ஏட்ரியன் ஓல்சுடொக்

ஏட்ரியன் ஓல்சுடொக் அல்லது ஏட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (Adrian Holdstock, பிறப்பு: ஏப்ரல் 27, 1970) ஒரு தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட நடுவர் மற்றும் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இப்போது பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவராக பணியாற்றுகிறார். [1] இவர் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் முதல் தரப் போட்டிகளுக்கான நடுவர் குழுவின் அங்கத்தவராக உள்ளார். [2]

ஏட்ரியன் ஓல்சுடொக்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஏட்ரியன் தோமசு ஓல்சுடொக்
பிறப்பு27 ஏப்ரல் 1970 (1970-04-27) (அகவை 54)
கேப் டவுன், தென்னாபிரிக்கா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகம்
பங்குநடுவர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1989/90–1992/93மேற்கு மாகாணம்
1993/94–1995/96போலண்ட்
நடுவராக
தேர்வு நடுவராக7 (2020–2023)
ஒநாப நடுவராக48 (2013–2023)
இ20ப நடுவராக50 (2011–2023)
பெஒநாப நடுவராக17 (2009–2018)
பெஇ20 நடுவராக7 (2009–2019)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முத பஅ
ஆட்டங்கள் 16 7
ஓட்டங்கள் 573 104
மட்டையாட்ட சராசரி 20.46 14.85
100கள்/50கள் 0/3 0/1
அதியுயர் ஓட்டம் 81 66
வீசிய பந்துகள் 1210 258
வீழ்த்தல்கள் 19 6
பந்துவீச்சு சராசரி 33.78 34.83
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/51 3/54
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 2/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 11 சூலை 2023

தொழில்

தொகு

ஓல்சுடொக் 1989 மற்றும் 1993 க்கு இடையில் மேற்கு மாகாணத்திற்காக விளையாடினார். அதற்கு முன்பு போலண்ட் அணிக்காக 1993 மற்றும் 1995 இல் விளையாடினார் [3] 2006 இல் பட்டியல் அ துடுப்பாட்ட நடுவராக அறிமுகமான இவர் 2007 இல் முதல் தரத் துடுப்பாட்ட நடுவராக அறிமுகமானார் [4] [5]

2011 இல், ஓல்சுடொக் பன்னாட்டு இருபது20 போட்டி நடுவராக அறிமுகமானார். [6] அவர் 2013 இல் மூன்று பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் நடுவராக இருந்தார் [7] சனவரி 2020 இல், தென்னாப்பிரிக்காவில் 2020 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பை போட்டிக்கான பதினாறு நடுவர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார். [8]

26 டிசம்பர் 2020 அன்று, தென்னாப்பிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் தேர்வுப் போட்டியில், ஓல்சுடொக் தேர்வுப் போட்டி நடுவராக அறிமுகமானார். [9]

2021 ஐசிசி ஆண்கள் இ20 உலகக் கோப்பைக்கான போட்டி நடுவர்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [10] மார்ச் 2023 இல், அலீம் தார் குழுவிலிருந்து வெளியேறியதை அடுத்து, பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர்கள் குழுவில் ஓல்சுடொக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றும் அசான் ராசாவும் சேர்க்கப்பட்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "CSA promotes seven umpires to Reserve List Panel". Cricket South Africa. Archived from the original on 11 July 2018. பார்க்கப்பட்ட நாள் 11 July 2018.
  2. "Agenbag and Fritz break new ground for SA Cricket". Cricket South Africa. Archived from the original on 28 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 28 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Adrian Holdstock". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.
  4. "Adrian Holdstock as Umpire in First-Class Matches". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.
  5. "Adrian Holdstock as Umpire in List A Matches". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.
  6. "Holdstock makes debut". Sports24. http://www.sport24.co.za/Cricket/Holdstock-makes-debut-20111006. 
  7. "Adrian Holdstock". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014.
  8. "Match officials named for ICC U19 Cricket World Cup". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
  9. "South Africa vs Sri Lanka Test series: Marais Erasmus and Adrian Holdstock appointed as on-field umpires". Inside Sport. Archived from the original on 23 டிசம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 26 December 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "20-strong contingent of match officials announced for ICC Men's T20 World Cup 2021". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏட்ரியன்_ஓல்சுடொக்&oldid=4109318" இலிருந்து மீள்விக்கப்பட்டது