், சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு டி. பி. இராய் சௌத்ரி மற்றும் அப்போதைய முதன்மை மற்றும் துணை முதல்வராகவும் இருந்த கே. சி. எஸ் பணிக்கர் ஆகியோரின் கீழ் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த நேரத்தில்தான், இவர் எம். கோவிந்தனை சந்தித்தார். அவர் இனது சிந்தனையை பாதித்தார். [3] கேரளாவுக்குத் திரும்பிய இவர் தனது சொந்த கலை நோக்கங்களைத் தவிர பல கலை, கலாச்சார மற்றும் இலக்கிய இயக்கங்களில் ஈடுபட்டார். [4]

தேவன் சிறீதேவி என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு சமீலா மற்றும் சாலினி என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இவர் 2014 ஏப்ரல் 29 அன்று, ஆலுவாவில் உள்ள தனது இல்லத்தில், 86 வயதில் இறந்தார். இவரது மகள்களுடன் வசித்து வந்த இவரது மனைவி அவருக்கு முன் இறந்து போனார். [3]

தொழில் மற்றும் மரபு தொகு

1952 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து திரும்பிய அவர், மாத்ரூபூமி தினசரியின் கோழிக்கோடு அலுவலகத்தில் ஒரு பணியாளர் கலைஞராக சேர்ந்தார். 1961 ஆம் ஆண்டு வரை சென்னையின் தெற்கு மொழி புத்தக அறக்கட்டளையில் கலை ஆலோசகராக வாய்ப்பு கிடைக்கும் வரை அங்கேயே பணிபுரிந்தார். [5] ஒரு வருடம் கழித்து, சென்னையின் லலித் கலா அகாதமி நிறுவப்பட்டபோது அதன் நிறுவனர் செயலாளராக பணியாற்றுவதற்காக அவர் இந்த வேலையை விட்டு விலகினார் [6] அவரது பணிக் காலத்தில், அகாடமி சென்னையைச் சேர்ந்த கலைஞர்களுக்கான சந்திப்பு இடமாக இருந்தது. இது சோழமண்டலம் கலைஞர்களின் கிராமத்தை உருவாக்குவதற்கு ஒரு உத்வேகமாக அமைந்தது. இவர் இதில் ஒரு நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். [7] பின்னர், அவர் 1996 ஆம் ஆண்டில் அகாதமியின் புது தில்லி அலுவலகத்திற்கு இரண்டு வருட காலத்திற்கு பணிபுரியச் சென்றார். இந்த சமயத்தில் இவர் தொலைநோக்குப் பார்வை கொண்ட பொது ஊழியரான எம். கே. கே. நாயருடன் ஆலுவாவில் நடந்த அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். [3] அந்த நாட்களில் திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தின் (FACT) தலைவராக இருந்த நாயர், தேவனை நிறுவனத்தின் பொறியியல் மற்றும் வடிவமைப்பு (ஃபெடோ) சங்கத்தின் கலை ஆலோசகராக பணி புரிய அழைத்தார். இவர் 1972 ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் பணியாற்றினார். நாயர் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறிய ஒரு வருடம் கழித்து இந்திய திட்டக்குழு ஆணையத்தில் இணைச் செயலாளர் பதவியை ஏற்க தேவனும் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். [8]

விருதுகள் மற்றும் கௌரவங்கள் தொகு

தேவனின் மகத்தான பணியாகக் கருதப்படும் தேவஸ்பந்தனம் என்பது இரண்டு விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது 2000 ஆம் ஆண்டில் வயலார் விருதுடன் தொடங்கியது. [9] [10] அதைத் தொடர்ந்து 2003இல் மாத்ருபூமி இலக்கிய விருது வழங்கப்பட்டது. [11] இந்த புத்தகம் பின்னர் மலையாளூர் விருதையும் பெற்றது. [12] இடையில், அவர் 2002 இல் கேரள லலிதகலா அகாதமியின் இராஜா ரவிவர்மா புரஸ்காரத்தையும் பெற்றார். [13] இவர் கேரள லலித கலா அகாதமியின் சக ஊழியம் மற்றும் சென்னை லலித கலா அகாதமியின் சக ஊழியம் ஆகியவற்றையும் பெற்றுள்ளார். [2] தேவனுக்கு கிடைத்த மற்ற கௌரவங்களில் விமர்சகர்கள் விருது மற்றும் எம்.கே.கே நாயர் விருது ஆகியவை அடங்கும். அவரது முதல் நினைவஞ்சலி நிகழ்ச்சி கொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டது. தேவனின் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி மற்றும் அவரது சமகாலத்தவர்களான தைப் மேத்தா, எஃப்.என். சௌசா, க. கி. எப்பார் , லக்ஷ்மா கௌட், பூபன் காகர் மற்றும் அக்பர் பதம்சி ஆகியோரின் படைப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன . [14] கேரள கலாபீடத்தின் இவரது மாணவர்களில் ஒருவரான பினுராஜ் கலாபீடம், தேவனின் வாழ்க்கை குறித்த ஒரு ஆவணப்படத்தை தேவஸ்பந்தனம் என்ற இவரது விருது பெற்ற புத்தகத்தின் தலைப்பில் உருவாக்கியுள்ளார். [3] [15]

மேற்கோள்கள் தொகு

  1. "Eminent painter and sculptor M V Devan dies". www.madhayamam.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "M. V. Devan - Kerala Tourism". Kerala Tourism (in ஆங்கிலம்). 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  3. 3.0 3.1 3.2 3.3 S. Anandan (2014-04-27). "Artist M.V. Devan passes away". பார்க்கப்பட்ட நாள் 2014-05-01.
  4. "M V Devan fought for art, says M Mukundan - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  5. "Kerala Artiste M.V. Devan Dies At 86". indiatimes.com (in ஆங்கிலம்). 2014-04-30. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  6. "Kerala artist who left a mark on Cholamandal - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  7. "Another first for Indian art". The Hindu (in Indian English). 2008-06-03. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  8. "Gained in translation? Patel man's tale". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  9. "Vayalar Award winners". keralaculture.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  10. "Vayalar Award" (PDF). Kerala Sahitya Akademi. 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  11. "The Hindu : Kerala / Kozhikode News : Mathrubhumi prize presented". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  12. "Eminent Kerala artist dead". Deccan Herald (in ஆங்கிலம்). 2014-04-30. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  13. "Raja Ravi Varma Puraskaram - Kerala Lalithakala Akademi". lalithkala.org. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  14. Anand, Shilpa Nair (2015-05-14). "The palette of the modernist". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.
  15. "Etching the Dreams of the Master Artist". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-03-31.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வி._தேவன்&oldid=3593837" இலிருந்து மீள்விக்கப்பட்டது