எசு. முரளிதர்
எசு. முரளிதர் (S. Muralidhar) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். தற்போது, ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள இவர் மதராசு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.[1] இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.[2] இவர் மே 2006-ல்[3] குடியரசுத் தலைவரால் தில்லி உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் மார்ச் 2020 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி ஏற்றார்.[4]
மாண்புமிகு நீதியரசர் எசு. முரளிதர் | |
---|---|
தலைமை நீதிபதி ஒரிசா உயர் நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சனவரி 2021 | |
பரிந்துரைப்பு | எஸ். ஏ. பாப்டே |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
முன்னையவர் | முகமது இரபீக் |
நீதிபதி பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 6 மார்ச் 2020 – 3 சனவரி 2021 | |
பரிந்துரைப்பு | எஸ். ஏ. பாப்டே |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி தில்லி உயர் நீதிமன்றம் | |
பதவியில் 29 மே 2006 – 5 மார்ச் 2020 | |
பரிந்துரைப்பு | யோகெசு குமார் சாபார்வால் |
நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 ஆகத்து 1961 |
துணைவர் | உஷா இராமநாதன் |
முன்னாள் கல்லூரி | சென்னைப் பல்கலைக்கழகம் நாக்பூர் பல்கலைக்கழகம் தில்லிப் பல்கலைக்கழகம் |
கல்வி
தொகுஎசு. முரளிதர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் தனது இளம் அறிவியல் (வேதியியல்) படிப்பை 1981-ல் முடித்து சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் படிப்பில் முதல் தரவரிசையைப் பெற்றார். இலட்சுமிநரசா ரெட்டி, எல் சி மில்லர் பதக்கங்கள் மற்றும் கார்மைக்கேல் மற்றும் இன்னெசு பரிசு, 1984 ஆகியவற்றைப் பெற்றார். சட்ட மாணவராக, இவர் மெட்ராசு சட்டக் கல்லூரியின் இரு உறுப்பினர் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். அகில இந்திய மாதிரி நீதிமன்ற போட்டியில் வென்றார். இதன் காரணமாக 1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாசிங்டன் டி. சி. யில் நடைபெற்ற 25வது பிலிப் சி. செசப் சர்வதேச சட்ட மாதிரி நீதிமன்றப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் முதுநிலை சட்டப்படிப்பினை 1990-ல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டத்தில் நிபுணத்துவத்துடன் முதல் தரவரிசையில் முடித்தார். பிப்ரவரி 2003-ல் "இந்தியாவில் சட்ட உதவி மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு" என்ற தலைப்பில் முனைவர் பட்டஆராய்ச்சினை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்திய நிறுவனச் செயலர்களின் நிறுவனத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.[5]
ஆரம்ப கால பணி
தொகுஎசு.முரளிதர் 1984 செப்டம்பரில் சென்னையில் சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். இவர் திசம்பர் [5] 1985-ல் நிறுமச் செயலர் தகுதியைப் பெற்றார். சூலை 1987-ல், இவர் தனது தில்லி நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியினைத் தொடர்ந்தார். இங்கு இவர் ஆரம்பத்தில் ஒரு இளைய வழக்கறிஞராக அப்போதைய கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் ஜி. இராமசாமியிடம் பணியாற்றினார். பின்னர் இவர் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞரானார்.[6] முரளிதர் முதன்மையாக இந்திய உச்ச நீதிமன்றத்திலும் தில்லி உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றினார். இவர் 1990-ல் வழக்குரைஞர்-வழக்குரைஞர் தேர்வில் தகுதியில் முதல் இடத்தைப் பெற்றார். முகேசு கோசுவாமி நினைவுப் பரிசு பெற்றார். உச்சநீதிமன்றம் சட்ட சேவைகள் குழுவின் வழக்கறிஞராகவும் செயல்பட்ட இவர் பின்னர் இரண்டு முறை அதன் உறுப்பினராக இருந்தார். போபால் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வழக்குகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படும் நபர்கள் சிறையில் அடைக்கப்பட்ட பரிதாபகரமான சூழ்நிலைகள்[7] மற்றும் நர்மதா அணைகளால் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான வழக்குகள் இவரது சார்பு வேலைகளில் அடங்கும்.[8] பல பொது நல வழக்குகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தால் உதவி வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். முரளிதர், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆலோசகராகவும், திசம்பர் 2002 முதல் மே 2006 வரை சட்ட ஆணையத்தின் [3] பகுதி நேர உறுப்பினராகவும் இருந்தார்.
நீதிபதி பதவி
தொகுநீதிபதி முரளிதர் 29 மே 2006 [9] தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக ஏறக்குறைய 14 ஆண்டுகள் பணியாற்றிய போது, பல்வேறு பிரச்சனைகளைக் கையாள்வதில் பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை இவர் வழங்கியுள்ளார்.[6][10][11][12] பின்னர் இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக மாற்றப்பட்டார். இங்கு இவர் மார்ச் 6 2020 அன்று பதவியேற்றார்.[4] ஒரு நீதிபதியாக இவர் "மை லார்ட்" மற்றும் "யுவர் லார்ட்ஷிப்" ஆகிய வார்த்தைப் பிரகடனங்களை நீதிமன்றத்தில் பயன்படுத்துவதை நிராகரித்தார். மேலும் இவரது நீதிமன்றத்தின் தினசரி காரணப்பட்டியலில் ஒரு குறிப்பைச் சேர்க்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.[13]
"பணிமாற்றம்" தொடர்பான சர்ச்சை
தொகு12 பிப்ரவரி 2020 அன்று நடைபெற்ற அப்போதைய இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றக் கொலீஜியம், நீதிபதி முனைவர் எசு. முரளிதரை தில்லி உயர் நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரைத்தது.[14] இந்திய உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியத்தின் பரிந்துரையை இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். மேலும் 26 பிப்ரவரி 2020 அன்று இரவு இடமாற்றம் அறிவிக்கப்பட்டது.[15][16][17] நீதிபதி எசு. முரளிதரின் அவசரமான "நள்ளிரவில்" இடமாற்றம் நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களால் பரவலாகப் பேசப்பட்டது. 2020 தில்லி கலவரத்தின் போது காவல்துறையின் செயலற்ற தன்மை குறித்து நீதிபதி முரளிதர் தலைமையிலான தில்லி உயர் நீதிமன்ற இருக்கை தெரிவித்த கருத்துக்களின் விளைவாகக் கருதப்பட்டது.[18][19][20][21][22][23][24] மார்ச் 5, 2020 அன்று தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய முழு நீதிமன்றக் குறிப்பின் போது நீதிபதி முரளிதர், நிகழ்வுகளின் தொடர் நிகழ்வுகள் குறித்த விவரங்களை அளித்து இடமாற்றம் குறித்தும் பேசினார்.[5][25][26]
ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு
தொகு15 திசம்பர் 2020 அன்று, இந்தியத் தலைமை நீதிபதி எஸ். ஏ.பாப்டே தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம், நீதிபதி முரளிதரை ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு அளித்துப் பரிந்துரை செய்தது.[27] இவர் 31 திசம்பர் 2020 அன்று ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் மற்றும் 4 சனவரி 2021 அன்று பதவியேற்றார்.
குறிப்பிடத்தக்க வழக்குகள்
தொகுநடுவர் மன்றம்
தொகு- இண்டர்டோல் ஐ. சீ. எசு. செகோன்சு ஓ & எம். கோ. பி. லிமிடெட் வி. இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (2013)
- செல்வி. லான்கோ-ராணி (ஜே.வி) வி. இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (2016)[28]
- குல்ஷன் காத்ரி வி. கூகிள் நிறுவனம் (2017)[29]
நிர்வாக சட்டம்
தொகு- பிரகாசு அட்லாண்டா ஜே.வி. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (2010)[30]
- சிசிஐ வி. கிராசிம் தொழிற்சாலை (2019)[31]
அறிவுசார் சொத்துரிமை சட்டம்
தொகு- பனியன் ட்ரீ ஹோல்டிங் (பி) லிமிடெட் v. ஏ. முரளி கிருஷ்ணா ரெட்டி (2009) [32]
- எஃப். ஹாப்மேன்-எல்ஏ ரோச் லிமிடெட் வி. சிப்லா லிமிடெட் (2009) [33]
- பேயர் கழகம் வி. இந்திய ஒன்றியம் (2010) [34]
- நிப்பான் ஸ்டீல் நிறுவனம் வி. இந்திய ஒன்றியம் (2011) [35]
சேவை மற்றும் தொழிலாளர் சட்டம்
தொகு- கட்டுமான பிரிவினர் சங்கம் எதிர். இந்திய ஒன்றியம் (2007) [36]
- கழிவுநீர் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளுக்கான தேசிய பிரச்சாரம் (2008)[37]
- தேவ் சர்மா வி. இந்திய ஒன்றியம் (2019) [38]
- சம்பு சர்மா வி. டெல்லி உயர் நீதிமன்றம் (2019) [39]
வரிவிதிப்பு
தொகு- சிஐடி வி. காபூல் சாவ்லா (2015) [40]
- கார்ல்ஸ்பெர்க் இந்தியா பிரைவேட். லிமிடெட் வி. இந்திய ஒன்றியம் (2016) [41]
- சிஐடி வி. ஜனதா கட்சி (2016) [42]
- சிஐடி வி. இந்திய தேசிய காங்கிரசு (2016) [43]
- டிஐடி (விலக்குகள்) v. விஸ்வ இந்து பரிஷத் (2017) [44]
- ஆன் குவெஸ்ட் மெர்ச்சண்டைசிங் இந்தியா பிரைவேட். லிமிடெட் வி. ஜிஎன்சிடிடீ (2017) [45]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமுரளிதர் சட்ட ஆய்வாளரான உஷா இராமநாதனை மணந்தார். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முரளிதர் நியமனம் - தமிழ்நாடு". IBC Tamilnadu. பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
- ↑ "Hon'ble Chief Justice and Judges of the High Court of Punjab and Haryana". highcourtchd.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ 3.0 3.1 "Former Judges". www.delhihighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ 4.0 4.1 Bench, Bar &. "Justice S Muralidhar takes oath as judge of Punjab and Haryana High Court". Bar and Bench - Indian Legal news. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ 5.0 5.1 5.2 "Video of Full Court Reference of Justice Muralidhar at High Court of Delhi". www.delhihighcourt.nic.in. Archived from the original on 2020-03-25. பார்க்கப்பட்ட நாள் 2020-03-25.
- ↑ 6.0 6.1 6.2 "Justice league". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-01. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ "Sheela Barse vs Union Bank Of India And Ors on 5 September, 1995". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Narmada Bachao Andolan vs Union Of India And Ors on 15 March, 2005". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-05.
- ↑ "Delhi High Court Bar protests transfer of Justice Muralidhar". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-03-11.
- ↑ "As His Transfer Sparks A Political Row, A Look at Past Verdicts of Justice Muralidhar". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ NETWORK, LIVELAW NEWS (2020-03-06). "Landmark Judgments Of Justice Muralidhar In Delhi High Court". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ "Attempts To Transfer Justice Muralidhar? Here's a List of Cases Decided by Him Which May Tell You Why". NewsCentral24x7 (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-01-29. Archived from the original on 2020-11-08. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ "Justice Muralidhar asks lawyers not to address him as 'my lord' or 'your lordship'". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-15. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Resolution by the Collegium of the Supreme Court of India recommending Transfer of Justice Dr. S. Muralidhar" (PDF). Supreme Court of India. February 19, 2020. Archived from the original (PDF) on 28 February 2020. பார்க்கப்பட்ட நாள் March 10, 2020.
- ↑ "Government of India Notification of the Transfer of Justice Dr. S. Muralidhar" (PDF). Department of Justice, Government of India. Archived from the original (PDF) on March 10, 2020. பார்க்கப்பட்ட நாள் March 10, 2020.
- ↑ NETWORK, LIVELAW NEWS (2020-02-26). "[Breaking] Centre Notifies Transfer Of Justice Muralidhar From Delhi HC To P&H HC [Read Notification]". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ Bench, Bar &. "Breaking: Centre notifies transfer of Justice S Muralidhar to Punjab & Haryana High Court". Bar and Bench - Indian Legal news. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ Dhavan, Senior Advocate Rajeev (2020-03-02). "Midnight Transfer of Justice Muralidhar". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Sharma, Japnam Bindra,Prathma (2020-02-28). "Row erupts over transfer of judge hours after he pulls up Delhi cops". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "High Court Judge Who Criticised Cops Over Delhi Violence Transferred". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ "Explained | The curious case of Justice Muralidhar's transfer from Delhi High Court". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ Acharyulu, Prof Madabhushi Sridhar (2020-03-05). "SC Violates It's [sic] Own Resolution In Transfer Of Justice Muralidhar". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ Lokur, Chetan. "Justice Muralidhar transfer: Lack of reasons for a transfer order in trying times". Bar and Bench - Indian Legal news. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ "Justice Muralidhar on the Distinction Between Neutrality and Impartiality". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ Speech of Justice Muralidhar at his Full Court Farewell Reference by the High Court of Delhi. (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2020-05-04
- ↑ "Amid row over CM Jagan's charges, SC moots transfer of AP Chief Justice" (in en-IN). The Hindu. 2020-12-15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/amid-row-over-cm-jagans-charges-sc-moots-transfer-of-ap-chief-justice/article33339784.ece.
- ↑ "M/S. Lanco-Rani (Jv) vs National Highways Authority Of ... on 6 December, 2016". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Gulshan Khatri vs Google Inc. on 20 March, 2017". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Prakash Atlanta Jv & Ors. vs National Highways Authority Of ... on 5 February, 2010". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Competition Commission Of India vs M/S. Grasim Industries Ltd. on 12 September, 2019". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Banyan Tree Holding (P) Limited vs A. Murali Krishna Reddy & Anr. on 23 November, 2009". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "F. Hoffmann-La Roche Ltd. & Anr. vs Cipla Ltd. on 24 April, 2009". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Bayer Corporation & Anr vs Union Of India & Ors on 9 February, 2010". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Nippon Steel Corporation vs Union Of India on 8 February, 2011". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Builders Association Of India And ... vs Union Of India (Uoi) And Ors. Etc. ... on 28 February, 2007". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ Bhoi, Sarita. "Dignity and Rights of the Sewerage and Allied Workers" (PDF). HRLN. pp. 48–106. Archived from the original (PDF) on 4 May 2020. பார்க்கப்பட்ட நாள் 4 May 2020.
- ↑ "Dev Sharma vs Indo Tibetan Border Police & Anr. on 31 January, 2019". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Shambhu Sharma And Ors. vs High Court Of Delhi Thr. Its ... on 29 November, 2019". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Commissioner Of Income Tax ... vs Kabul Chawla on 28 August, 2015". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Carlsberg India Private Limited vs Union Of India & Ors. on 5 August, 2016". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Commissioner Of Income Tax, ... vs Janata Party on 23 March, 2016". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "Commissioner of Income Tax Delhi-XI vs Indian National Congress (I) / All India Congress Committee". பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
- ↑ "Director Of Income Tax ... vs Vishwa Hindu Parishad on 8 May, 2017". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.
- ↑ "On Quest Merchandising India Pvt. ... vs Government Of Nct Of Delhi & Ors. on 26 October, 2017". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-04.