எஸ். இரத்தினவேல் பாண்டியன்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
நீதியரசர் எஸ். இரத்தினவேல் பாண்டியன் (13 மார்ச்சு 1929 – 28 பிப்ரவரி 2018)[1] இந்திய உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர் ஆவார்.[2] இவரது முன்னோடித் தீர்ப்புகள் இன்றளவும் மேற்கோள் காட்டப்படுகின்றன.[3][4] அவர் சட்டத் தொழிலில் நுழைவதற்கு முன்பு அரசியலில் பணியாற்றிய ஒரு பன்முக ஆளுமை ஆவார்.
மாண்புமிகு நீதியரசர் எஸ். இரத்தினவேல் பாண்டியன் Justice S. Ratnavel Pandian | |
---|---|
இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் | |
பதவியில் 14 டிசம்பர் 1988 – 12 மார்ச் 1994 | |
நியமிப்பு | இந்தியக் குடியரசுத் தலைவர் |
தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம் | |
பதவியில் 1974–1988 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திருப்புடைமருதூர், திருநெல்வேலி மாவட்டம் | 13 மார்ச்சு 1929
இறப்பு | பெப்ரவரி 28, 2018 அண்ணா நகர், சென்னை | (அகவை 88)
துணைவர் | லலிதா |
முன்னாள் கல்லூரி | சென்னைப் பல்கலைக்கழகம் (பி.ஏ), (பி.எல்) |
இந்திய உச்ச நீதிமன்றத்தில், அவர் புகழ்பெற்ற இந்திரா சாவ்னி வழக்கின் விசாரணை அமர்வில் ஒரு நீதிபதியாக இருந்தார். 1992 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில், பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டது. 1994 ஆம் ஆண்டில் அவர் ஓய்வு பெற்ற பின்னர், 5-வது மத்திய ஊதிய ஆணையத்தின் தலைவராக இருந்து ஏப்ரல் 1997 இல் இறுதி அறிக்கை சமர்ப்பித்தார். ஆகத்து 14, 2006 ஆம் தேதியன்று, அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றார், 2009 வரை நீடித்த அவரது பதவிக் காலத்தில், அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து அவருக்கு வழங்கப்பட்டது.[5]
இளமையும் கல்வியும்
தொகுதமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர் என்னும் சிற்றூரில் பிறந்த இரத்தினவேல் பாண்டியன் தம் பள்ளிப் படிப்பை தீர்தபதி பள்ளி, அம்பாசமுத்திரத்திலும் கல்லூரிக் கல்வியைத் திருநெல்வேலி தூய சேவியர் கல்லூரியிலும் முடித்தார். 1954 ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
அரசியலில்
தொகுஇரத்னவேல் பாண்டியன், 1960 ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதி கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது இரத்தினவேல் பாண்டியன் தினமும் அவரைச் சந்தித்துப் பேசுவது வழக்கம். அவரிடம் இளம் வழக்கறிஞர்களாகப் பணியாற்றியவர்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர். திமுக சார்பில் அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி தொகுதியிலும் போட்டியிட்டார். பிறகு, தனக்கு பிடித்தமான வழிக்கறிஞர் பணியில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார்.
வழக்குரைஞராக
தொகுஆரம்பகாலத்தில் இரத்தினவேல் பாண்டியன், வழக்கறிஞர் கே. நாராயணசமி முதலியாரிடம் பயிற்சி பெற்றார். பின்னர், செல்லப்பாண்டியன், ராஜகோபால ஐயர் ஆகியோரிடம் இளம் வழக்கறிஞராகப் பணி புரிந்தார். பதினேழு ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றிய பிறகு, சென்னை உயர்நீதிமன்ற அரசுத் தரப்பு வழக்குரைஞராக 1971 ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டார்.[6] 1967 ஆம் ஆண்டு தொடங்கி நெல்லை மாவட்டத்தின் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். அதே காலகட்டத்தில், சீவலப்பேரி பாண்டி தொடர்பான வழக்கு உள்ளிட்ட முக்கியமான குற்றவியல் வழக்குகளில் வாதாடினார்.[7]
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக
தொகுஇரத்தினவேல் பாண்டியன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 1974 ஆம் ஆண்டில் பதவியேற்றார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி வகித்தபோது, ஆராய்ச்சி மணி அடித்து நீதிகேட்ட பசுவுக்காகத் தன் மகனைப் பலி கொடுத்த சோழ மன்னன் தொடர்பான காட்சியை உயர் நீதிமன்றத்தில் நிறுவச்செய்தார். சமநீதிச் சோழன் என அதில் பெயர் பொறித்ததும் உள்ளார்.[8]
உச்ச நீதிமன்ற நீதிபதியாக
தொகு1988 டிசம்பர் 14 இல் இந்திய உச்சநீதி மன்றத்தின் நீதிபதியாகப் பதவி ஏற்றார். பின்னர், 1994 மார்ச்சு 12 இல் நீதிபதி பணியில் இருந்து ஒய்வு பெற்றார். இரத்தினவேல் பாண்டியன் மாணவப் பருவம் தொட்டு முற்போக்கு, சமூகச் சிந்தனை கொண்டவராக இருந்தார். மறைந்த நீதிபதி வீ. ஆர். கிருஷ்ணய்யரைத் தம் முன்னோடியாகக் கொண்டு நீதித் துறையில் செயல்பட்டார்.
முக்கிய வழக்குகள்
தொகுஇரத்னவேல் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, அவருக்கு வந்த வழக்கு ஒன்றில், முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படாமல், பல விசாரணைக் கைதிகள் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்தனர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்தியது. அவர்களில் பலர் தங்கள் அவலநிலையை பிரதிநிதித்துவப்படுத்த வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ள முடியாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். நீதிபதி இரத்னவேல் பாண்டியன் சரியான நேரத்தில் தலையிட்டதால், அவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பகுதியை சிறைச்சாலைகளில் கழித்திருக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டது. இந்த வழக்கானது, பெரம்பூர் கிராமத்தில் உள்ள விவசாயி ஜெகன்நாத் நாயுடு மீதான வழக்காகும். இந்த வழக்கில், பொன்னேரி நீதிமன்ற நடுவர் பிணை வழங்காததால், நீதிபதி எஸ். இரத்னவேல் பாண்டியன் முன்பாக சீரய்வு கோரிய போது, பிணை வழங்கப்பட்டது. அப்போது, 57 நீதிதுறை நடுவர்கள் மற்றும் 143 இரண்டாம் வகுப்பு நடுவர்களிடம் வழக்கு நிலுவை விபரங்களை கேட்ட போது, ஏப்ரல் 1, 1983 நிலவரப்படி, 2,99,439 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைக்குப் பின் சட்டப்படியான காலமான 6 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை காவல்துறையால் தாக்கல் செய்யமல் இருந்தது கண்டறியப்பட்டது. அதிலும் சில சகித்துக் கொள்ள முடியாத வகையில், 17 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்ததும் கண்டறியப்பட்டது. அதன் பின்னரே, முதல் தகவல் அறிக்கைகளை முடிவு செய்ய நீதிபதி எஸ். இரத்னவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.[சான்று தேவை][9][10]
இந்திரா சாவ்னி எதிர் யூனியன் ஆஃப் இந்தியா
தொகுமாண்புமிகு நீதிபதிகள்: எம். எச். கனியா, எம். என். வெங்கடச்சலையா, எஸ். இரத்னவேல் பாண்டியன், டி. கே. தொம்மன், ஏ. எம். அஹ்மதி, குல்தீப் சிங், பி. பி . சாவந்த், ஆர். எம். சஹாய், பி. பி. ஜீவன் ரெட்டி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த தீர்ப்பு, இந்தியாவில் உள்ள அனைத்து பிற்பட்ட வகுப்புபினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான கேள்வியைக் கையாளும் மண்டல் கமிஷன் வழக்கு என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில், அனைத்து நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பில் ஒருமனதாக இருந்தபோதிலும், இரத்னவேல் பாண்டியன் தனது வேதனையையும் வரலாற்று முன்னோக்கையும் கையாள்வதற்காகவே, ஒரு தனித் தீர்ப்பு எழுதியுள்ளார்.
- "புதிய சமூக நிலைமைகள் மற்றும் உண்மை சூழ்நிலைகளைப் பற்றி நீதிபதிகள் பேசும்படி கோரப்படும் பொழுது, அவர்கள் தாடையில் நீதித்துறை எனும் பூட்டு காரணமாக பாரம்பரியத்தை வெளிப்படுத்தாமல் பேசுகிறார்கள். எனவே நான் பேசுகிறேன். ”என தனது நிலைப்பட்டினையும் வெளிப்படுத்தியுள்ளார்.
1990-களில் வி. பி. சிங் இந்திய பிரதமராக இருந்த போது, அவரது அரசு அமல்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்து வட மாநிலங்களில் கிளர்ச்சிகள் நடந்தன. மேலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. அவ்வழக்கில் தமிழகம் மற்றும் உத்தர பிரதேசம் தவிர, மற்ற மாநில அரசுகள் மண்டல் பரிந்துரைகளை ஆதரித்து வாதாடவில்லை. 1992-ல் அவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நீதிபதி இரத்தினவேல் பாண்டியனும் ஒருவர். பிற்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது என்ற நிலைப்பாடு, அரசியல் சட்டரீதியாகச் செல்லும் என்றும், பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க மண்டல் குழு கையாண்ட அளவீடுகள் விஞ்ஞானரீதியானவை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. நாடு முழுவதையும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக திருப்பிய உணர்ச்சிக் குவியல்களை கட்டுப்படுத்தியது அந்தத் தீர்ப்பு. அந்த தீர்ப்பு "AIR 1993 SUPREME COURT 477" என பிந்தைய வழக்குகளில் மேற்கோள் காட்டப்படுகின்றது.[11]
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
தொகுஅதே போல் மற்றொரு வழக்கு, ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், நீதிபதி இரத்னவேல் பாண்டியன் நாட்டின் நீதித்துறையின் புலம்பத்தக்க நிலையை சுட்டிக் காட்டினார். நாட்டில் உள்ள மொத்தம் 18 உயர் நீதிமன்றங்களில் 12 உயர் நீதிமன்றங்களில் பட்டியல் சாதியினருக்கு ஒரு பிரதிநிதித்துவம் கூட இல்லை என்றும், பட்டியல் பழங்குடியினர் வகுப்பினருக்கு, நாட்டில் உள்ள 14 உயர் நீதிமன்றங்களில் ஒரு நீதிபதி கூட இல்லை என்றும், 12 உயர் நீதிமன்றங்களில் ஓ. பி. சி வகுப்பினர் பிரதிநிதியாக ஒரு நீதிபதி கூட இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ். ஆர். பொம்மை எதிர் இந்திய யூனியன்
தொகுஎஸ். இரத்னவேல் பாண்டியன் எழுதிய மற்றொரு தீர்ப்பானது, ஒரு மாநில அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதில் ஜனாதிபதியின் அதிகாரம் குறித்து விவாதிக்கும் போது, மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்படுகிறது. அரசியலமைப்பின் விதிகளின்படி ஒரு மாநில அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது என்று ஜனாதிபதி முழுமையாக திருப்தி அடைந்தால்தான், உறுப்பு 356 இன் கீழ் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும், அதுவும் குறைந்த அளவில் மட்டுமே. இல்லையெனில், இந்த அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதால் அதன் நடைமுறையையும் அரசியலமைப்பு சமநிலையயும் சீர்குலைக்கும் என இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.[12]
ஜனதா தளம் எதிர் எச். எஸ். சவுத்திரி
தொகுஒரு நீண்ட பாம்பு வரிசை
தொகுநீதிபதி எஸ். இரத்னவேல் பாண்டியன், "ஜனதா தளம் மற்றும் எச். எஸ். சவுத்திரி மற்றும் சிலர்" - (AIR 1993 SC 892) என்ற தீர்ப்பின் 110 வது பத்தியில், ஒரு நீண்ட பாம்பு வரிசையாக மக்கள் நீதிமன்றங்கள் முன்பாக காத்திருக்கிரார்கள் என குறிப்பிடுகிறார். மேலும், "நூற்றுக்கணக்கான மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள், முறையான குறைகளைக் கொண்ட உண்மையான வழக்குகள், சொல்லப்படாத வேதனையின் கீழ் தூக்கு மேடைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் பற்றிய வழக்குகள், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நீண்ட ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிப்பவர்கள் வழக்குகள், சேவை விஷயங்களில் தேவையற்ற தாமதத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் பற்றிய வழக்குகள், அரசு அல்லது தனியார் நபர்கள் வரி குறித்த வழக்குகள், (அதில் ஏராளமான பொது வருவாய் அல்லது அங்கீகரிக்கப்படாத வரித் தொகைகள் பூட்டப்பட்டுள்ளன), தடுப்புக்காவல் உத்தரவுகளிலிருந்து விடுதலையை எதிர்பார்க்கும் நபர்கள் பற்றிய வழக்குகள், ஆகிய அனைவருமே நீதிமன்றங்களுக்குள் நுழைந்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நீண்ட ஆண்டுகளாக ஒரு நீண்ட பாம்பு வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், விரைந்து செயல்படும் அமைப்புகளும், தலையிடும் இடைத்தரகர்களும், அவர்களை வழிநடத்துபவர்களும், அதிகாரப்பூர்வமான தலையீட்டாளர்கள் ஆகியோர், தங்களது தனிப்பட்ட லாபம் அல்லது தனிநலம் தவிர வேறு எந்த பொது நலனும் இல்லை என்று தெரிந்தும், தங்களுக்காகவோ அல்லது மற்றவர்களின் பினாமியாகவோ அல்லது ஏதேனும் ஒரு லாபம் பெரும் உந்துதல் காரணமாகவோ அல்லது சுயவிளம்பரத்தின் காரணமாகவோ தங்களது கண்களை மூடிக்கொண்டும், பொது நலன் வழக்குகளின் முகமூடியை அணிந்துகொண்டும், பொதுநலன் என முணுமுணுத்துக் கொண்டும், நீதிமன்றங்களுக்குள் நுழைகிறார்கள். அதனால், மோசமான மற்றும் அற்பமான மனுக்களை தாக்கல் செய்து அதன்மூலம் நீதிமன்றங்களின் மதிப்புமிக்க நேரத்தை வீணாக்குகின்றனர். இதன் விளைவு, நீதிமன்றத்தின் கதவுகளுக்கு வெளியே நிற்கும் பாம்பு வரிசை ஒருபோதும் அசைக்க முடியாத படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டு, உண்மையான வழக்கு உள்ளவர்களின் மனதில் ஒரு விரக்தியை உருவாக்குகிறது, மேலும், இதன் விளைவாக, அவர்கள் எங்கள் நீதித்துறை நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள் என நீதிபதி எஸ். இரத்னவேல் பாண்டியன் குறிப்பிடுகிறார்.
தனி நபர் ஆணையம்
தொகுஅனகிராக் மாவட்டமான பராக்பாரா, புல்பூல், நோவ்காம், காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் ஒரு நபர் கமிஷனாக நீதியரசர் இரத்னவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டார். இதில் அவர் துல்லியத்தன்மையுடனும் மிகுந்த முழுமையுடன் அறிக்கை வழங்கினார். அவர் கள விசாரணைகளை மேற்கொண்டார். எல்லா வகையான மக்களுடனும் சுதந்திரமாக ஒன்றிணைந்தார். மேலும் அவர்களின் வெளிப்பாடுகளை முழுவதுமாக செவி மடுத்தார். மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட கண்காணிப்பாளரையும் செவிமடுப்பிலிருந்து அனுப்புவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை சுதந்திரமாக பேச அவர் உதவினார். அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களுக்கு ஒரு பொறுமையான விசாரணையையும் வழங்கினார். இந்த கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு, நீதியரசர் இரத்னவேல் பாண்டியன் தனது அறிக்கையை 225 பக்கங்களாக நிறைவுசெய்தது, ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள் சமர்ப்பித்தார். அது மட்டுமல்லாமல் இப்பணிக்காக இரத்தினவேல் பாண்டியனுக்கு அரசு கொடுத்த சம்பளம் சுமார் 1 1-/2 லட்சத்தைத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கே கொடுத்து விட்டார். 7 அப்பாவி மக்களைக் கொன்றது மற்றும் 14 ஆட்களைக் காயப்படுத்தியவர்கள் யார் என்று அவர் அடையாளம் காட்டினார். அரசாங்கம் கண்டுபிடிப்புகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.[13]
தென் மாவட்டக் கலவரங்கள்
தொகுதென் மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் வெடித்த காலக்கட்டத்தில், தென் மாவட்டங்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிகுறித்து ஆராய்ந்து விரிவான அறிக்கையை தர அமைக்கப்பட்ட குழுவுக்கும் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் தலைவராக இருந்தார். மே 16, 1998 ம் தேதியில் இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியானது.[14]
விருதுகள்
தொகு- இவருடைய சட்டப்பணியைப் பாராட்டி "சோகோ" என்னும் குடிமக்கள் சமூக அமைப்பு வி. ஆர். கிருஷ்ணய்யர் விருதை வழங்கிப் பெருமைப் படுத்தியது.[சான்று தேவை][15][16][17]
- இந்தியாவின் தலை சிறந்தக் குடிமகன் விருது அன்னை தெரேசாவின் கைகளால் பெற்றார்.[சான்று தேவை][18]
மறைவு
தொகுநீதிபதி எஸ். இரத்னவேல் பாண்டியன் சென்னையில் உள்ள அவரது அண்ணா நகர் இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89. மு. க. ஸ்டாலின், வைகோ மற்றும் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் நீதியரசர் இரத்னவேல் பாண்டியன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.[19][20][21][22][23][24][25] மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்கள் நீதியரசர் திரு. இரத்னவேல் பாண்டியனின் புகைப்படத்தை திறந்து வைத்தார்கள்.[26] நீதிபதி எஸ். இரத்தினவேல் பாண்டியனுக்கு ஆர். சுப்பையா, ஆர். ரவிசந்திரன், ஆர். சேகர், ஆர். கந்தசாமி, ஆர். காவேரி மணியன், இலட்சுமி ஆகிய ஆறு பிள்ளைகள் உள்ளனர்.[27]
இரங்கற் செய்திகள்
தொகுவைகோ
தொகுவைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரத்தினவேல் பாண்டியன் அவர்களின் புகழ் காலமெல்லாம் தமிழகத்தில் நிலைத்து இருக்கும்.அவரை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் அண்ணாச்சி அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், அவர் மீது அன்பு கொண்ட இலட்சோபலட்சம் மக்கள் அனைவருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று வைகோ தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.[28][29]
மு.க. ஸ்டாலின்
தொகுமு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நீதியரசர் இரத்னவேல் பாண்டியன் மறைவு பெரும் துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதி சார்பிலும், திமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
தொகுநீதிபதி இரத்தினவேல் பாண்டியன் பற்றி வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் கூறுகையில், "சட்டங்கள், சட்டங்களின் பிரிவுகளை மட்டும் கணக்கில் கொண்டே பல நீதிபதிகள் தீர்ப்பளிக்கின்றனர். நீதித்துறையின் சட்டப்பிரிவுகளை கறாராகப் பிடித்துக்கொண்டு வழங்கப்படும் தீர்ப்பில், பல நேரங்களில் மனிதாபிமானம் செத்துப்போகிறது; சமூக நீதி பிறழ்ந்துவிடுகிறது. ஆனால், நீதிபதி இரத்தினவேல் பாண்டியனின் தீர்ப்புகளில் அந்தப் பிழை என்றும் நேர்ந்ததில்லை. அதுதான் அவருடைய சிறப்பு.எந்தப் பதவியில் இருந்தாலும், எளிமையாகவும், பகட்டில்லாமலும் வாழ்ந்து காட்டியவர். சட்டங்கள் ஒருபுறத்தில் இருந்தாலும் மனிதநேயம், நாட்டின் நலன் என்பதையெல்லாம் மனதில் கொண்டுதான் இவருடைய தீர்ப்புகள் இருக்கும்" என குறிப்பிடுகிறார்.[30]
தலைத் தாமிரபரணி
தொகுமுத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் "திருப்புடைமருதூரில் வாழும் சரித்திரம்" என்ற தலைப்பில் நெல்லை முரசில் கட்டுரை எழுதினார். அந்த கட்டுரை பிற்காலத்தில் தலைத்தாமிரபரணி என்ற பெயரில் காவ்யா பதிப்பகம் மூலமாக நூலாக வெளியிட்டது. அந்த நூல் அனைத்து நூலகங்களிலும் உள்ளது. அதில் நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் பற்றி கூறும் போது, " குள்ள மாமுனி அகத்தியர் பொதிகை மலையில் தோன்றிச் செய்த அற்புதங்கள் பலப்பல. அவர் பல பெயர்களில் பல ரூபங்களில் வாழ்ந்து வருவதாக ஐதீகம் கூறுகிறது. இங்கே இரத்தினவேல் பாண்டியனின் உருவத்தையும், தீர்க்கமான முடிவையும் பார்க்கும் போது வாழும் அகத்தியராகவே அவரைப் பார்த்தோம். அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிடுகிறார்.[31]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Former Supreme Court judge Ratnavel Pandian dead". The Statesman. 28-02-2018. பார்க்கப்பட்ட நாள் 3-04-2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|date=
(help); Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Chief Justice & Judges | SUPREME COURT OF INDIA". main.sci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-01.
- ↑ "Former Former Supreme Court judge Justice S Ratnavel Pandian no more". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Former SC judge Ratnavel Pandian passes away at 89". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "பொது அறிவு கேள்வி". Archived from the original on 2021-05-19.
- ↑ "Justice S.Rathnavel Pandian: A tribute". Lawyersclubindia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ "ரத்தினவேல் பாண்டியன்: ஓயாத சமூக நீதிப் பயணி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-02-01.
- ↑ "தி இந்து நாளிதழ்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "JUSTICE S.RATNAVEL PANDIAN THE CHAMPION OF THE UNDERPRIVILEGED – Modernrationalist". modernrationalist.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
- ↑ "ஏ. ஐ. ஆர்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "பொம்மை எதிர் யூனியன்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "சமயம் செய்திகள்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Ratnavel Pandian Committee Recommendations not in Effect even after 18 Years - Thanthi TV - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-02.
- ↑ "Live Chennai: V.R. Krishna Iyer award,V.R. Krishna Iyer award,Former Supreme Court Judge Justice S. Rathinavel Pandian". www.livechennai.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
- ↑ Congress, The Library of. "LC Linked Data Service: Authorities and Vocabularies (Library of Congress)". id.loc.gov. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "தலைத்தாமிரபரணியில் விருது பற்றிய குறிப்பு".
- ↑ "இறுதி ஊர்வலம்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "இறுதி ஊர்வலம்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "மறைவுச் செய்தி".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "தினதந்தி". Archived from the original on 2021-05-19.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "செய்திகள்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "ஜீகே டுடே".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Sc judge Rathnavel Pandian portrait function participants - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-02.
- ↑ "பிள்ளைகள்".
- ↑ Akhilan, Mayura (2018-02-28). "சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பை வழங்கியவர் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் - வைகோ". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-02.
- ↑ "மாநில சுயாட்சிக்கு அரண் அமைத்தவர் : ரத்தினவேல் பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல்". Indian Express Tamil. 2018-02-28. பார்க்கப்பட்ட நாள் 2021-02-02.
- ↑ ஸ்டாலின், ஜோ. "மனிதநேய நீதியரசர்!". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-02-02.
- ↑ "தலைத் தாமிரபரணி /முத்தாலங்குறிச்சி காமராசு. Talait Tāmiraparaṇi /Muttālaṅkur̲icci Kāmarācu. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2021-04-04.
- Hon'ble Mr. Justice S. R. Pandian, இந்திய உச்சநீதிமன்றம்