ஐஎல் இ20
சர்வதேச லீக் இ20 அல்லது ஐஎல் இ20 (International League T20 , ILT20) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடப்படும் 20 நிறைவுகள் கொண்ட துடுப்பாட்டப் போட்டியாகும். [1] [2] போட்டியின் முதல் பதிப்பு முதலில் சனவரி மற்றும் பிப்ரவரி 2022இல் நடத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் சனவரி 2023 முதல் ஆறு அணிகள் போட்டியிடும் வகையில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. [3] சூன் 2022இல், முறையாக சர்வதேச லீக் T20 என பெயரிடப்பட்டு, முதல் பருவத்திற்கான தேதிகளும் உறுதி செய்யப்பட்டன. [4]
நாடு(கள்) | ஐக்கிய அரபு அமீரகம் |
---|---|
நிர்வாகி(கள்) | அமீரக துடுப்பாட்ட வாரியம் |
வடிவம் | 20 நிறைவுகள் போட்டி |
முதல் பதிப்பு | 2023 |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறைப் போட்டி, பிளே ஆஃப் |
மொத்த அணிகள் | 6 |
2022–23 ஐஎல் இ20 | |
வலைத்தளம் | www |
கண்ணோட்டம்
தொகுஇந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்ற நைட் ரைடர்ஸ் குழு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜி. எம். ஆர் குழுமம் மற்றும் லான்சர் கேபிடல்ஸ் மற்றும் அதானி குழுமம் போன்றவர்கள் அணிகளின் உரிமையாளர்களாக அறிவிக்கப்பட்டனர். [5] [6] கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளர்கள் தங்கள் தற்போதைய ஐபிஎல் அணிகளில் இருந்து நான்கு வீரர்களை ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.[7]
அணிகள்
தொகுபின்வரும் அணிகளும் அவற்றின் உரிமையாளர்களும் போட்டியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டனர்: [8]
குழு | நகரம் | உரிமையாளர் | பயிற்சியாளர் | தலைவர் | |
---|---|---|---|---|---|
அபுதாபி நைட் ரைடர்சு | அபுதாபி, அபுதாபி எமிரேட் | நைட் ரைடர்ஸ் குழு | அபிசேக் நாயர் | சுனில் நரைன் | |
டெசர்ட் வைப்பர்சு | இல்லை | லான்சர் கேபிடல் எல்எல்சி | ஜேம்ஸ் போஸ்டர் | கொலின் மன்ரோ | |
துபாய் கேப்பிடல்சு | துபாய், துபாய் அபுதாபி | ஜிஎம்ஆர் குழுமம் | பில் சிம்மன்ஸ் | உரோவ்மேன் பவல் | |
கல்ஃப்
ஜயண்ட்சு |
இல்லை | அதானி ஸ்போர்ட்ஸ்லைன் | ஆண்டி பிளவர் | ஜேம்ஸ் வின்ஸ் | |
எம்ஐ எமிரேட்சு | அபுதாபி, அபுதாபி எமிரேட் | ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் பிசினஸ் வென்ச்சர்ஸ் லிமிடெட் | ஷேன் பாண்ட் | கீரன் பொல்லார்ட் | |
ஷார்ஜா வாரியர்சு | ஷார்ஜா, ஷார்ஜா எமிரேட் | காப்ரி குளோபல் கேபிடல் லிமிடெட் | பால் ஃபார்ப்ரேஸ் | மொயின் அலி |
விதிகள்
தொகுஒவ்வொரு அணியிலும் உள்ள பதினொரு வீரர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம், [9] இது மற்ற பெரிய இருபது20களின் வெளிநாட்டு வீரர்களின் வரம்பைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். [10] ஒவ்வொரு அணியிலும் இரண்டு வீரர்கள் முறையே ஐக்கிய அரபு அமீரக வீரராகவும், இணை உறுப்பினர் நாட்டிலிருந்து ஒரு வீரராகவும் இருக்க வேண்டும். [9]
சான்றுகள்
தொகு- ↑ "KKR, Mumbai Indians set to become franchise owners in UAE-based Premier League T20". ESPN Cricinfo.
- ↑ "UAE'S PREMIER LEAGUE T20 SETS DATES AND UNVEILS TOURNAMENT LOGO". Emirates Cricket Board.
- ↑ "Flush With Cash And Influential Backing, The UAE's New T20 League Is Set To Shake Up Cricket Globally". Forbes.
- ↑ "UAE T20 league announces early-2023 window, set for clash of dates with BBL, BPL and CSA league". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
- ↑ "Shah Rukh Khan Leads Acquisition of Abu Dhabi Knight Riders Cricket Franchise". Variety. 12 May 2022.
- ↑ "Manchester United co-chairman Avram Glazer buys franchise in new UAE T20 cricket league". Sky Sports.
- ↑ "IPL franchises to have first right to sign their players in UAE T20 league" (in en). Cricbuzz. https://www.cricbuzz.com/cricket-news/122468/ipl-franchises-to-have-first-right-to-sign-their-players-in-uae-t20-league-cricbuzzcom.
- ↑ "Knight Riders Group acquires Abu Dhabi franchise in upcoming UAE T20 League". ESPNCricinfo.
- ↑ 9.0 9.1 "UAE T20 league sets $450,000 contract for top players". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-07-28.
- ↑ Laghate, Gaurav. "ZEE signs exclusive media rights deal for Emirates Cricket Board’s UAE T20 League". The Economic Times இம் மூலத்தில் இருந்து 2022-05-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220524100512/https://economictimes.indiatimes.com/industry/media/entertainment/zee-signs-exclusive-media-rights-deal-for-emirates-cricket-boards-uae-t20-league/articleshow/91764513.cms?from=mdr.