ஐகேட்
ஐகேட் (முன்னாளில் ஐகேட் பட்னி, ஐகேட் க்ளோபல் சொலியூசன்ஸ் மற்றும் பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்சு) (முபச: 532517 , நாசுடாக்: PTI, நியாபச: PTI) என்பது தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமாகும்.[2] இந்நிறுவனத்தில் சுமார் 18,000 நபர்கள் பணிபுரிகின்றனர். ஐகேட் பட்னி அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய - பசிப்பிக் பகுதிகள் உட்பட 23 நாடுகளில் தன்னுடைய பணிமனையை நிறுவியுள்ளது மட்டுமில்லாமல், இந்தியாவில் முக்கியமான எட்டு நகரங்களில் தன்னுடைய கிளைகளை கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு பார்ட்டியூன் 1000 நிறுவனங்களில் உள்ள சுமார் 360 நிறுவனங்கள் வாடிக்கையாளராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.[3]
வகை | பொது நிறுவனம் முபச: 532517 |
---|---|
நிறுவுகை | 10 பிப்ரவரி 1945 |
தலைமையகம் | பெங்களூரு, இந்தியா |
முதன்மை நபர்கள் | பனீஷ் மூர்த்தி (தலமையதிகாரி) மற்றும் (முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | தகவல் தொழில்நுட்ப சேவை |
சேவைகள் | தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணிப்பொறியியல் சேவை |
வருமானம் | ₹3,164 கோடி (US$400 மில்லியன்) (2010) |
நிகர வருமானம் | ₹586 கோடி (US$73 மில்லியன்) (2010) |
பணியாளர் | 27,000 (2012) |
தாய் நிறுவனம் | ஐகேட் கார்ப்பரேசன்[1][2] |
இணையத்தளம் | www.igate.com |
வரலாறு
தொகுநரேந்திர பட்னி என்பவரால் தொடங்கப்பெற்ற பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்சு என்னும் இந்நிறுவனம், இந்தியாவின் முதல் கணினி சார்ந்த சேவை வழங்கும் நிறுவனமாகும். நரேந்திர பட்னியின் தாரக மந்திரம்,
“ | The best way to do the business is where the labor is cheaper | ” |
அதாவது,
“ | எங்கு உழைப்பாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு கிடைப்பார்களோ அங்கு தொழில் செய்வதே சிறந்த தேர்வு | ” |
என்ற கொள்கையை உடையவர், இந்தியாவின் முதல் கணினி சார்ந்த சேவையைத் துவங்கி, வெற்றிபெற்று அது உண்மையென்றும் உணர வைத்தார்.
ஆரம்பம்
தொகு1972-ம் ஆண்டு இந்நிறுவனம் "டேட்டா கன்வர்ஷன் இன்க்"("Data Conversion Inc") என்ற பெயரில் தொடங்கப்பட்டது. நரேந்திர பட்னி தன் மனைவி பூனத்துடன் இணைந்து, தங்களுடைய வீட்டிலிருந்து ஆரம்பித்தனர்.[4]
ஐகேட்டின் ஆக்கிரமிப்பு
தொகுஐகேட் நிறுவனமானது, பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு ஜனவரி 10-ம் நாள் கைப்பற்றியது. அதன்பிறகு சுமார் 25,000 ஊழியர்களுடைய பெரிய நிறுவனமாக ஐகேட் உருவானது.
கிளைகள்
தொகு
ஆசிய - பசிபிக் பகுதிகள்
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா
ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் |
பட்னி அறிவுப் பூங்கா, ஐரோலி, மும்பை சுமார் 50 ஏக்கர்கள் (200,000 m2) நிலப்பரப்பில் அமைந்துள்ள இவ்விடம், நவி மும்பையின் அடையாளமாகத் திகழ்கிறது. இதில் ஒரே சமயத்தில் சுமார் 17,000 நபர்கள் வரை அமர முடியும்.[5]பசுமை ஐடி - பிபிஓ, நொய்டா பசுமைப் புரட்சியை வலியுறுத்தும் வகையில்,[6] ரூபாய். 175 கோடிகள் செலவில் 5 ஏக்கர்கள் (20,000 m2) பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தில், அனைத்து வகையிலும் இயற்கை சார்ந்து, ஆற்றல், நீர் உள்ளிட்டவைகளை பாதுகாக்கும் வகையில் சுமார் 3500 நபர்கள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.[7] |
விருதுகளும் அங்கீகாரமும்
தொகு- 2008-ம் ஆண்டு ஐ. ஏ. ஓ. பி. உலகளாவிய சிறந்த 100 நூறு அவுட்சோர்சிங் என்னும் அயலாக்கம் செய்யும் நிறுவனங்களில் ஒன்று.[8]
- காப்பீட்டு நிறுவனங்களுக்கு வணிகச் செயலாக்க அயலாக்கச் சேவை வழங்கும் சிறந்த 15 நிறுவனங்களில் ஒன்று.[9]
குறிப்புகள்
தொகு- ↑ http://www.rediff.com/business/slide-show/slide-show-1-tech-igate-seals-patni-deal-for-usd-1-22-billion/20110110.htm
- ↑ 2.0 2.1 "iGATE Corporation | Investor Relations", iGATE.com, 2011, webpage: IGinv பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "About Us". Patni. 2009-03-30. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16.
- ↑ Posted by Surender (2006-10-10). "IIPM: Patni Computer Systems". Blog-sonu.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16.
- ↑ "Patni software park to seat 17,000". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16.
- ↑ Greener Living. "GREEN SEZ IN NOIDA | Greener Living". Greenerlivingonline.com. Archived from the original on 2011-07-11. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16.
- ↑ "Patni Inaugurates Green IT-BPO Centre in Noida : Global Growth Investors". General Atlantic. Archived from the original on 2010-12-15. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16.
- ↑ "Infosys, TCS among best global outsourcing service providers – Technology". livemint.com. 2008-02-22. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 2012-04-28.
வெளி இணைப்புகள்
தொகு- உத்தியோகப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-04-09 at the வந்தவழி இயந்திரம்